.
சுடர்ந்திடும்
தீயே! சூரிய னுருவே!
தடங்களை நீக்கியே
தாங்கிடும் வழியே!
இருளின் நீட்சி
இடத்தை மாற்றிடும்!
மருட்சி நீக்கி
மலர்மன மாக்கும்!
வாழ்வைக் காக்க
வளருந் தீயே!
ஆழ்கடல் நடுவில்
தீவி னழகே!
மங்கலஞ் சேர்ந்து
வழிபடு மொளியே!
தங்கமு மோடும்
தகையொளி முன்னே!
தினமும் காணத்
திறக்கும் ஞானம்!
மனமது மெதுவாய்
வலம்வர வைத்திடும்!
கானே! தேனே
வாழி! பொன்பொது
தானே! வாகையே
தகைவகை வானே!
தாது பொன்பொழி
வானே! தேனே!
காத்திடுந்
தீயே! காமாட்சி தாயே!
.
பாவலர் அருணா
செல்வம்
18.11.2021

அருமை...
பதிலளிநீக்கு