வெள்ளி, 17 ஜனவரி, 2014

இது யாருடையது?



   
  டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் ஒரு சமயம் பாட்னாவிலிருந்து தனது ஊருக்குச் செல்வதற்காக விசைப் படகில் ஏறி கங்கை நதியில் பயணம் செய்தார்.
   படகோட்டி படகைச் செலுத்திக் கொண்டிருந்தார்.
   இராஜேந்திரப் பிரசாத்திற்கு எதிரே அமர்ந்திருந்த ஓர் இளைஞன் ஓயாமல் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான்.
   அவன் வெளியிட்ட புகையின் நெடி இராஜேந்திரப் பிரசாத்தை மிகவும் வருத்தியது.
   அதைப் பொறுக்க முடியாத அவர் அந்த இளைஞனைப் பார்த்து, “தம்பி... அந்த சிகரெட் உன்னுடையது தானே...?“ என்று கேட்டார்.
   “ஆமாம்“ என்றான் அந்த இளைஞன்.
   “அப்படியென்றால் இந்த புகை யாருடையது...?“
   இளைஞன் சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தான்.
   “சிகரெட் உன்னுடையது என்றால் இந்தப் புகையும் உன்னுடையதாகத் தானே இருக்க வேண்டும். அதை ஏன் வெளியே ஊதி என் போன்றவர்களைக் கஷ்டப்படுத்துகிறாய்?“ என்று அமைதியாக கேட்டார் இராஜேந்திர பிரசாத்.
   அவரது பேச்சிலிருந்த நியாயத்தை உணர்ந்த அந்த இளைஞன், “ஐயா... என்னை மன்னித்து விடுங்கள்“ என்று கூறிவிட்டு தன்னிடமிருந்த சிகரெட் பாக்கெட்டையும் தீப்பெட்டியையும் நதிக்குள் வீசி எறிந்தான்.
   இராஜேந்திர பிரசாத் மகிழ்ச்சியுடன் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.

படித்ததில் பிடித்தது.
அருணா செல்வம்.

17 கருத்துகள்:

  1. நல்லது...

    இப்ப இருப்பவர்களிடம் இதை சொன்னால் உன் வேலையை பார் என்கிறார்கள்....

    பொதுஇடம் என்ற பயம் யாருக்கும் இல்லை

    பதிலளிநீக்கு
  2. நல்ல சிந்தனை, பேச்சுத்திறமை. பெரியவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. மதிப்பு கொடுத்து மாறி விட்டது மகிழ்ச்சி...!

    பதிலளிநீக்கு
  4. உண்மையை நியாயமாகச் சொல்லி உணர்த்தியிருக்கிறார்...

    பதிலளிநீக்கு
  5. தவறை இப்படியும் இடித்து காட்டலாம் போலிருக்கே !
    த .ம 6

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    நல்ல விழிப்புணர்வுக்கதை... அருமை வாழ்த்துக்கள்
    என்பக்கம் கவிதையாக(நெஞ்சைத் தழுவினாய் பின்பு என் கண்ணீரைத் தழுவினாய்)வாருங்கள்..வாருங்கள் அன்புடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. சத்யமான வார்த்தைகள். எனக்கு சிகரெட் பிடிப்பவர்களை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. அவர்கள் விடும் புகையை நாமும் சுவாசிக்கிறோமே என்ற ஆத்திரம் தான் வரும். என்ன! அவர் கேட்டுவிட்டார், என்னால் கேட்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
  8. புகைப்பிடிப்பவர்களை இப்படித்தான் மடக்க வேண்டும் போல! அருமையான பகிர்வு! நன்றி!

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை...ஆனால் என்ன செய்தென்ன மாறுவதில்லையே...

    பதிலளிநீக்கு
  10. சிகரட் பிடிப்பவர்களுக்கும் மற்றவர்கள் புகைப்பது பிடிப்பதில்லை...!

    நியாயத்தை உணர்ந்தவன் மனுஷன் இல்லையா ?

    பதிலளிநீக்கு
  11. [[[[சிகரெட் உன்னுடையது என்றால் இந்தப் புகையும் உன்னுடையதாகத் தானே இருக்க வேண்டும். அதை ஏன் வெளியே ஊதி என் போன்றவர்களைக் கஷ்டப்படுத்துகிறாய்?“ என்று அமைதியாக கேட்டார் இராஜேந்திர பிரசாத்.]]
    +8
    அருமை!

    பதிலளிநீக்கு
  12. சிறப்பான செய்தி..... பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  13. அருமை! எனக்கும் பிடித்தது!

    பதிலளிநீக்கு
  14. குடிப்பவனை விட புகைப்பவனே மோசமானவன். மற்றவரையும் கொல்லப் பார்க்கின்றான்.

    பதிலளிநீக்கு
  15. மிகவும் அருமை...! மேன்மக்கள் மேன்மக்களே...!

    பதிலளிநீக்கு