புதன், 25 மார்ச், 2020

கால் ஓடும் வெண்பா!




பெண்ணிழில் காலோடப் பெய்யும் அமுதாகும்!
விண்ணெழில் காலோட விண்சோலை! – மண்ணில்வாழ்
தன்னினம் காலோடத் தாக்குவோர் செய்செயலாம்!
இன்மணம்கா லோட எனது!
.
பெண்ணெழில் – மாழை காலோட மழை.
விண்ணெழில் – வானம் காலோட வனம்.
தன்னினம் – சாதி காலோடச் சதி.
இன்மணம் – வாசம் காலோட வசம்.
.
பாவலர் அருணா செல்வம்
25.03.2020

(கால் கூடுதல் என்பது “பானை“ எனுஞ்சொல் கால் ஓடப் “பானை“  எனவாகும் என்பதே. காலுற்ற சொல்லும் காலில்லாச் சொல்லும் அதன் மாற்றுப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைத்துப் பாட வேண்டும்)

1 கருத்து: