வெள்ளி, 21 செப்டம்பர், 2012

ஆறு பிள்ளை பெற்றாலும்... (கவிதை)




 மலரினும் மெல்லியது - 3

ஆறு பிள்ளை பெற்றாலும்
   அடியோ உதையோ வாங்கினாலும்
நூறு வயது வாழவேண்டி
    நோன்பு இருப்பாள் அவனுக்கே!
தீரும் இளமை உணர்வெல்லாம்
   தீர்ந்த பிறகும் உடனிருப்பாள்!
மாறும் உலகில் மங்கையரின்
   மாறா மனத்தில் காமமெங்கே?

நோயின் மருந்து நோயிடமே
   நூலில் உள்ள கருத்தைப்போல்
பாயில் படுத்தே கிடந்தாலும்
   பாசம் பொழிந்து காத்திடுவாள்!
தாயின் அன்பைத் தலைவனுக்குத்
   தானே கொடுத்து மகிழ்ந்திடுவாள்!
சேயின் தவற்றை மன்னிக்கும்
   செயலில் அவளே தாயாவாள்!

கல்வி பலவும் கற்றாலும்
   கணவன் காலே கதியென்றே
எல்லை இல்லா அன்புடனே
   இருக்கும் அவளைக் கணைபோன்ற
சொல்லால் சுட்டால் அவளமனது
   சுருங்கி வாடிப் போய்விடுமே!
கல்லாய் இல்லை பெண்ணுள்ளம்
   கசங்கக் கண்ணீர் வடித்துவிடும்.

உலவும் அழகு மாந்தரெல்லாம்
   உரிமை கொண்ட ஆண்களிடம்
களவு, காதல், காமத்துடன்
   கள்ளம் இல்லாக் கற்புடனே
குலவிக் கூடிக் கொடுத்தாலும்
   கொண்ட மனமோ கள்வடியும்
மலரை விடவும் மெல்லியது
   மங்கை கொண்ட மென்மனதே!

அருணா செல்வம்.

மலரினும் மெல்லியது காமம் சிலர்அதன்
செல்வி தலைப்படு வார்.   (குறள் – 1289)

(சுவிஸ் கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை முடிவு!)

17 கருத்துகள்:

  1. அருணா குடும்பத்தலைவியைப் பற்றிய அருமையான கவிதை.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கும்மாச்சி அண்ணா.

      நீக்கு
  2. சுவிஸ்ல் கவியரங்கெல்லாம் நடக்கிறதா?நான் அதிகமாக வெளி ஆட்களோடு பழகாததால் எனக்குத் தெரியாமல் இருக்கிறது !

    கவிதை எப்பவும்போல அருமை.இதுதான் நம்மவர்களின் பாசம்,பண்பாடு.அடிச்சாலும் மிதிச்சாலும் கண் அவன் என்கிறோம்.அதுவே பலமும் பலஹீனமுமாகிப்போகிறது ஆண்களுக்கு !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவிஸ் கம்பன் கழகம் நடத்திய கவியரங்கத்தில்
      வாசித்த கவிதைதான் இது.
      நான் ஒரே ஒரு முறைதான் கலந்து கொண்டிருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் ஆழ்ந்த பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி என் இனிய தோழி ஹேமா.

      நீக்கு
  3. சிறப்பான வரிகள்... அருமையான குறளுடன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  4. கொஞ்சம் டைம் கொடுங்க கவிதையை படிக்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியவில்லையா...?
      பொறுமையா படிச்சி கருத்திடுங்கள் வசு.

      வருகைக்கு நன்றி வசு.

      நீக்கு
    2. கல் இல்லை பெண்ணுள்ளம்...கண்ணீர் வடித்துவிடும்..... இந்த இடங்கள் அருமையிலும் அருமை....தொடருங்கள்!

      நீக்கு
  5. நான் மட்டும் என்ன ...
    அருமையிலும் அருமை கவிதை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிட்டுக்குருவி... உங்களை எல்லாம் நான் பாட்டு எழுதியே கஷ்டப்படுத்துகிறேனா...

      கவலை வேண்டாம்.
      இனி பதிவுகள் இடுறேன். அப்போ பாருங்கள்... அருணா செல்வம் பாட்டே பரவாயில்லைன்னு சொல்லுவீங்க...

      நன்றி சிட்டு.

      நீக்கு
  6. பெண்ணுக்கு மனசே பூமிஎன்றான்
    பெண்ணே நீதாம் சாமிஎன்றான்
    பெண்ணே பெண்ணாக பார்த்தாலே
    பெண்ணே சிறப்படைவார் தன்னாலே
    நன்றி நண்பா நல்ல கவிக்கு
    அன்புடன் கருப்பசாமி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்ணின் சிறப்பை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.நன்றி.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு