வணக்கம்
இந்த ஆண்டு குஜராத் சென்று வந்தோம். அங்கே எனக்குப்
பிடித்த இடங்களைப் படம் பிடித்து வெளியிட்டு உள்ளேன்.
குஜராத்தில் மோதிரா என்ற இடத்தில் இந்த சூரிய
கோவில் உள்ளது. மிகவும் அழகு வாய்ந்த இடம். அமைதியான இடமும் கூட. இங்கே சூரிய குண்டம்,
சபா மண்டபம், மற்றும் குடா மண்டபம் உள்ளது. சூரிய குண்டம் என்பது ஒரு பெரிய குளமாகும்.
அழகிய கலை நயத்துடன் கட்டப்பட்ட குளம் செவ்வக வடிவத்தில் உள்ளது. சுற்றிலும் அழகான
சிற்பங்களுடன் கூடிய படிகட்டுகள்.
எங்களுடன் வந்த வழிக்காட்டி, “இந்த கோவில் பல
நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும், பல அரசர்களின் தாக்குதலால் அழிக்கப்பட்டது.
கடைசியாக 1026 ஆம் ஆண்டு சரியாக புதுப்பிக்கப்பட்டது இது“ என்றார். தவிர இந்த கோவிலில்
தங்கத்தால் ஆன தேருடன் கூடிய சூரிய தேவனின் சிலை இருந்தது என்றும் அதைக் கஜினி முகமது
எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்றும் தெரிவித்தார்.
.
அன்புடன்
அருணா செல்வம்
01.10.2024












கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக