வியாழன், 8 மார்ச், 2012

ஏனிந்த பெண்கள் தினம்? (புதுக்கவிதை)பெண்ணே.. பெண்ணே..  இன்று
பெண்கள் தினமாம்!!

ஏனிந்த பெண்கள் தினம்?  நீ
என்ன சாதித்து விட்டாய்?

சமுதாயத்தில் சரிக்குச்
சமமாகப் பேசிவிட்டாயா?

அரசியல் அங்கத்தில்
அங்கீகாரம் எத்தனைச்சதம்?

பாலியல் பலாத்காரத்தில்
பாய்ந்தாயா புலிபோல?

அடிமைச் சங்கிலியை
அறுத்தெறிந்து விட்டாயா?

பெண்கொடுமைச் செய்வோரைப்
பேயென்று தாக்கினாயா?

சமமான ஊதியத்தைச்
சம்மதமாய்ப் பெற்றாயா?

எத்திறத்தில் எழுந்துவிட்டாய்?
ஏமாளி யார் இங்கே?

பெண்ணே..
ஏனிந்த பெண்கள் தினம்? வெறும்
பிள்ளை பெறுவதற்கு மட்டுமா..?

8 கருத்துகள்:

 1. அருமையான கேள்விகள்
  இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியானபதில் கிடைக்கவேண்டும்
  அதுவரை ஓயக்கூடாது என்பதை வலியுறுத்தத்தான்
  இந்த மகளிர் தினம் எனக் கூடக் கொள்ளலாமா?
  மனம் கவர்ந்த பதிவு .தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் ஆதங்கமும், கேள்விகளும் நியாயமானவைதான். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் சகோ.

  பதிலளிநீக்கு
 3. nalla kelvikal... vettai vittu veliyil vara thuvangki iruppathe kondatta thakum...

  பதிலளிநீக்கு
 4. நல்ல கேள்விகள்.

  அருமைக்கவிதை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 5. “உங்கள் ஆதங்கமும், கேள்விகளும் நியாயமானவைதான். அருமையான படைப்பு. வாழ்த்துக்கள் சகோ.“

  நன்றி சகோ துரைடேனியல் அவர்களே!

  பதிலளிநீக்கு
 6. “nalla kelvikal...“

  நன்றி மதுரை சரவணன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. “நல்ல கேள்விகள்.

  அருமைக்கவிதை வாழ்த்துகள்.“
  -தனசேகரன்-

  நன்றி நண்பா!

  பதிலளிநீக்கு