சனி, 22 செப்டம்பர், 2012

முடியுமா...? (கவிதை)




 மடையைத் திறந்திட ஓடிடும் வெள்ளமா?
    மனிதரின் உள்ளங்கள்!
தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
    கற்பனை இன்பங்கள்!
கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
    கண்டதும் விலைகேட்க!
விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
    விரும்பிடும் எண்ணங்கள்!


அருணா செல்வம்.

26 கருத்துகள்:

  1. கேள்வியும் பதிலும் சரியாகவே உள்ளது.
    நேர நெருக்கடியால் இங்கு வரப் பிந்தி விட்டது.
    நல்வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோவைக்கவி... நீங்கள் நேரம் கிடைக்கும் பொழுது சும்மா வந்து பார்த்துக் கருத்திடுங்கள்.

      நன்றி கோவைக்கவி.

      நீக்கு
  2. வழக்கம் போல் அருமை!வார்த்தைகளும் இனிமை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  3. கடையில் கிடைப்பதா காதலும் கவிதையும்?
    கண்டதும் விலைகேட்க!
    விடையில் மனத்தினைத் தேடிட முடியுமா?
    விரும்பிடும் எண்ணங்கள்!//

    நிதர்சன வரிகள் .. வாழ்த்துக்கள் மேடம் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன் சார்.

      நீக்கு
  4. தடையை விதித்ததும் தடுத்திட முடியுமா?
    கற்பனை இன்பங்கள்!

    i like it

    பதிலளிநீக்கு
  5. விலைக்குப் போகும் மனங்களும் இருக்கத்தான் செய்கிறது.பணம்,புகழுக்காக காதல் மாறுகிறதே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் இனிய தோழி ஹேமா...

      மாறுகிறது தான்! அதைத்தான் மாற்ற முடியுமா என்று கேட்டுள்ளேன்.

      நன்றி ஹேமா.

      நீக்கு
    2. கஸ்டம்.....உணரும் சக்தியும் விலையாகிப்போனவர்கள் அவர்கள் !

      நீக்கு
    3. நீங்கள் சொல்வது உண்மை தான் ஹேமா.
      நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. முடியாததை ஒரே வார்த்தையில் ஒத்துக்கொண்டதற்கு
      மிக்க நன்றி முரளிதரன் ஐயா.

      நீக்கு
  7. காதலும் கவிதையும் கடையில் கிடைத்திருந்தால் இன்று என் வீடு முழுக்க அவைகளால் நிறப்பியிருப்பேனே...

    சேர்த்திருக்கும் புகைப்படம் கூட ரொம்ப அழகும் வித்தியாசமும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காதலை(லி)க் கூட வீடு நிறைய நிரப்புவீர்களா சிட்டுக்குருவி...!

      படம் இணையத்தில் எடுத்தது. (சுட்டது)

      நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு
  8. காதல் பத்தி நோ கமெண்ட்ஸ்...பட்....தலைகீழா நின்னு தண்ணிகுடிச்சாலும் கவிதை எழுதும் திறன் மட்டும் எல்லோருக்கும் வந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை! !!

    பதிலளிநீக்கு
  9. மழையே இல்லை வெள்ளம் இல்லை
    மனமே இல்லை எண்ணம் எங்கே ?
    தலைசிறந்த கவிதரும் மனம் கண்டோம்
    விலை இல்லா மாணிக்க கவிதை கேட்டோம்
    தத்தி தத்தி தத்துவங்கள் கேள்வியாலே
    பித்துபிடித்த பேதை ஆனோம்
    கவிதந்த கண்ணியவா
    புவியில் தொடரட்டும் கவிசேவை
    அன்புடன் கருப்பசாமி

    பதிலளிநீக்கு
  10. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு