திங்கள், 13 ஜனவரி, 2025

பொங்கல் வாழ்த்து 2025

 


பொங்கிப் பொங்கி வழிந்து
    பொலிந்தாடும் ! நன்மைத்
தங்கித் தங்கி நிறைந்து
    தழைத்தாடும் ! அன்பில்
முங்கி முங்கி மனது
    மொழிந்தாடும் ! சொந்தம்
இங்கும் அங்கும் இணைந்து
    இசைப்பாடும்  இன்பம் !
.
தின்னத் தின்ன இனிக்கும்
    தேங்கரும்பாய் ! வாழ்வு
மின்ன மின்ன ஒளிரும்
    மேனிலையாய் ! எண்ணம்
பொன்னும் பூவும் பொழியும்
    பூங்குணமாய் வேண்டும்
என்று நெஞ்சம் நிறைய
    வாழ்த்துகின்றேன் வாழ்த்து 
 
.
மரபுமாமணி
அருணா செல்வம்
14.01.2025

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக