வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அத்தனையும் சொல்வாளா அவள்? (கவிதை)



தென்றலை அனுப்பி இருக்கலாம்
தெரியாமல் அவளைத் தொட்டுத்
துடிக்கின்ற நெஞ்சத் தவிப்பைத்
துர்த்தாக சொல்லி இருக்கும்.

நிலவினை அனுப்பி இருக்கலாம்
நில்லாமல் அவளை அடைந்து
துர்ங்காத கண்ணின் ஏக்கத்தைத்
துர்தாக சொல்லி இருக்கும்.

மேகத்தை அனுப்பி இருக்கலாம்
மெதுவாக அவளை மோதி
துளைத்தெடுத்து வாட்டும் மோகத்தைத்
துர்தாக சொல்லி இருக்கும்!

விண்மீணை அனுப்பி இருக்கலாம்
வெளிச்சத்தால் அவளை மயக்கித்
துளிர்விட்ட காதல் கதையைத்
துர்தாக சொல்லி இருக்கும்

மயிலோ மானோ மணிபுறாவோ
குயிலோ கிளியோ பொன்வண்டோ
அன்னத்தையோ அனுப்பி இருந்தால்
அனைத்தையும் சொல்லி இருக்கும்

ஆசையாய் ஏங்கிய அத்தைமகள்!
அவளையென் காதலின் துர்தாக
அனுப்பி விட்டே ஏங்குகிறேன்.
அத்தனையும் சொல்வாளா அவளென்றே!!

14 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. “ம்ம்ம் அருமை“ - செய்தாலி

      எதுங்க அருமை செய்தாலி?
      பாடலா? என்னோட முட்டாள் தனமா?
      ம்ம்ம்.... என்ன செய்வது? அவசரம்....

      தங்களின் வருகைக்கு நன்றிங்க.

      நீக்கு
  2. அத்தை மகளை அனுப்பியது தவறுதான்
    அத்தனையும் சொல்ல வழியில்லைதான்
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதாங்க ரமணி ஐயா...

      தங்களின் வருகைக்கு மிக்க நன்றிங்க

      நீக்கு
  3. தென்றல் , நிலா , புறா , மான் , மயில் எல்லாம் சரிதான் அது என்ன முடிவில் தவறான கணிப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சசிகலா..
      அதை ஏங்க கேக்குறீங்க?
      காதல் கண்ணை மறைத்துவிட்டது
      என்று தான் சொல்லவேண்டும். ம்ம்ம்...

      தங்களின் வருகைக்கும் என் தவறான
      கணிப்கையும் சுட்டிக்காட்டியதிற்கும்
      மிக்க நன்றிங்க.

      நீக்கு
  4. tevaithan oungaloukkou.
    ennamo ponga...

    பதிலளிநீக்கு
  5. சங்கத்தில் விடுத்த தூதுகள் எல்லாம்
    அடுக்கிச் சொன்ன நீங்கள் அனுப்பியதோ..
    ஆசையில் வாடும் அத்தைமகளை..

    சரிதான்..
    இப்படியும் ஒரு புரட்சி..
    என்னைப் பொறுத்தவரையில்
    இது சரியாகும்..

    காதல் மனதிற்குதானே காதலின் வலி தெரியும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் மனத்தில் பாலை வார்த்தீர்கள்
      மகேந்திரன் அவர்களே.

      தங்களின் வருகைக்கும் காதல் வலிக்கு வார்த்தையால் மருந்திட்டதிற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு
  6. தப்பான தூது.அத்தைமகள் பாவம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்காமல் அனுப்பிவிட்டு ஏங்குகிறேன். மற்றதெல்லாம் நடந்ததை மட்டும் சொல்லும். அத்தை மகளோ இல்லாததையும் சொல்வாள்... என்ன செய்வது...?

      நான் தான் பாவம் ஷேமா அவர்களே!
      தங்களின் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும் நன்றிங்க.

      நீக்கு
  7. ஆசையாய் ஏங்கிய அத்தைமகள் என்று தெரிந்தும் அனுப்பியது தெரியாமல் அனுப்பியது போல் தெரியவில்லை. இதன்மூலம் இன்னொருத்தி மீதானத் தன் காதலைப் பூடகமாய் அவளுக்கும் தெரிவிப்பது போல் அல்லவா இருக்கிறது? (கவிதை காதல்வயப்பட்ட ஒரு ஆடவனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருப்பதாய்க் கொண்டேன். சரிதானே அருணா?)

    சொல்லோவியம் அருமை. பாராட்டுகள் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கணிப்பு தவறுங்கள் கீதமஞ்சரி அவர்களே!

      தங்களின் வருகைக்கும் அருமையான பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றிங்க.

      நீக்கு