வியாழன், 21 நவம்பர், 2024
வெள்ளி, 15 நவம்பர், 2024
செவ்வாய், 12 நவம்பர், 2024
செவ்வாய், 5 நவம்பர், 2024
வெள்ளி, 25 அக்டோபர், 2024
ஞாயிறு, 20 அக்டோபர், 2024
சனி, 19 அக்டோபர், 2024
செவ்வாய், 1 அக்டோபர், 2024
சூரிய கோவில் – மோதிரா - குஜராத் பயணம் – 1
வணக்கம்
இந்த ஆண்டு குஜராத் சென்று வந்தோம். அங்கே எனக்குப்
பிடித்த இடங்களைப் படம் பிடித்து வெளியிட்டு உள்ளேன்.
குஜராத்தில் மோதிரா என்ற இடத்தில் இந்த சூரிய
கோவில் உள்ளது. மிகவும் அழகு வாய்ந்த இடம். அமைதியான இடமும் கூட. இங்கே சூரிய குண்டம்,
சபா மண்டபம், மற்றும் குடா மண்டபம் உள்ளது. சூரிய குண்டம் என்பது ஒரு பெரிய குளமாகும்.
அழகிய கலை நயத்துடன் கட்டப்பட்ட குளம் செவ்வக வடிவத்தில் உள்ளது. சுற்றிலும் அழகான
சிற்பங்களுடன் கூடிய படிகட்டுகள்.
எங்களுடன் வந்த வழிக்காட்டி, “இந்த கோவில் பல
நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்றும், பல அரசர்களின் தாக்குதலால் அழிக்கப்பட்டது.
கடைசியாக 1026 ஆம் ஆண்டு சரியாக புதுப்பிக்கப்பட்டது இது“ என்றார். தவிர இந்த கோவிலில்
தங்கத்தால் ஆன தேருடன் கூடிய சூரிய தேவனின் சிலை இருந்தது என்றும் அதைக் கஜினி முகமது
எடுத்துக்கொண்டு சென்றுவிட்டான் என்றும் தெரிவித்தார்.
.
அன்புடன்
அருணா செல்வம்
01.10.2024
திங்கள், 10 ஜூன், 2024
வெள்ளி, 7 ஜூன், 2024
புதன், 5 ஜூன், 2024
திங்கள், 3 ஜூன், 2024
வியாழன், 23 மே, 2024
வியாழன், 16 மே, 2024
புதன், 1 மே, 2024
திங்கள், 29 ஜனவரி, 2024
வியாழன், 25 ஜனவரி, 2024
செவ்வாய், 16 ஜனவரி, 2024
காணும் பொங்கல் வாழ்த்து ! 2024
நல்லவரைக்
காண வேண்டும் அவர்
நல்லாசி பெறவும் வேண்டும் !
வல்லவரைக்
காண வேண்டும் நல்ல
வாழ்த்தினையும் பெறவே வேண்டும் !
இல்லத்தில்
சேர்ந்தி ருந்தே அந்த
இறையாசி இணைய வேண்டும் !
வெல்லவுள்ளம்
கொண்ட பெற்றோர் கண்டு
வீழ்ந்தாசி பெற்றல் நன்றே !
.
பாவலர்
அருணா செல்வம்
17.01.2024
திங்கள், 15 ஜனவரி, 2024
மாட்டுப் பொங்கல் வாழ்த்து ! 2024
விவசாயி
வளர்த்த மாடோ இன்றும்
விளைச்சளுக்கு முன்னே நிற்கும் !
கவர்கின்ற
உணவில் கூட இந்தக்
காளைகளின் உழைப்பும் உண்டு !
தவஞ்செய்யும்
ஞானி யர்க்கும் வாழத்
தவறாமல் உணவு வேண்டும் !
கவனமுடன்
உலகைக் காக்கும் உழவு
காளையினை வாழ்த்து வோமே !
.
பாவலர்
அருணா செல்வம்
16.01.2024
ஞாயிறு, 14 ஜனவரி, 2024
தைப்பொங்கல் வாழ்த்து ! 2024
தைப்பிறந்து
வந்து விட்டாள் - இனி
தழைப்பாகும் உலக மெல்லாம் !
கைப்பிடித்த
துணைவ ருடனே - உயர்
காதலுடன் இணைந்தி ருப்பார் !
மெய்ப்பிடித்த
நோய்க ளெல்லாம் - உடன்
மிரட்சியுடன் விலகி யோடும் !
மைப்பிடித்த
வார்த்தை யெல்லாம் - நல்ல
மங்கலமாய் வாழ்த்திப் பாடும் !
.
உண்ணுகின்ற
பொருள்க ளெல்லாம் - ஓர்
உழவனவன் உழைப்பே ஆகும் !
மண்ணோடு
மனத்தை ஊன்றி - உயர்
மனிதவுயிர் வாழ வேண்டி
கண்ணினிமைப் போன்றே காத்து - வயிறு
காயாமல் காக்கும் தெய்வம் !
பெண்ணென்னும்
அன்னை போன்று - நிற்கும்
பெருமையுள்ள உழவர் வாழ்க !
..
ஓரிடத்தில்
நின்று கொண்டே - இந்த
உலகத்தை ஒளிர வைக்கும் !
காரிடரும்
காலை யாகும் - கனல்
கதிரென்ற பொழிலைச் சேர்க்கும் !
மாரியுடன்
மண்ணின் ஊடே - சேர்ந்து
மகத்தான மகசூல் தாரும் !
சூரியனின்
தன்மை கண்டு - போற்றித்
தொழுதிடுவோம் நாளும் நன்றாய் !
.
நன்றாக
வாழ வேண்டும் - மனம்
நலமாக உயர வேண்டும் !
ஒன்றாகச் சேர வேண்டும் - பெயர்
உயர்கின்ற நோக்கம் வேண்டும் !
பொன்னாக
மின்ன வேண்டும் - நிறை
பொதுவுடமை எண்ணம் வேண்டும் !
அன்பாக
இருக்க வேண்டும் - அதில்
ஆண்டவனே அடங்க வேண்டும் !
.
பச்சரிசி
வெல்லம் சேர்த்துச் - நல்ல
பசுநெய்யில் பொங்கல் செய்து
இச்சையுடன்
கரும்பு மஞ்சள் - துண்டு
இஞ்சியுடன் கோல மிட்டும்
கச்சிதமாய்
படைத்தெ டுத்தே - உயர்
கதிரோனை வணங்கி என்றும்
அச்சமின்றி
வாழ்க வென்று - நானும்
அன்புடனே வாழ்த்து கின்றேன் !
தோழ தோழியருக்குத்
தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.
.
பாவலர்
அருணா செல்வம்
15.01.2024
சனி, 13 ஜனவரி, 2024
போகி பண்டிகை வாழ்த்து !
அறமில்லாத் தாழ்குணத்தை, ஆக்கமில்லா வற்றைப்
பிறர்க்குதவா வீண்பொருளைப் பேசிச் - சுறண்டிடும்
உண்மையில்லாச் சொற்களையும், ஒன்றாகக் கட்டியெடுத்துக்
கொண்டுவந்து போட்டுக் கொளுத்து!
.
தொடர்வினை இன்றே தொலைந்ததே என்றே
நடந்ததைத் தள்ளி நகர்த்து! - கடந்துவிட்டுப்
போனதெல்லாம் போகியோடு போகட்டும்! தைப்பிறக்க
வானமளவு வாழ்வோம் வளர்ந்து!
.
தோழ தோழியருக்குப் போகி பொங்கல் நல்வாழ்த்துகள்!
.
பாவலர் அருணா செல்வம்
14.01.2024