சனி, 8 டிசம்பர், 2018

தொழில்தன்மை அணி (தொழிற்றன்மை)உயர்திணையோ அஃறிணையோ…. அதனதன் செய்யும் தொழிலின் தன்மையை மாறாமல் பாடுவது தொழில் தன்மை அணி எனப்படும்.

.ம்

தானுண்ட மீதி தனதிடத்தில் சேர்த்திருக்கும்!
வானுண்ட நீரோ வடியுமுன்! – தானுரையும்
வாழ்விடத்தை நேராய் வரிசையாய் சென்றடையும்!
ஏழ்மை எறும்புக்கோ ஏது?

பொருள் வானிலிருந்து மாழைநீர் கொட்டும் முன்பு, தான் உண்டது போக மீதியைத் தன் இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்து வைத்திடும். தான் வாழும் இடத்திற்கு வரிசையாய்ச் சென்றடையும். சுறுசுறுப்பாய் உழைத்திடும் எறும்புக்கு ஏழ்மை இல்லை.
    எறும்புகள் செய்யும் தொழிலின் தன்மை மாறாமல் கூறியதால் இது தொழில்தன்மை அணி ஆகியது.

பாவலர் அருணா செல்வம்
08.12.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக