செவ்வாய், 1 டிசம்பர், 2015

மணமகள் மறுவீடு அழைப்பு பாடல்!


 


புத்தம்  புதிய  புதுமலரே!
புதுத்தாலி   அணிந்த  மணமகளே!
நித்தம் இன்பம்  பெருகிடவே
நெஞ்சம்  நிறைந்து  வாழ்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே!  - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                            (புத்தம் புதிய )

அம்மி  மிதித்த  அருந்ததியே
அன்பால் மலர்ந்த  நறும்பூவே!
கம்பர்  பாடிய  நாயகியே
காதல்  நிறைந்து  வாழ்ந்திடவே 
வலது  காலை  வைத்து  வருகவே! - நல் 
வாழ்வு  மலர  வாழ்கவே!                          (புத்தம் புதிய )

தேடி  உன்னை  மணந்தவனே
தெய்வம்  தந்த  துணையவனே!
கூடி  இன்பம்  களித்திடவே
குலமும்  தழைத்துப் பெருகிடவே
வலது காலை  வைத்து வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!                        (புத்தம் புதிய )

பிறந்த  வீடு  மகிழ்ந்தடவே
புகுந்த  வீடு  மதித்திடவே
சிறந்த  பெருமை  காத்திடவே 
செல்வம்  எல்லாம்  சேர்ந்திடவே
வலது காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர வாழ்கவே!                         (புத்தம்  புதிய ) 

அத்தை  மாமன்  மனம்நிறைய
அன்பு  கணவன்  அகம்மகிழ
அங்கே  வாழ்ந்த லட்சுமியும்
ஆசை பொங்கி  உனைஅழைக்க
வலது  காலை  வைத்து  வருகவே! - நல்
வாழ்வு  மலர  வாழ்கவே!!                             (புத்தம் புதிய) 


கவிஞர்  அருணா செல்வம்
19.10.2015

7 கருத்துகள்:

Nagendra Bharathi சொன்னது…

அருமை

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அழகான பாடலை ரசித்தேன்...

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமைசகோதரியாரே
அருமை

Geetha சொன்னது…

நல்ல பாடல்....வாழ்த்துகள்.

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

அருமை சகோதரி! இதை யாரேனும் இசையமைத்துப் பாடி இசைத்தட்டாக வெளியிட்டால் நன்றாக இருக்குமோ...

ஸ்ரீராம். சொன்னது…

அருமை.

சுந்தரா சொன்னது…

அருமையான பாடல்...பாராட்டுக்கள்!