திங்கள், 7 மே, 2012

ஒருவர் உண்டோ...?





கல்லுக்குள் இருக்கின்ற சிலையைச் சிற்பி
    கற்பனையால் கண்டுநன்றாய் வடிப்பான்! செம்மைச்
சொல்லுக்குள் இருக்கின்ற பொருளைக் கற்றோன்
    சுவைதமிழும் சொக்கப்..பா படைப்பான்! உண்மை
இல்லுக்குள் இருக்கின்ற துயரை அன்பன்
    இல்லாமல் ஓட்டிடவே வைப்பான்! பெண்ணின்
உள்ளுக்குள் இருக்கின்ற உணர்வைக் கண்டே
    உலகினிலே உரைத்திடுவார் ஒருவர் உண்டோ!!

15 கருத்துகள்:

  1. அது
    மட்டும் கேட்காதிங்க
    ரெம்ப கஷ்டம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில கேள்விகளுக்கு பதிலே இல்லையா...?
      அல்லது சொல்ல முடியாதா... என்பதே தெரிவதில்லை என்று நினைக்கிறேன்.
      மிக்க நன்றிங்க செய்தாலி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. அழகான எதிர்பார்ப்பு வரிகள் - சீனி

      மிக்க நன்றிங்க சீனி.

      நீக்கு
  3. பெண்ணின் உணர்வைச் சரிவரப் புரிந்துகொண்டிருந்தால் எத்தனை குடும்பங்களில் பிரச்சனைகள் குறைவாயிருக்கும் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்குக் கூட தெரியாதா...?
      என்னங்க ஷேமா... நிச்சயம் நீங்கள் பதில் சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

      தங்களின் வரவிற்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. நல்லகேள்வி! இல்லை கன்பதே பதில்!

    சா இராமாநுசம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்லகேள்வி! இல்லை என்பதே பதில்! - புலவர் ஐயா.

      அப்படியென்றால் பெண்களைப் பேதைகள் என்று சொல்வதும் தவறு தானே புலவர் ஐயா...

      தங்களின் வரவிற்கு மிக்க நன்றிங்க.

      நீக்கு
  5. வெகு அரிதாய் சில விதிவிலக்குகள் உண்டு. அவர்களும்கூட 100 சதம் புரிந்து கொண்டிருப்பார்களா என்பது சந்தேகம்தான்! அழகான வரிகளில் அருமையான கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்.. ஆமாம்... அது கூட தெரிவதில்லை தாங்க கணேஷ் அவர்களே.

      தங்களின் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  6. தோழர்களே தோழியர்களே அனைவருக்கும் வணக்கம்.

    “ஒருவர் உண்டோ“ என்ற பாடலின் முதல் வரியை கல்லுக்குள் என்றெழுத கள்ளுக்குள் என்று தவறாக எழுதி விட்டிருக்கிறேன். அதை பல பேர் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மிக்க நன்றி.
    இனி இப்படியான தவறுகள் வராதபடி கவனித்து எழுதுகிறேன். மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. சுவைதவழும் சொக்கப்பா! அருமையப்பா! இன்னுமின்னும் அழகாய் கவிப்பா நீ பாடப்பா!

    கள்ளை இப்போதேனும் கல்லாக்கிவிடுங்களேன். சிலை செய்ய வசதியாய் இருக்கும். :)

    பதிலளிநீக்கு
  8. ஆமாம்... ஆமாம்... நான் மறந்தே விட்டேன்.
    இதோ செய்கிறேன் கிதமஞ்சரி அக்கா..

    உங்களுடைய அழகான பின்னோட்டத்திற்கு மிக்க நன்றிங்க.

    பதிலளிநீக்கு
  9. மிகச் சரி
    அந்த ரகசியம் அறிதல்
    பிரம்ம பிரயத்தன்மே
    மனம் கவர்ந்த அருமையான கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் ரமணி ஐயா!

      தங்களின் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு