புதன், 15 ஜனவரி, 2014

பொங்கல் திருநாள் வாழ்த்துபொங்க வேண்டும்!!


தங்கத் தமிழைத் தலைசூடித்
    தழைக்கும் வாழ்வைப் பெற்றிடலாம்!
சிங்கத் தமிழர் நாமென்றே
   சிலிர்க்கும் உள்ளம் உற்றிடலாம்!
வங்கக் கடலின் வளத்தைப்போல்
   வற்றா இன்பம் ஏற்றிடலாம்!
பொங்கும் இந்த நன்னாளில்
   புதுமைப் பொங்கல் பொங்கிடலாம்!

கட்டுக் கடங்கா ஆசைகளைக்
   காலுக் கடியில் தாம்போட்டுச்
சிட்டுக் குருவி போல்நாமும்
   சிறகு விரித்துப் பறந்திடலாம்!
விட்டுக் கொடுத்து வாழ்வதைநாம்
   விரும்பி மனத்தில் ஏற்பதனால்
முட்டும் துன்பம் ஏதுமின்றி
   முத்தாய்ப் பொங்கல் பொங்கிடலாம்!

நல்லோர் மொழியை நம்மொழியில்
   நன்றே அழகாய் மாற்றிடலாம்!
பல்லோர் கருத்தைப் பண்புடனே
   பசுமைத் தமிழில் அறிந்திடலாம்!
வல்லோர் என்போர் வாழ்வுயர்ந்து
   வளரும் வழியைக் காட்டிடுவார்!
இல்லார் என்போர் யாருமின்றி
   இனிய பொங்கல் பொங்கிடலாம்!

திறமை பொங்க வேண்டும்!நல்
   தெளிவு பொங்க வேண்டும்!சீர்
பெருமை பொங்க வேண்டும்!நற்
   பேரும் பொங்க வேண்டும்!உள்
கருமை களைய வேண்டும்!பல்
   கலைகள் வளர வேண்டும்!நற்
பொறுமை காக்க வேண்டும்! தைப்
   பொங்க வேண்டும் புகழுடனே!தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள் 

இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் 

 

அருணா செல்வம். 

11 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான கருத்துள்ள பொங்கும் வரிகள் அருமை... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

”தளிர் சுரேஷ்” சொன்னது…

சிறப்பான கவிதை! இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

அம்பாளடியாள் சொன்னது…

உங்களுக்கும் எங்களது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல்
திரு நாள் வாழ்த்துக்கள் தோழி அருணா !

Yaathoramani.blogspot.com சொன்னது…

அற்புதமான கவிதை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

tha.ma 4

unmaiyanavan சொன்னது…

மிக அழகான படம். அருமையான ஒரு பொங்கல் கவிதை.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

இளமதி சொன்னது…

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும்
இனித்திடும் தமிழர் புத்தாண்டுப் பொங்கல் வாழ்த்துக்கள்!!!

கவிதை மிகச் சிறப்பு! வாழ்த்துக்கள் தோழி!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பொங்கல் கவிதை சூப்பரான இனிப்பான பொங்கல்...!

வாழ்த்துக்கள்...

பால கணேஷ் சொன்னது…

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அருணா! பொங்கலின் தித்திப்பு உங்களின் கவிதை வரிகளிலும் உணர்ந்தேன்! நன்று!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சிறப்பான பொங்கல் வாழ்த்து....

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.