அடையும் பொருளும் வேறுபட மொழிதல்!
அடை
என்பது பொருளைச் சிறப்பிக்கும் அடைமொழி ஆகும்.
பாடலில் ஒரு பொருளைச் சிறப்பிக்க வந்த அடைமொழிகளையும், அவற்றால் சிறப்பிக்கப்படும் பொருளையும் வேறாகக் கூறி, அவற்றால் தன் உள்ளத்தின் கருத்தைச் சொல்வது “அடையும் பொருளும் வேறுபட மொழிதல்“ எனப்படும்.
உ. ம்
சிறகில்லாப் புள்லெல்லாம் சேர்ந்தந்தக் கூட்டில்
இறவா திருக்க இரையைத் – திறத்துடன்
கொண்டுவந்து ஊட்டும்! குவிந்திருக்கும் தாய்மையைப்
பெண்பறவை கொண்டிருக்கும் பேறு!
பொருள் – சிறகில்லாத
சின்னச்சின்னக்
குஞ்சுகள் கூட்டில் சேர்ந்திருக்க, அக்குஞ்சுகள் இறவாமல் இருக்க தாய் பறவை உணவைக் கொண்டுவந்து ஊட்டும். இப்படி செய்வது உள்ளத்தில் குவிந்திருக்கும் தாய்மை
குணத்தைக் கொண்டிருக்கும் பெண்பறவைகளுக்கு உரிய தகுதி.
பாடலில் வீட்டில் குழந்தைகள் இருக்கின்றனர். வெளியில் சென்ற பெண்ணானவள் எங்கிருந்தாலும் வந்து அக்குழந்தைகளின் பசியைப் போக்குவாள் என்பது சொல்லக்கருதிய பொருளாகும். ஆனால்
அதனை மறைத்து அதற்கு ஒத்ததாகக் கூறப்பட்ட பொருள் பறவையும் அதன் குஞ்சுகளும். கூட்டில் வாழும் தன் குஞ்சுகளுக்கு இரையைத் தாய் பறவை கொண்டுவந்து கொடுக்கும் என்பது. இவ்வாறு தான்கருதிய பொருளை மறைத்து அதனை வெளிப்படுத்த வேறொன்றினைச் சொன்னதால் இது “ஒட்டணி“ ஆகியது.
தான் சொல்லக்கருதிய பொருள் அன்னையாக இருக்க அதற்கு நிகராக பறவையைச் சொல்லி அதற்கு ஏற்றார் போல் அடைமொழிகளைச் சொல்லியுள்ளதால் இது “அடையும் பொருளும் அயல்பட மொழிதல்“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.06.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக