திங்கள், 19 நவம்பர், 2012

குட்டிச்சுவர்!! (நிமிடக்கதை)




    நேற்று இரவு பெய்த மழையில் தோட்டத்தில் இருந்த மதில் சுவர் விழுந்ததில் பாவணாவிற்கு கொஞ்சமும் வருத்தத்தை உண்டு பண்ணவில்லை.
    இவள் திருமணம் செய்து இந்த வீட்டிற்கு வந்தது முதல் தோட்டத்தில் இந்த மதில் சுவர் இருக்கிறது. இதை மதில் சுவர் என்பதை விட குட்டிச்சுவர் என்பது தான் பொருந்தும். மூன்று நான்கு அடிதான் இருக்கும். தோட்டத்திற்கு பின்புறமாக யாராவது சென்றாலும் இந்தத் தோட்டத்தைப் பார்த்துக்கொண்டே செல்லலாம். அவ்வளவு குட்டையாக இருக்கும்.
    எந்தக் காலத்தில் கட்டியதோ... அதன் மேலிருந்த சுண்ணாம்பு எல்லாம் உலுத்துப்போய்.. உள்ளிருந்த செங்கற்களும் பாதியாகக் கரைந்து... அதன் மீது ஒரு மரம் சாய்ந்து வளர்ந்து... அதனாலோ என்னவோ அந்தச் சுவரும் ஒரு பக்கமாகச் சாய்ந்து... பார்க்கவே பரிதாபமாக இருக்கும்.
    திருமணம் முடித்து வந்தக் கையோடே மாமியார் “அதனருகில் நீ போகாதே“ என்று எச்சரித்து இருக்கிறார். அது எந்த நேரத்தில் சாயுமோ.. என்ற பயம் தான். பாவணாவும் தோட்டத்தில் மற்ற இடத்திற்கெல்லாம் சென்றாலும் அந்தக் குட்டிச்சுவர் அருகில் செல்ல அவளுக்கும் பயம் தான்.
    எப்பொழுது விழுமோ.... என்ற பயம் கொடுத்துக்கொண்டே இருந்த அந்தச் சுவரும் நேற்று விழுந்துவிட்டது. அதை பாவணாவும் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.
   சொந்தக் காரர் வீட்டுத் துக்க நிகழ்ச்சிக்குச் சென்றுத் திரும்பிய மாமியார் “இவ்வளவு சின்ன வயசுல இப்படி குடிச்சிக் குடிச்சிச் சீரழிஞ்சி செத்துப் போயிட்டானே.... இந்தத் தறுதலைக்கு எல்லாம் கல்யாணம் செஞ்சி வச்சாங்க பாரு... அவங்களைச் சொல்லனும்....“ என்று செத்துப் போனவனை நினைத்தே சொல்லி சொல்லிக் கவலைப் பட்டுக்கொண்டிருந்தாள்.
    “சரி விடுங்க அத்தை. அவன் இருந்தாலும் ஒன்னு தான். இல்லைன்னாலும் ஒன்னு தான். எந்த நேரமும் குடிச்சிட்டு வந்து அவளை ஏதாவது சொல்லி சண்டைப்போட்டு அடிச்சி கஷ்டப்படுத்தித் தானே வாழ்ந்தான். அவன் போனதும் நல்லது தான்னு நினையுங்கள்“ என்றாள் பாவணா.
    “அவனை நெனைச்சி யார்  இப்போ கவலைப்பட்டா... பாவம் அந்தப்பொண்ணு. நல்ல வாலிபமான வயசு. வேலியில்லாத பயிரா நிக்க வச்சிட்டானேனு தான் நான் கவலைப்படுறேன்..“ மாமியார் ஆதங்கத்துடன் சொன்னாள்.
    பாவணா மாமியார் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டே யோசனையுடன் தோட்டத்தைப் பார்த்தாள். இடிந்து விழுந்த சுவரினைத் தாண்டி இரண்டு எருமை மாடுகள் தோட்டத்திற்குள் புகுந்து பூச்செடிகளை மேய்ந்து கொண்டிருந்தன.


