கண்ணே! கலையே! கற்பகமே!
கண்ணால் பேசும் கவியமுதே!
பொன்னே! மணியே! பூஞ்சிட்டே!
பொலியும் வண்ண ஓவியமே!
பெண்ணே! பேறே! பேரழகே!
பேசும் அழகு மொழிகிளியே!
மின்னும் நிலவே! விண்மீனே!
மெல்லப் பார்க்கும் பொன்மானே!
என்னே என்று பாடிடுவேன்!
எழுத்தில் எதைநான் கோர்த்திடுவேன்!
சொன்ன தெல்லம் உலகினிலே
சொக்க வைக்கும் உயர்வாகும்!
இன்னும் எதிலும் நீயெனக்கே
இன்பம் அளிக்கும் உணர்வாகும்!
முன்னே உலவும் என்னுயிரே
முனைந்த கவியைக் கேள்பெண்ணே!
பத்து மாத வலிஉன்னைப்
பார்த்த வுடனே ஓடிவிட
சித்தம் குளிர உனைத்தூக்கிச்
சிந்தை குளிர மார்பணைத்து
முத்தம் கொடுத்தேன்! வாழ்வினிலே
மொத்த மாக நான்சோ்த்த
சொத்துச் சுகங்கள் அத்தனையும்
சுடரும் உன்முன் தூசென்பேன்!
மெல்ல நடக்கும் வேளையிலும்
மேனி குளிக்கும் போதினிலும்
சொல்லச் சிரிக்கும் நாழியிலும்
சொக்க வைக்கும் பேச்சினிலும்
தொல்லை என்னும் குறும்பினிலும்
தொடுத்த வார்த்தை கோர்வினிலும்
வல்ல நல்ல உயர்வுகளை
வலமாய்க் கண்டேன் உன்னிடத்தில்!
அன்னை தந்தை மனம்மகிழ
அறிவாய் அழகாய் வளர்தவளே!
தன்னை மட்டும் பார்க்காமல்
தனிவாய் பணிவாய் நடப்பவளே!
உன்னை மற்றோர் புகழ்கின்ற
உயர்ந்த அருளைத் பெற்றவளே!
நின்னை நானோ பெற்றிருந்தும்
நினைவில் தாயாய் நிற்பவளே!
மனையும் இணையும் உயர்வான
மகிழ்வே வாழ்வாய் அமையட்டும்!
வினைகள் உன்னை நெருங்காமல்
விண்ணோர் உன்னைக் காக்கட்டும்!
உனைநான் பெற்றேன் என்பதிலும்
உன்றன் தாயாய் உயர்வானேன்!
நினைக்க இனிக்கும் செந்தமிழே
நின்னில் நானே மயங்குகிறேன்!
அருணா செல்வம்
செந்தமிழின் இனிமையில் மயங்காதார் யார்
பதிலளிநீக்குஅருமை சகோதரியாரே
நன்றி
தங்களின் வருகைக்கு கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஜெயக்குமார் அண்ணா.
உங்கள் கவிதை நடையில் நான் மயங்குகிறேன்! அருமை.....( சரக்கு அடித்தால் நான் மயங்கவில்லை)
பதிலளிநீக்குதமிழுக்கும் அமுதென்று பேர் - பாவேந்தர்.
நீக்குதமிழைப் படித்துவிட்டால் அதில் மயங்காமல் யாராலும் இருக்க முடியாது.
(சரக்கு அடித்தால் கொஞ்ச நேர போதை தான் கிடைக்குமாம்)
கவிதைக்கேற்ற அழகான படம்
பதிலளிநீக்குஇணையத்தில் பாடலுக்கேற்றவாறு திரட்டினேன்.
நீக்குநன்றி “உண்மைகள்“
மகளைக் கொஞ்சிப் பாடிய கவிதை வெகு இனிமை. வார்த்தைகள் மணிப்பிரவாளமாய், கொட்டும் அருவியாய் சரளமாய் வந்து விழுந்திருக்கின்றன. கை தட்டிப் பாராட்டுகிறேன் அருணா.
பதிலளிநீக்குதலை வணங்கி ஏற்றுக்கொள்கிறேன் பாலகணேஷ் ஐயா.
நீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
மிக்க நன்றி.
அருமை. மனம் நனையப் படித்தேன்.
பதிலளிநீக்குமிக்க மகிழ்ச்சி.
நீக்குநன்றி ஸ்ரீராம் ஐயா.
மகளுக்கு அன்னை இசைக்கும் இன்னிசை...
பதிலளிநீக்குஅன்னைக்கு ஈடு இணை யாருமுண்டோ
என்ற சொல் இன்னுமொருமுறை உறுதியாகிறது
உங்கள் கவிதையில்...
பெறற்கரிய பெண்மகவு
பெயர்பெற்றாள் உங்கள் கவிதையிலே..
நானும் மனம் மயங்கிப் போனேன் தங்கை அருணா செல்வம்
உங்கள் கவிதையை உள்வாங்கி...
பெறற்கரிய பெண்மகவு..... உண்மை தான் அண்ணா.
