செவ்வாய், 30 ஏப்ரல், 2019

தொழிலாளர் தினம்!.
செழிப்பான உலகத்தைச் சோர்வே இன்றிச்
   …..சிறப்பாக்கும் அறிவாளி! வேலை வாங்கிக்
கொழித்திருக்கும் முதலாளி உயர்வைக் கண்டு
   …..குளிந்திருக்கும் செயலாளி! தொழிலை வைத்தே
அழிக்கின்ற சாதியெனும் பிரிவு செய்தோர்க்(கு)
   …..அடிமையான ஏமாளி! ஒருநாள் மட்டும்
தொழிலாளர் எனஉயர்த்திப் புகழ்ந்தே பேசத்
   …..துயர்த்தீரும் உழைப்பாளி உயர்வார் என்றோ?
.
பாவலர் அருணா செல்வம்
01.05.2019

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிந்திக்க தகுந்த வரிகள்... அருமை...