வியாழன், 17 மே, 2012

நாலும் தெரிந்த பித்தன்!! (கவிதை)
ஏனிந்த ஏக்கம்?
நானெடுத்த சென்மத்தில்
நல்லதெல்லாம்
போனதெங்கே?

ஏனிந்த கலக்கம்?
கலிகாலத்தில்
பொய்யும் புரட்டும்
போக்கத்தத் தன்மையும்
பித்தலாட்டமும்
புதியதாக
முளைக்கவில்லையே!

உண்மைக்கு அரிச்சந்திரனையும்
உறுதிக்கு பகத் சிங்கையும்
நேர்மைக்கு நல்லவர்
யாரென்றும் ஏன்
தேடித்தேடி
அலைய வேண்டும்?

தேடக்கிடைக்காது
என்று தெரிந்த பின்பும்
தேடுகின்ற நான்
நாலும் தெரிந்த
பித்தனோ !! 
(மீள் பதிப்பு)

16 கருத்துகள்:

 1. பெயரில்லா17 மே, 2012 அன்று 2:17 PM

  ''..ஏனிந்த கலக்கம்?
  கலிகாலத்தில்
  பொய்யும் புரட்டும்
  போக்கத்தத் தன்மையும்
  பித்தலாட்டமும்
  புதியதாக
  முளைக்கவில்லையே...''
  அது தானே! ...பிறகு ஏனிந்தக் குளப்பம்!...நல்ல சிந்தனை..நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க வேதா.இலங்காதிலகம்.

   நீக்கு
 2. தேடக்கிடைக்காது
  என்று தெரிந்த பின்பும்
  தேடுகின்ற நான்
  நாலும் தெரிந்த
  பித்தனோ //


  மனம் கவர்ந்த அருமையான படைப்பு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
   மிக்க நன்றிங்க ரமணி ஐயா.

   நீக்கு
 3. கவிதை வெளிப்படுத்தும் ஆதங்கம் அற்புதம் என்றாலும் அதை மீறிய எண்ணமொன்று என்னில்.

  தேடும் அவசியமில்லாமலேயே தினப்படி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் எத்தனையோ நல்லவர்களை அவர்களிருக்கும் இடத்தின் பொருட்டோ, தம்மை வெளிக்காட்டா தன்மையின் பொருட்டோ, கண்டுகொள்ளாமலேயே கடக்கிறோம். கண்டுணர்ந்தால் நமக்குள்ளும் காணக்கிடைப்பார்கள் நேர்மையாளர்களும், நல்லியல்பாளர்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதமஞ்சரி அக்கா... உங்கள் கருத்தை நான் ஏற்று கொள்கிறேன்.
   நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை!!

   ஆனால்... நம்மையே நாம் எடுத்துக்கொள்வோம்...

   நாம் ஒவ்வொருத்தருமே தன் மனத்திற்குள் நாம்தான் நல்லவர் என்றும் நேர்மையானவர் என்றும் எண்ணி வாழ்கிறோம் தான்.
   நமக்கு நல்லதாகப் பட்டது மற்றவருக்கு கெட்டதாகப் படுகிறது என்பதை நாம் அறிய முற்படுவதில்லை.

   அப்படி அறிய முற்பட்டாலும் நாம் மற்றவர் கண்களுக்குப் பித்தனாகத் தான் தெரிவோம். அதைத்தான் எழுதினேன்.

   உங்கள் கருத்திற்கு நான் முரண்படவில்லை.
   நன்றிங்க கீதமஞ்சரி அக்கா.

   நீக்கு
 4. கவிதை அருமை! நாலும் தெரிந்த பித்தன்தான். எங்கெங்கோ தேடினவன் தனக்குள்ளே தேடாமல் போனானே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிரஞ்சனா....

   எல்லாவற்றையும் காணும் நம் கண்களாலேயே நம் கண்களைக் காண முடியாது இல்லையா...? அந்த கருத்து தான்.

   (முக்கியமாக... நானே கெட்டவன்.. இதை யாருக்கும் சொல்லிடாதே... இது ரகசியம்)

   நீக்கு
 5. Hello... இப்பதான் கவனிச்சேன். இதப்பாருடான்னு சலிக்சுக்கறது பொதுப்படையானது. அதுக்காக சந்தடி சாக்குல என்னை அக்காவாக்கிட்டீங்களே... பிச்சு! பிச்சு!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரிசரி... கோவிச்சிக்காதீங்க...

   நீங்கள் ஸார்ன்னு சொன்னதற்கும் நான் அக்கான்னு சொன்னதற்கும் சரிக்குச் சமமாகிவிட்டது.
   இனிமேல் நீங்கள் என்னைப் போடா வாடான்னு அன்பா எழுதினால் தான் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.

   நன்றிங்க நிரஞ்சனா.

   நீக்கு
 6. முதலில் எமக்குள் தேடுவோம்.மற்றவர்களிடமும் இருக்கும் கண்டுபிடிப்போம்.வெளிப்படுத்துவோம்.மனதின் ஆதங்கம் வரிகளில்.அருமை அருணா !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் அழகிய கருத்திற்கும் மிக்க நன்றிங்க ஷேமா அக்கா.

   நீக்கு
 7. நம்மக்குள்ளே தேடுவோமே வரிகளில் வலியைக் காண்கிறேன் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் ஆறுதலுக்கும் மிக்க நன்றிங்க சசிகலா.

   நீக்கு
 8. என்ர பெயரையே ஷேமா எண்டு மாத்தியாச்சோ அருணா.சிரிப்புத்தான்....சரி சரி !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மன்னித்துவிடுங்கள் தோழி.

   நான் வேண்டுமென்று செய்யவில்லை. நீங்கள் இன்று சொல்லாமல் இருந்திருந்தால் அதே தப்பைத் தான் செய்திருப்பேன். தவற்றைச் சுட்டிக் காட்டியதற்கு மிக்க நன்றிங்க.

   இந்தத் தவற்றைச் செய்து உங்களைக் கவலைக்கு உள்ளாக்கியதால் இனிமேல் “என் இனிய தோழி ஹேமா” என்றே எழுதுகிறேன். ஓ.கே ங்களா?

   நீக்கு