வியாழன், 16 பிப்ரவரி, 2012

காக்காய் குணம் (கவிதை)காகம் கறுப்பாய்

இருந்தாலும்
கருத்தால் குணத்தால்
கவர்ந்துவிடும்!

கா..கா.. என்று
பக்தியுடன்
கடவுள் உணவை
அதற்களிப்பர்!

காகம் கூட
சிலநேரம்
கண்ட பொருளை
விரும்பிஉண்ணும்!

தேகம் கறுப்பாய்
இருந்தாலும்
தேய்வ குணமே
சிறப்பன்றோ!

(அறுசீர் விருத்தம்)

2 கருத்துகள்: