திங்கள், 24 செப்டம்பர், 2012

எங்கே நன்றி..? (கவிதை)




 நன்றியெனும் சொல்லுக்குப் பொருள்தான் என்ன?
   நாம்வாழ வேண்டுமெனில் நாளும் செய்வார்!
பன்றியெனும் விலங்குக்குக் கீழாய்த் தாழ்ந்து
   பாவமெனும் சேற்றினிலே முழுகி நிற்பார்!
குன்றிமனம் வாடுகின்ற காலம் வாய்க்க,
   கொணர்ந்திட்ட பெரும்சுமையைப் பிரித்துப் பார்க்க,
ஒன்றிமுனம் தெளிந்தவர்க்குத் தெரியும் அன்றே!
   ஓய்வின்றி ஓடுகிறோம்! எங்கே நன்றி?


அருணா செல்வம்.

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழரே.

      நீக்கு
  2. உங்கள் ஆதங்கம் வரிகளில் தெரிகிறது... முடிவில் நல்ல கேள்வி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் ஐயா.

      நீக்கு
  3. இந்த உலகம் நன்றி தேடினாவும் கிடைக்காத ஒன்றுதான்..

    அழகிய கவிதை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் .

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  4. பதில்கள்
    1. கவலைப்படாதீங்க நண்பரே.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  5. வலையின் பெயரை வண்டமிழில்
    வடிவாய் எழுத மனமின்றிக்
    கலையின் கவியின் கை..கோர்த்து
    கன்னல் தமிழை வளா்ப்பாயோ?
    அலையின் எழுத்தாய் ஆவதுவோ?
    அடிமைத் தன்மை தொடருவதோ?
    கொலையின் மிக்க செயலன்றே!
    ....... ........ ...............

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

      கன்றாய் இருந்தால் பிடுங்கிடலாம்!
      கனவே என்றால் மறந்திடலாம்!
      நன்றாய்ப் படர்ந்த தமிழ்மகளை
      நகத்தால் வெட்ட முடிந்திடுமா?
      அன்பாய் இணைக்கும் உலகமொழி
      அதனைக் கற்றல் அடிமையாமோ?
      என்..தாய் பெருமை உயர்வென்றால்
      எதிரோன் தாயை இகழலாமோ?

      (கவிஞரே... திட்ட வேண்டும் என்று வந்துவிட்டு... வாயார கவிதையில் திட்டி முடித்திருக்கலாம்.)

      நன்றி.

      நீக்கு
  6. எல்லாமே பணமாகிப்போன உலகம்.பணம் கொடுத்தால் மட்டுமே நன்றி வாங்கலாம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது கூட உண்மையான நன்றியாக இருக்காது என் இனிய தோழி ஹேமா.
      நன்றி.

      நீக்கு
  7. இப்போதைக்கு 'நன்றி'-ங்ற பண்பு கொஞ்சம் போல இங்கிலிஸ்காரன் கிட்ட மட்டும் தான் ஒட்டிகிட்டு இருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களிடமாவது இருக்கிறதே... நல்லது வசு.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி வசு.

      நீக்கு
  8. இந்த அவசர உலகில் ஒருவரை மிதித்து இன்னொருவர் முன்னேற துடிக்கின்றனர் ..
    இதில் நன்றி கூறும் மனங்கள் வெகு சில மட்டும் உள்ளது ..
    வரிகள் வைரங்களாய் மின்னுகிறது ... என் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களின் கூற்றும் உண்மைதாங்க.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  9. வணக்கம்

    உங்கள் மடல் கண்டேன்! உரைத்த கருத்தை உணரவில்லையே என்று வருத்தமுற்றேன்!

    AROUNASELVAM(கவிதைனை்)
    என்பதை அருணாசெல்வம் கவிதைகள் என்று முழுமையும் தமழில் எழுதுமாறு உங்களிடம் தெரிவித்தேன்,

    தமிழில் நான் மாற்றித்தந்த தலைப்பை முழுமையாக
    ஆங்கிலத்திலேயே மாற்றிவிட்டீா்கள்!

