வெள்ளி, 5 டிசம்பர், 2014

வெற்றி மேல் வெற்றி வேண்டுமா?



    
   வாழ்க்கையை மிகவும் சீரியஸாக நினைத்துச் செயல் பட்ட இளைஞன் ஒருவன், தொடர்ந்து தோல்வியையே சந்தித்து மிகவும் நொந்து போன நிலையில் ஜார்ஜ் பெர்னார்ட் ஷாவைச் சென்று சந்தித்தான்.
    “பெருந்தகையே.... வாழ்க்கையில் தொடர்ந்து நான் தோல்வியையே சந்தித்து வருகிறேன். எவ்வளவு தன்னம்பிக்கையுடன் முயன்றும் வெற்றியை என்னால் காணமுடியவில்லை. மிகவும் மனமொடிந்த நிலையில் தங்களைச் சந்திக்க வந்துள்ளேன். தாங்கள் உலகப் புகழ் பெற்றிருக்கிறீர்கள். இந்தப் புகழுக்கும் வெற்றிக்கும் தாங்கள் எப்படி எவ்வளவு உழைத்தீர்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.“ என்றான்.
    “தெரிந்து என்ன செய்யப் போகிறாய்,“ என்று கேட்டார் பெர்னார்ட் ஷா.
     “அதையே என் வாழ்க்கையிலும் கடைப்பிடித்து வெற்றி பெறலாம் என நினைக்கிறேன்.“ என்றான் இளைஞன்.
    “நல்ல முயற்சி. செய்துப்பார்.... நீ ஏன் தொடர்ந்து தோல்வியடைகிறாய்?“
    “தெரியவில்லை.“
    “தெரிந்து கொள்ளவாவது முயற்றி செய்தாயா?“
    “ஆமாம். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அடுத்தடுத்து முயற்சிப்பேன். தொடர்ந்து தோல்வியே வரும். அதனால் மனமொடிந்து போய்விடுகிறேன். அடுத்து வேறு விஷயங்களை நினைக்கிறேன். செயல்படுகிறேன். அவற்றிலும் தோல்வி தான் வந்தது.“ என்றான் கவலையாக.
    “இளைஞனே.... நானும் உன்னைப் போல இளைஞனாக இருந்தபோது பத்துக் காரியங்கள் செய்தால் அதில் ஒன்பது காரியங்களில் தோல்வியைத் தான் தழுவினேன். ஆனால் அதற்காக அந்தத் தோல்வியை நான் அப்படியே விட்டு விடவில்லை. அந்த ஒன்பது காரியங்களிலும் வெற்றியடைய என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தேன். அப்போது தான் ஒரு உண்மை பளிச்சிட்டது. தொண்ணூறு முறை முயன்றால் அந்த ஒன்பது முறை வெற்றி கிடைக்கும் என்ற உண்மை தான் அது.
    அதாவது முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொண்டேன். வெற்றி மேல் வெற்றி கிடைத்தது.“ என்று விளக்கமளித்தார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா.
    வெற்றியின் ரகசியத்தை அறிந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிச் சென்றான்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

18 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அப்படித்தான் பெர்னார்ட் ஷா சொன்னார்.

      நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  2. முயற்சிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்து
    அருமை சகோதரியாரே
    நன்றி
    தம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. முயற்சிகளின் எண்ணிக்கையை அதிகப்புத்து அற்புதமான தத்துவம்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல சிந்தனை வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சொல்லவில்லைங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கீதா மேடம்.

      நீக்கு

  5. வணக்கம்!

    முயற்சி தொடரட்டும்! முன்னேற்றம் வேண்டி
    பயிற்சி தொடரட்டும்! பாரில் - உயா்ச்சியை
    நல்கும் வழிகளை நன்றே பகன்றுள்ளீா்
    பல்கும் பயன்கள் படர்ந்து!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கவிதைக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  6. முயற்சி திருவினையாக்கும்.....

    நல்ல பதிவு. நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  7. படித்ததில் பிடித்ததைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.
    த.ம.5

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  8. பதில்கள்
    1. அப்படியா அண்ணா....?

      நானும் அதன்படி முயற்சிக்கிறேன்.

      நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  9. நல்ல சிந்தனை....வெற்றியாளர்கள் அனைவரின் அடித்தளமும் அதுதானே விடா முயற்சி!

    பதிலளிநீக்கு