வணக்கம் நட்புறவுகளே.
இன்றைய
காலத்தில் முஸ்லிம் அல்லாத பெண்களும் முக்காடு போட வேண்டிய அவசியம் வந்துள்ளதையும்
கொஞ்ச காலமாக வேறு வழியில்லாமல் முக்காடு போட்டுக்கொண்டு பெண்கள் வெளி வேலைக்குச்
செல்வதையும் இங்கே காண நேர்ந்ததை உங்களுக்கும் பகிர்கிறேன்.
இந்தியாவில்
முக்கியமாக தென் திசை பெண்களுக்கு அழகிய கூந்தல் இருப்பது அனைவரும் நாம் அறிந்ததே.
கோவில்களில்
முக்கியமாக திருப்பதி கொவிலில் முடி காணிக்கையாலே இந்தியாவில் அதிக வருமானம்
கிடைக்கிறது.
இந்த ஆண்டு
முதன்முறையாக இணையத்தின் மூலம் 150 டன் முடி ஏலம் விடப்பட்டு முதன் முறையாக 133
கோடி கிடைத்தது.
இந்த முடியை
அமெரிக்கா, சீனா, ஆப்பிரிக்காவில் நைஜிரியா போன்ற முக்கிய நாடுகள் நான் முந்தி நீ
முந்தி என்று ஏலம் எடுத்து வாங்குகிறது. நம் பெண்களின் அழகிய முடிக்கு அவ்வளவு
கிராக்கி!!
இதெல்லாம் பழைய
கதைதான்.!!
ஆனால் இப்பொழுது
நடக்கும் கதை தான் கவலைக்குரியதாக இருக்கிறது. இங்கே பிரான்சில் பெண்களின் தாலி சரடைப்
பிடுங்குவதால் பெண்கள் கொஞ்ச காலமாக மஞ்சள் கயிற்றில் வெறும் தாலியை மட்டும் இணைத்து
அணிந்து கொண்டு வெளியிடங்களுக்கச் சென்றார்கள்.
இந்த மஞ்சள்
கயிற்றில் இருக்கும் மாங்கல்யத்தில் இருக்கும் சிறு தங்கத்திற்காக அந்தக்
கயிற்றையும் அறுத்தார்கள் திருடர்கள்.. அதனால் பயமடைந்த நிறைய பெண்கள் தாலி சரடோ,
மஞ்சள் கயிறோ கழுத்தில் அணியாமல் அந்த மஞ்சள் கயிற்றைக் கையில் நோம்பு கயிறு போல்
கட்டிக் கொள்கிறார்கள். (இங்கே பெரியார் வந்தெல்லாம் பகுத்தறிவை ஊட்டவில்லை.
வெறும் கள்ளர் பயத்தால்...)
இதுவாவது
பரவாயில்லை என்று தான் நினைத்தோம்.
இப்பொழுது
நடப்பது என்னவென்றால் அழகிய கூந்தல் உள்ள பெண்களின் கூந்தலை பஸ்ஸிலோ..
மெத்ரோவிலோ... அல்லது நடந்து போகும் போதோ அவர்களுக்குத் தெரியாமலோ அல்லது மிரட்டியோ
வெட்டிக் செல்கிறார்கள்.
இது இங்கே
புதியதாகத் துவங்கியிருக்கும் திருட்டு!!!
அதற்காகவே கடந்த
ஒரு மாதமாக வெளிவேலைக்குச் செல்லும் கூந்தலுடையப் பெண்கள் முக்காடிட்டுச்
செல்கிறார்கள்.
என்ன கொடுமை இது. எப்பொழுது இந்த வழக்கம் மாறும் என்றும்
தெரியவில்லை.
நன்றி.
அருணாசெல்வம்.
தகவல்களுக்கு நன்றி...
பதிலளிநீக்குமுடிவில் படம் யம்மாடி....!!! உண்மையா...?
நன்றி தனபாலன் ஐயா.
நீக்குபடம் இணையத்தில் பார்த்ததும் வியந்து நம்மவர்களுக்கும் காட்டலாம் என்று தான் எடுத்தேன் (சுட்டேன்).
அழகின் ஆபத்து முகத்தில் ஆரம்பித்து முடிவரைக்கும் வந்துவிட்டது :(வயிறு பத்தி எரிகிறது .பெண்களுக்கு எதிரான கொடுமைகள் வலுப்பெற்றுக் கொண்டேதான் செல்கிறதுஒளிய அவை கடுகளவும் குறைவாதாகத் தெரியவில்லை .மனதை உறைய வைத்த பகிர்வு .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .
பதிலளிநீக்குபெண்கள் எவ்வளவு தான் முன்னேறி வந்தாலும் இப்படிப்பட்ட கொடுதைகளுக்கும் பயந்து தான் ஆகவேண்டி இருக்கிறது அம்பாளடியாள்.
நீக்குவருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி .
இதுவே பெண் சுதந்திரம் .
பதிலளிநீக்குஎன்ன செய்யலாம் சசிகலா...?
நீக்குநன்றி.
இப்படிஎல்லாம் வேற நடக்குதா??
பதிலளிநீக்குஅதை ஏங்க கேக்குறீங்க...
நீக்குஇன்னும் என்ன என்னவோ நடக்குதுங்க...
நன்றி நண்பரே.
இதுவென்ன கொடுமை! கால்துறை என்ன செய்கிறது...?!
உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால்..
நீக்குகாவல் துறை இந்த விசயத்தில் காந்தாரி கண்களாக இருக்கிறது.
நன்றி புலவர் ஐயா.
அந்நாட்டு அரசிடம் நம் தூதர் கண்டனம் தெரிவிக்க வேண்டும்.(அப்போது மட்டும் என்ன நடந்து விடப்போகிறது?)
பதிலளிநீக்குஅவர் வீட்டில் நடந்தால் தான் ஆக்ஸன் எடுப்பார் என்று நினைக்கிறேன்.
நீக்குநன்றி குட்டன்.
"கள்ளர் பயத்தால் கையில் கட்டிக்கொண்டேன் தாலியை
பதிலளிநீக்குதிருடர் பயத்தால் வீட்டினுள் வைத்து விட்டேன் சவுரியை"
என்று கவிதை எழுதாமற்போனீர்களே..!
நல்ல ஐடியா தான் உதயன் ஐயா.
நீக்குஆனால் எனக்கு சவரி வைக்க வேண்டிய அவசியம் இல்லாததால் அந்த ஞாபகம் வரவில்லை என்று நினைக்கிறேன்.
தங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி உதயன் ஐயா.
திருடர்கள் திருந்தாதவரை திருட்டை ஒழிக்க முடியாது..:(
பதிலளிநீக்குஎன்ன செய்வது சிட்டுக்குருவி....
நீக்குதிருடர்கள் புத்திசாளியாக இருக்கிறார்களே...
நன்றி சிட்டு.
என்ன கொடுமை...
பதிலளிநீக்குஅவர்கள் மனசாட்சி இல்லாதவர்கள்...
நீக்குநன்றி மனசாட்சி.
arumai arumai.... enna kodumai kodumai...
பதிலளிநீக்குwww.nisu1720.blogspot.com
தங்களின் முதல் வருகைக்கும்
நீக்கு....!!! கருத்திற்கும் நன்றி சுகுமார் ஐயா.
எமது
பதிலளிநீக்குகமன்டை......எதுக்கும்
அங்க
ஒரு
எட்டு
பாருங்களேன்
பார்த்து விட்டேன் மனசாட்சி.
நீக்குநன்றி.
பிரான்ஸ் போலிஸ் நல்ல போலிஸ் ஆச்சே.. பாத்துகிட்டு சும்மாவா இருக்கு?
பதிலளிநீக்குஇந்த பொன்னுங்களுக்குத்தான் எத்தனை சோதனை :(
பிரான்சு போலிஸர் நல்லவர்கள் தான்.
நீக்குஅதனால் தான் திருடர்களைக் காப்பாத்துகிறார்கள் என்று நினைக்கிறேன் வசு.
பாவம் தான் பெண்கள். (ஆனாலும் குட்டையாக முடியிருந்தால் அதிலேயும் அழகாகத் தான் தெரிகிறார்கள்!!!)
எப்படியெல்லாம் பயந்து வாழவேண்டியுள்ளது? இதுவரை கேள்விப்படாத புதிய தகவல்கள். பகிர்வுக்கு நன்றி அருணாசெல்வம்.
பதிலளிநீக்குஆமாங்க கீதமஞ்சரி அக்கா...
நீக்குஇது இங்கே எங்களுக்கும் புதிய தகவல் தான்.
நன்றி அக்கா.
பிரான்சிலுமா திருட்டு.ஆச்சர்யமாக உள்ளது.
பதிலளிநீக்குஆச்சர்யப் படாதீர்கள் முரளிதரன் ஐயா.
நீக்குஇங்கே தான் அதிகமாகத் திருட்டு நடக்கிறது என்று நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாட்கள் போலிஸ் கண்டுக்கொள்ளாமல் போனால் இந்த விசயத்தில் இவர்கள் முன்னுக்கு வந்துவிடுவார்கள்.
ஆனால் நம்மவர்களிடமும் சில சிக்கல் பிரட்சனைகள் வருவதால் பறி கொடுத்தவர்கள் போலிஸில் சொல்லாமல் வாய் மூடியும் இருக்கிறார்கள் என்பது கவலைக்குரிய விசயம்.
நன்றி ஐயா.
என்ன கொடுமை இது ..
பதிலளிநீக்குஒன்னும் சொல்றதுக்கில்ல போலிருக்கே ,...
ஆமாம் நண்பரே... வாயடைத்துப் போய் எதுவும் செய்யமுடியாமல் பறி கொடுத்தவர்கள் விழிக்கிறார்கள.
நீக்குநன்றி நண்பரே.
பிரான்ஸிலா......ஆச்சரியமாயிருக்கே அருணா.கார்களை உடைத்து தேவையான சாமன்கள் திருவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.ஆனால் இப்படி களவுகள் எபோதாவதுதானே.இதைப் பார்க்கையில் சுவிஸ் சூப்பர் !
பதிலளிநீக்குநாங்களும் பிரான்சைச் சூப்பர் என்று தான் இரண்டு வருடத்திற்கு முன்பு வரை சொல்லிக்கொண்டு வந்தோம்....
நீக்குஆனால் இன்று....?
கருத்திற்கு நன்றி என் இனிய தோழி ஹேமா.
கொடிகட்டி பரந்த நாட்டில் முடிக்கு திருடா ?ஓர் வேலை இந்தியர் முடிக்குஈடு இணையில்லா மதிப்பு வந்துவிட்டதா ?
பதிலளிநீக்குஉங்கள் பதிவு மிக அருமை.நன்றி வணக்கம் நண்பா ..
அன்புடன் கருப்பசாமி
என்ன என்னவெல்லாமோ நடக்கிறது.
பதிலளிநீக்குஉலகமே ரெம்ப மோசமாகப் போகிறது.
சோகம் தான் நல்ல பதிவு. நன்றி.
வேதா. இலங்காதிலகம்.