நீக்குசில நேரங்களில் பெற்றவர்களுக்கே தாயாகும் பாக்கியம் பெற்றவர்கள் பெண்கள்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மகி அண்ணா.
கவிதை வரிகள் அருமை அருமை
பதிலளிநீக்குதங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ஆறுமுக ஐயாசாமி ஐயா.
பொன்னை நிகர்த்த பூந்தமிழைப்
பதிலளிநீக்குபெற்றாய் தாயே நீவாழ்க!
உன்போல் பேறு பெற்றொருவர்
உண்டோ கூறு பாரினிலே!
அருமை! இனிமை!
வாழ்த்துக்கள் தோழி!
அடடா.... என்னமா வாழ்த்துகிறீர்கள்!!
நீக்குவாழ்த்துவதற்கும் மனம் வேண்டும். அது உங்களிடம் அதிகமாக உள்ளதே இறைவன் கொடுத்த வரம்.
மிக்க நன்றி தோழி.
வணக்கம்!
பதிலளிநீக்குசின்னஞ் சிறுகிளியே! செம்பவளத் தாமரையே!
மின்னும் நிலவே! வியன்தமிழே! - என்றழகாய்ப்
பின்னிப் படைத்திட்ட பேறுகளை உன்மகள்
சென்னி தரிப்பார் செழித்து!
பல்லாண்டு பாடி பசுந்தமிழால் வாழ்த்துகிறேன்!
சொல்லாண்டு! வாழ்வின் சுவையாண்டு! - நல்லாண்டு
தந்த குறளாண்டு வாழ்ந்திடுக! தண்டமிழர்
வந்த வழிமணக்கும் வாழ்வு!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
அருமையான கவிதைகளில் எனக்கும் என்மகளுக்கும் வாழ்த்தளித்தமைக்கு மிக்க நன்றி கவிஞர்.
நீக்குமனமுருகி நானும் வாழ்த்துகிறேன் தோழி இனிக்கும்
பதிலளிநீக்குதமிழ் போல் இனிதாய் வாழிய வாழிய பல்லாண்டு !
தங்களின் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
த .ம .7
பதிலளிநீக்குதோழி..... ஏனோ இப்போதெல்லாம் வலையில் யாரும் அவ்வளவாக ஓட்டு போடுவது இல்லை.
நீக்குஅப்படியே போட்டாலும் ஆறு ஓட்டு வந்தவுடன் ஏழாவது ஓட்டு போட ஏனோ தயங்குகிறார்கள்....
அந்த வகையில் எனக்கு ஏழாவது ஓட்டு போட்டு உயர்த்தியமைக்கு மிக்க நன்றி தோழி.
சொக்க வைக்கும் அழகிய தமிழ் வரிகள்! சகோதரி! மிகவும் ரசித்தோம்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கவிதையை ரசித்துக் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஐயா.
நீக்குசெந்தமிழ்க் காற்றாக வீசும்
பதிலளிநீக்குசிறந்த பாவண்ணம்!
//சுடரும் உன்முன் தூசென்பேன்!//
பதிலளிநீக்குவாவ்
//நின்னை நானோ பெற்றிருந்தும்
நினைவில் தாயாய் நிற்பவளே!//
எப்புடி என வியந்து ரசித்த வரிகள்..
வாழ்த்துக்கள்
தொடர்க
கவிதைக்கு பொய் அழகு என்பார்கள். ஆனால் உண்மையை எழுதும் போது அது மேலும் அழகாகி விடுகிறது.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி முத்து அவர்களே!
மொத்த மாக நான்சோ்த்த
பதிலளிநீக்குசொத்துச் சுகங்கள் அத்தனையும்
சுடரும் உன்முன் தூசென்பேன்!
மழலை தரும் இன்பத்தை ,இதைவிட வோறு செல்ல வேண்டாவே!
தங்களின் வருகைக்கும் உண்மையை வெளிப்படுத்தின கருத்திற்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
நீக்குகவிதைகள் என்னை ஈர்த்தன! கீழ்க்காணும் வரிகள் என் அடிமனதில் ஒட்டிக்கொண்டுவிட்டன!!
பதிலளிநீக்கு’கண்ணால் பேசும் கவியமுதே!’
’மெல்லப் பார்க்கும் பொன்மானே!’
’முன்னே உலவும் என்னுயிரே’
’சொத்துச் சுகங்கள் அத்தனையும்
சுடரும் உன்முன் தூசென்பேன்!’
’நின்னை நானோ பெற்றிருந்தும்
நினைவில் தாயாய் நிற்பவளே!’
’நினைக்க இனிக்கும் செந்தமிழே’
நன்றி.
அடடா.... ஒவ்வொரு அடியாக இரசித்திருக்கிறீர்கள்..!! மிக்க மகிழ்ச்சி.
நீக்குதங்களின் வருகைக்கும் மிக்க நன்றி உலகளந்த நம்பி அவர்களே!
தமிழ் விளையாடும் கவிதை.. அருமை அக்கா.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
மிக்க நன்றி.
பதிலளிநீக்கு