அருணா செல்வம்.   

26 கருத்துகள்:

  1. வழி பிறந்ததும் நுழைந்து விட்டது எருமைகள்/பேய இடம் தேடிக்கொண்டிருக்கும் அவை என்ன செய்யும் பாவம்/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழி பிறந்ததால் தான் விமலன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. நல்ல அருமையான கதை கோர்வை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஆயிஷா.

      நீக்கு
  4. ம்ம் நல்ல கோர்வை தாங்க.. வேலி என்பது ஆண் - இல்லா விட்டால் மாடுகள் (????) மேயும்.. அப்படியா?

    பதிலளிநீக்கு
  5. கதையில் பல அர்த்தங்கள் பொதிந்துள்ளன.

    வேலியோ தாலியோ குட்டிச்சுவரோ குடிகாரனோ
    ஏதோ ஒண்ணு பேருக்காவது தேவை தான் போலிருக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தாங்க.
      வேலியில்லாத பயிறுக்கு ஏற்படும் நிலைமை தான் துணையில்லாத பெண்ணுக்கும் ஏற்படும்.
      கதையை நன்கு புரிந்து கருத்திட்டமைக்கு
      மிக்க நன்றி கோபாலகிருட்டிணன் ஐயா.

      நீக்கு
  6. வேலியில்லாப் பயிர்....சூசகமாகச் சொன்ன விதம் அருமை !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  7. ஒரே நிமிடத்தில்
    சொல்ல வந்த கருத்தை
    செம்மையாய் சொல்லிவிட்டீர்கள்...
    அருமை...

    பதிலளிநீக்கு
  8. அற்புதமா சொல்லிட்டிங்க பா. அருமை அருமை.

    பதிலளிநீக்கு
  9. கால மாற்றம் வந்துவிட்டது அருணா. வேலியில்லாமல் பயிர் இருக்கிறதே என்பதால் விழுந்து போன குட்டிச் சுவரை எண்ணியே காலத்தைக் கடத்தத் தேவையில்லை. இருந்தாலும் உங்கள் ஒப்பீடு நன்று

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கால மாற்றம் தான் கருத்துக்களையும் மாற்றி விடுகிறது.

      புதிய சுவர் எழுப்பும் வரையிலாவது பாதுகாப்பு
      வேண்டும் இல்லையா தோழி.

      தங்களின் வருகைக்கும் பெண்மைக்கே உரிய பார்வையில் கதையை அளந்து கருத்திட்டமைக்கு நன்றி கூறுகிறேன் தோழி.

      நீக்கு
  10. அருமையாக ஒரு பக்க கதை எழுதுகிறீர்கள். இனிமேல் நீங்கள் குட்டிக் கதை ராணி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “குட்டிக் கதை ராணி“

      அருமையான பட்டம்.
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  11. அன்புடையீர்,

    வணக்கம்.

    தங்களின் வலைத்தளம் பற்றியும்
    தங்களின் ஓருசில பதிவுகள் பற்றியும் இன்று
    நம் “யுவராணி தமிழரசன்” அவர்களால்
    வலைச்சரத்தில் பெரிதும் பாராட்டிப்
    பேசப்பட்டு கெளரவிக்கப்பட்டுள்ளது.

    இணைப்பு இதோ:

    http://blogintamil.blogspot.in/2012/11/2.html

    இது தங்கள் தகவலுக்காக மட்டுமே.

    தங்களுக்கு என்
    மனமார்ந்த பாராட்டுக்களும்
    அன்பான வாழ்த்துகளும்.

    அன்புடன்
    வை.கோபாலகிருஷ்ணன்
    gopu1949.blogspot.in .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தகவல்களுக்கும் வாழ்த்துக்களுக்கும்
      மிக்க நன்றி ஐயா.

      வலை தளத்தைப் பார்த்துவிட்டேன்.
      மகிழ்ச்சி.
      யுவராணி தமிழரசன் அவர்களுக்கு இங்கேயும் ஒருமுறை நன்றி கூறுகிறேன்.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குட்டன் ஐயா.

      நீக்கு