புதன், 24 ஜூலை, 2013

சிரிக்கவும் - சிந்திக்கவும்!!



                   

எலியை அகற்றும் வழி!

    முல்லா நஸ்ருத்தீன் துருக்கி நாட்டில் பிறந்த அறிஞர்.
    வேடிக்கையாகக் கதைகள் சொல்வதில் உலகப்புகழ் பெற்றவர். இவரது கதைகள் சிரிக்க மட்டுமல்ல, சிந்திக்கவும் வைக்கும்.
    அவரது குள்ளமான தோற்றத்தைக் கண்டு பலரும் அவரைக் கிண்டல் செய்வர். ஆனால் முல்லா நஸ்ருத்தீன் தனது அறிவைக் கொண்டு அவர்களின் மூக்கை உடைத்து விடுவார்.
    அவரின் கதையிலிருந்து....
  
    ஒரு நாள்...
    ஒரு மனிதன் அவரைக் கிண்டல் செய்யும் எண்ணத்தோடு அவரிடம் வந்தான்.
    “வணக்கம் முல்லா அவர்களே!“
    “வணக்கம்! வணக்கம்!“
    “எனக்கொரு பிரட்சனை முல்லா அவர்களே!“
    “என்ன பிரட்சனை?“
    “நேற்று இரவு நான் உறங்கிக் கொண்டிருந்தேன்!“
    “ம்“
    “அப்பொழுது திறந்திருந்த என் வாயின் வழியே ஓர் எலி நுழைந்து விட்டது!“
    “அடடா...“
    “எலி வயிற்றுக்குள் போய் விட்டது.“
    “ஐயோ... அப்புறம் என்ன ஆனது?“
    “அது தான் பிரட்சனை முல்லா அவர்களே. அந்த எலியை அகற்றுவதற்கு வழி தெரியாமல் தவிக்கிறேன். அதற்கு தாங்கள் தான் ஒரு நல்ல வழி சொல்ல வேண்டும்“ என்றான்.
    அந்த மனிதன் தன்னைக் கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்த முல்லா நஸ்ருத்தீன், சற்று யோசித்துப் பிறகு சொன்னார்.
    “அப்படியா...? ஒன்றும் கவலைப்பட வேண்டாம். அன்பரே... அந்த எலியை அகற்ற ஒரு வழி இருக்கிறது.“ என்றார்.
    “என்ன வழி அது?“ அவன் சற்று ஏளனமாகக் கேட்டான்.
    “ஒரு பூனையைப் பிடித்து விழுங்கி விடு. சரியாகிவிடும்“ என்றார் முல்லா.
     இந்த பதிலை எதிர்பார்க்காத அந்த மனிதன் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.

(எப்போதோ படித்தது)
அருணா செல்வம்.

29 கருத்துகள்:

  1. சின்ன வயசுல படிச்சது. மறந்தே போச்சு! பகிர்வுக்கு நன்றி அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. வயசு ஆச்சு இல்ல அப்படிதான் மறந்து போகும்

      நீக்கு
    2. முல்லா இடத்தில் நான் இருந்தால் அவன் வாயில் எலி கொல்லி மருந்தை ஊற்றி கொஞ்சம் வெயிட் பண்ணு எலி தன்னால வந்து விடும் சொல்லி இருப்பேன். அதன் பின் நான் யாரும் என் கிட்ட வரவும் மாட்டார்கள் நான் யாரு மூக்கையும் உடைக்க வேண்டி இருக்காது

      நீக்கு
    3. தோழி... மறந்து போன சின்னச் சின்ன சந்தோஷங்களை
      நினைத்து ஞாபகப்படுத்திப் பார்த்தால் திரும்பவும் அந்த சந்தோஷ தருனங்களை எண்ணி மனம் மகிழும். அதற்காகத்தான் இந்த கதை.
      நன்றி தோழி.

      நீக்கு
    4. அவர்கள் உண்மைகள்...

      “யாரும் என் கிட்ட வரவும் மாட்டார்கள் நான் யாரு மூக்கையும் உடைக்க வேண்டி இருக்காது“

      அவ்வளவு தைரியம்.....!!!! என்ன செய்வது....? நான் எவ்வளவு முயன்றும் உங்களின் வலைப்பதிவுகளைப் படிக்க முடிவதில்லையே...
      எங்கே அருணா வந்து நம் பதிவுகளைப் படித்துப் பாராட்டி (கலாய்த்து) விடப்போகிறது என்றே அதைச் சரி செய்யாமல் வைத்திருக்கிறீர்கள் என்பது எனக்குத் தெரிஞ்சி போச்சிங்க....

      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  2. நல்ல நகைச்சுவைக் கதை. முல்லா கதைகள் சுவாரசியமாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மூங்கில் காற்று.

      நீக்கு
  3. முல்லா சொன்ன கதை நல்லாத்தான் இருக்கு.

    நான் எழுதியுள்ள நகைச்சுவைக்கதையான

    ‘எலி’ஸபத் டவர்ஸ் - படிச்சுப்பாருங்கோ.

    8 அத்யாயங்களில் எலியை ஓட விட்டுள்ளேன்.

    http://gopu1949.blogspot.in/2011/02/1-8.html

    ஒவ்வொரு பகுதிக்கும் கருத்துச்சொல்லுங்கோ.

    VGK



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...? நிச்சயம் வருகிறேன்.

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பழசை எல்லாம் மறக்கக்கூடாது....

      அதற்காகத் தான் ஞாபகப் படுத்தினேன்.
      நன்றி சங்கவி.

      நீக்கு
  6. சுவையான கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ்.

      நீக்கு
  7. அவர்கள் உண்மைகள் சொன்ன பதிலை தான் நானும் சொல்ல நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் இருவரும் முல்லாவை விட
      பயங்கர புத்திசாளிகள் ஆயிற்றே....

      நன்றி சசிகலா.

      நீக்கு

  8. வணக்கம்!

    முல்லா கதைபடித்து முக்கிச் சிரித்திட்டேன்!
    சொல்லால் சுரக்கும் சுகம்!

    தமிழ்மணம் 6

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முக்கிச் சிரித்தீரா? முத்தமிழின் இன்பமெலாம்
      சொக்கவைக்கும் நற்சுகம் தான்!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      சிரித்ததற்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  10. எப்பவோ படித்தது, என்றாலும் பிடித்ததே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  11. சுவையான முல்லா கதை.....

    மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

    த.ம. 9

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு