புதன், 21 நவம்பர், 2012

நான் என்ன தவறு செய்தேன்..? (நிமிடக்கதை)




    “நான் என்ன தவறு செய்தேன்...? ஏன் இன்று மானேஜர் நம்மைக் கண்டும் காணாதது போல் இருக்கிறார்..? என்னையும் அறியாமல் ஏதாவது அவர் மனம் புண்படியாக தவறுதலாகச் செய்துவிட்டேனா...?“ கேசவன் இன்று முமுவதும் இதே யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
    அவன் அப்படி யோசிப்பதும் தவரில்லை தான். இன்று காலையில் எப்பொழுதும் போல் சரியாக அலுவலகத்திற்கு வந்து விட்டான். மானேஜர் சுந்தர் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் எப்பொழுதும் போல் எழுந்து வணக்கம் சொன்னான். அவர் எப்பொழுதுமே இவனுக்குத் திருப்பி வணக்கம் சொல்லிவிட்டுத்தான் செல்வார்.
    ஏதாவது போன் பேசிக்கொண்டிருந்தாலும் கேசவன் சொன்ன வணக்கத்திற்குப் பதிலாகப் புன்சிரிப்புடன் கையை ஆட்டிவிட்டாவது செல்வார்.
    அவர் அப்படிச் செய்வதும் இவனுக்குப் பெருந்தன்மையாக இருக்கும். தவிர கேசவன் தன் வேலைகளைச் சரிவரக் காலத்துடன் செய்து முடித்து விடுவதால் சுந்தருக்கு கேசவன் மேல் நல்ல மதிப்பு இருப்பதை மானேஜரே ஒருமுறை கேசவனிடம் சொல்லியிருந்ததால் கேசவன் மெலும் தன் கடைமைகளைச் சரிவர செய்து கொண்டுதான் இருந்தான். நல்ல அபிப்பிராயங்கள் மேலும் ஒருவரை வளரச்செய்வது தானே!
    அது அலுவலகத்தில் இருப்பவர்களுக்குக் கொஞ்சம் பிடிக்காது. ஆனால் கேசவன் அதைச் சட்டைச்செய்யாமல் தன் வழியில் பயணித்தான்.
   ஆனால் இன்று சுந்தரிடம் மாற்றம்!
    காலையில் அலுவலகத்தில் நுழைந்த போது கேசவன் எழுந்து நின்று வணங்கிய போதும் சுந்தர் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகு சில சந்தர்ப்பங்களில் நேராகப் பார்க்க நேர்ந்த பொழுது கேசவன் புன்னகைத்த போதும் கண்டு கொள்ளவில்லை. அவசரமாக வேலையிலிருந்துச் வெளியே செல்வதாக இருந்தால் மறக்காமல் கேசவனைக் கூப்பிட்டு காரணத்தைச் சொல்லிவிட்டுச் செல்லும் மானேஜர் இன்று எதுவும் சொல்லாமல் சென்றது கேசவனைச் சங்கடத்தில் ஆழ்த்தியது.
    அதை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதற்கு காரணம் தெரிந்தாக வேண்டும். இன்று போய் அவர் வீட்டிலாவது சந்தித்துக் காரணத்தைக் கேட்டுச் சரி செய்வது தான் முதல் வேலை.... என்று நினைத்துக் கொண்டான். வேலை நேரம் முடிந்த்தும் அவரசரமாக அவன் வெளியேறும் பொழுது ப்யூன் வர்ணன் எதிரில் வந்து தயங்கி “சார்... என்று கூப்பிட்டான்.
    “என்ன வர்ணா...?“ கேசவன் கேட்டான்.
     “நான் என்ன தவறு சார் செஞ்சேன்...? எம்மேல என்ன கோவம்  இருந்தாலும் என்கிட்ட நேரா சொல்லிடுங்க சார்... முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சொன்னான்.
    “என்ன வர்ணா சொல்லுற...? உன் மேல எனக்கெந்த கொவமும் இல்லையே... யோசனையுடன் கேசவன் சொன்னான்.
    “பின்ன எதுக்கு சார் காலையிலிருந்து நான் பலமுறை உங்களுக்கு வணக்கம் சொல்லியும் கண்டுகாம இருந்தீங்க...? எனக்கு ரொம்ப கவலையா போச்சி சார். அது தான் எதுவா இருந்தாலும் உங்கக் கிட்ட நேரா கேட்டுடலாம்ன்னு காத்துக்கினு இருந்தேன் சார்..“ என்றான்.
    அப்பொழுது தான் கேசவனுக்குத் தான் செய்த தவறு புரிந்தது.
    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை... அதைப் புரிந்து கொள்ளாமல் நாம் வேறு மாதிரியாக நினைப்பதும் தவறு தான் என்பதைக் கேசவன் புரிந்து சிரித்தான்.