    எங்கும் தமிழ்! எதிலும் தமிழ் என்ற கொள்கை உடையவன் நான்
    நீங்களும் என்னைப் போன்றவா் என்றே எண்ணி இருந்தேன்

    இப்போது புரிந்துகொண்டேன்!

    வாழ்க வளத்துடன்!

    மாற்றான் தாயைப் பேணுகிறாய்!
    மடியில் வளா்ந்த இடம்மறந்தாய்!
    வேற்றான் உறவை நம்புகிறாய்!
    மேன்மைத் தமிழை வெறுக்கின்றாய்!
    நுாற்றாண் டென்ன? ஒருநெடியும்
    நோக்கம் தமிழில் குறைந்திடுமோ?
    கூற்றான் வந்து எதிர்த்தாலும்
    கொள்கை உரைக்கத் தயங்கேனோ?

    அருணா செல்வம் ஆங்கிலத்தில்
    அழகுத் தமிழில் கவிதைகளோ?
    ஒருநாள் கூடப் பிறமொழியை
    உயா்ந்த தமிழில் கலக்காதே!
    வரும்நாள் வண்ண வண்டமிழை
    வாரி வழங்கும் மின்வலைகள்!
    திருநாள் என்பேன்! செந்தமழைத்
    தீட்டும் தளத்தின் பேரழகை!

    கவிஞா் கி.பாரதிதாசன்
    தலைவா். பிரான்சு கம்பன் கழகம்
    http://bharathidasanfrance.blogspot.fr/
    kavignar.k.bharathidasan@gmail.com
    kambane2007@yahoo.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவிஞர் அவர்களுக்கு வணக்கம்.

      உறங்கும் பொழுதும் என்னுள்ளம்
      உயர்ந்த தமிழின் சீர்பாடும்!
      இறங்கும் மேகம்! கடல்வானம்!
      இயற்கைச் சிரிப்பு! நடமாடும்!
      சிறந்தும் படர்ந்த பிறமொழியும்
      சேர்த்தே இங்கே ஆண்டாலும்
      மறந்தும் கூட நம்மொழியின்
      மரபில் கலக்க நினைப்பேனா?

      கவிஞரே... என் வலைக்குள் தமிழ் படித்தவர்கள் மட்டுமின்றி தமிழ் தெரியாத நண்பர்களும் படம் மட்டும் பார்க்க வருகிறார்கள். அவர்களுக்காகத் தான் பெயரை ஆங்கிலத்தில் எழுதினேன். படிக்கத் தெரியாவர்களுக்கு வழிகாட்டி மரம் இல்லையா..? அதுபோல் தான்... நன்றி கவிஞர்.

      நீக்கு
  10. நன்றியா!!

    சார் அது எங்கே கிடைக்கும்? கிலோ எம்புட்டு? ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்களேன்..அவசரமா ஒரு அஞ்சுகிலோ தேவபடுது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனசாட்சி....
      என்ன அஞ்சு கிலோவா...? அரைக்கிலோ கூட கிடைக்காமல் பாட்டு எழுதுகிறேன்... நீங்கள் வேற...

      தங்களின் வருகைக்கு நன்றி மனசாட்சி.

      நீக்கு
  11. நன்றி
    மிகப் பெரிய சொல் அதனைப் பாவிப்பவர்கள் உயர்ந்தவர்கள் மட்டுமே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாமும் உயர்ந்தவர்கள் ஆவதற்கு முயற்சிப்போம் .

      நன்றி சிட்டுக்குருவி.

      நீக்கு
  12. காசு கொடுத்ததாலும், கண்ணிய மாந்தர்
    மாசுபடா நன்றியை மனமுவந்து தருவாரா
    நன்றி வேண்டாம் என நன்றியுடன் நாம்
    நன்றி சொல்லி நகர்கிறோம் -கவிதைக்கு
    அன்புடன் கருப்பசாமி

    பதிலளிநீக்கு