அருணா செல்வம்.

27 கருத்துகள்:

  1. நம்மைப்போலத் தான் மற்றவர்களும் என்பதை உணரவைத்த கதை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  2. அருமை! நல்ல முடிவு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  3. கதை ரொம்ப நல்ல இருக்கு. கருத்தை அழகா சொல்லிட்டீங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  4. உண்மைதான் எல்லோரும் எல்லா நேரமும் எம் செயல்லுக்குத் துணை போக வேண்டும் என்று எண்ணுவதும் தவறுதான்...
    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சிட்டுக்குருவி. (?)

      நீக்கு

  5. கதை நன்று அருணா! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. புரிந்து கொண்டால் தான் பிரச்சனையே இல்லையே-(முதலில் நம்மை...)

    tm4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிரட்சனை வந்தப்பிறகு தான் நாம் புரிந்து
      கொள்ளவே முயற்சிக்கிறோம்.
      இது தான் மனித இயல்பு என்று நினைக்கிறேன் தனபாலன் ஐயா.
      நன்றி.

      நீக்கு
  7. இதேமாதிரியான நிகழ்வை நித்தமும் சந்திக்கிறோம்.நேற்று முகப்புத்தகத்தில் இரு பெண்கள் சண்டையிடும் காணொளியொன்றொ நண்பர் ஒருவர் தர அதன் முகப்பை மட்டும் பார்த்துவிட்டு ஏதோ வித்தியாசமன காணொளி தருகிறாரென்று நினைத்துத் நிறையவே கடகடவென்று திட்டிவிட்டேன்.பிறகு பொறுமையாகக் காத்திருந்த அவர் விளக்கம் சொல்லி அதைப் பார்த்துவிட்டு என்னை நானே நொந்தபடி வெட்கப்பட்டும்கொண்டேன்.மன்னிப்பும் கேட்டேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      நாமென்ன நீதிபதிகளா...?
      பொறுமையாக அனைத்தையும் ஆராய்ந்து
      கடைசியாக நல்லவர்களுக்குத் தண்டனைத் தர...?

      பெண்கள் சண்டையிடுவதை வேறு காணொளியில் தருகிறார்கள்...!!ம்ம்ம்...
      சட்டசபைச் சண்டைபோல் பெண்களும் தொடங்கி விட்டார்களா...?

      இப்பொழுதெல்லாம் ஒரு பிரட்சனையைப் பேசி
      ஆராய்வதையும் சண்டை என்று தான் கொள்கிறார்கள்.
      தகவலுக்கு நன்றி ஹேமா.

      நீக்கு

  8. வணக்கம்!

    நான்என்ன தவறுகளைச் செய்தேன் என்று
    நன்காய்ந்து தெளிந்திட்டால் துன்பம் இல்லை!
    தேன்என்ன? சுளையென்ன? விஞ்சி நிற்கும்!
    திருநாளாய் மனமினிக்கும் பேசும் சொற்கள்!
    வான்என்ன? கடலென்ன? சுற்றம் நட்பு
    வாழையடி வாழையென வளா்ந்தே ஓங்கும்!
    மீன்என்ன நீந்துவது? கவிஞன் யானும்
    மின்றமிழில் நீந்துகிறேன் கதைப டித்தே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

      “மீன்என்ன நீந்துவது? கவிஞன் யானும்
      மின்றமிழில் நீந்துகிறேன் கதைப டித்தே!“

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. நன்றி.

    வலைஞன்... உங்கள் தளத்தில் பலவாறு முயற்சித்தும் என் இடுகைகளை இணைக்க முடியவில்லை.
    ஏன்...????

    பதிலளிநீக்கு
  10. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. அன்றாட வாழ்வில் தவறான புரிதலால் ஏற்படும் பிரச்சினையை அணுக வேறொரு கோணமும் உண்டென்பதை கதை தெளிவுபடுத்துகிறது. நன்றி அருணா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் ஆழ்ந்து தெளிந்து அளித்தப்
      பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  12. அற்புதம் .. நெகிழ்வான முடிவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி அரசன்.

      நீக்கு
  13. நல்ல கருத்துடன் கூடிய கதை
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மி்க்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  15. கருத்தை பதிய வைத்த விதம் சிறப்பு..வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வரவிற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி மதுமதி ஐயா.

      நீக்கு