துடிக்கும் உடலின் கூட்டுக்குள்
துவளும் துரோகம் கண்டிடவே!
நடிக்கும் மனத்தைப்
படைத்தோரால்
நாளும் அழுவும் தனக்குள்ளே!
இடிக்கும் இடியைத்
தாங்கிவிடும்!
இன்பம் மறைத்து வாழ்ந்துவிடும்!
வடிக்கும் பொய்வாய்
கொண்டோரின்
வார்த்தை கண்டும் புழுங்கிருக்கும்!
எதையும் தாங்கும்
என்பார்கள்
எதிராய் வஞ்சம் நடந்தாலும்
அதையும் தாங்கி
மறைந்துவைக்கும்!
ஆசை அலைபோல் எழுந்தாலும்
புதைக்குள் வைத்த
சவம்போலப்
பொத்தி வைத்து அடங்கிருக்கும்!
சிதையும் மனத்தைச்
சீராக்கும்
செம்மை அதற்குத் தெரிவதில்லை!
கையின் அளவாம்
இதயத்தில்
கனவின் அளவோ கடலளவு!
மெய்யில் சேர்ந்தே
இருப்பதனால்
மெய்யின் அளவை அளந்துவைக்கும்!
பொய்யில் புரளும்
வார்த்தைகளைப்
பொறுத்துக் கொண்டு இருந்தாலும்
பையாம் உடம்பின்
கூட்டினிலே
பஞ்சம் இன்றித் துடித்திருக்கும்!
(தொடரும்)
அருணா செல்வம்.
பிடித்த வரிகள் :
பதிலளிநீக்கு/// எதையும் தாங்கும் என்பார்கள்
எதிராய் வஞ்சம் நடந்தாலும்
அதையும் தாங்கி மறைந்துவைக்கும்! ///
ரசித்த வரிகளை எழுதி பாராட்டியமைக்கு
நீக்குமிக்க நன்றி தனபாலன் ஐயா.
பொய்யில் புரளும் வார்த்தைகளைப்
பதிலளிநீக்குபொறுத்துக் கொண்டு இருந்தாலும்
பையாம் உடம்பின் கூட்டினிலே
பஞ்சம் இன்றித் துடித்திருக்கும்!
i likr it
உண்மையைத் தானே சொல்லியிருக்கிறேன்....
நீக்குநன்றி கவிஞர்.
//கையின் அளவாம் இதயத்தில்
பதிலளிநீக்குகனவின் அளவோ கடலளவு!//
கலக்கிட்டீங்க அருணா!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
கையின் அளவாம் இதயத்தில் கனவின் அளவோ கடலளவு! சிறப்பான வரிகள்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில்
சரணடைவோம் சரபரை!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_14.html
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ் ஐயா.
இதயம் என்று தலைப்பு இருந்தவுடன்.. ஏதோ காதல் கவிதை என்றுதான் நினைத்து வந்தேன்.... வரிகளை வாசித்தவுடன் தான் கவிதையின் மேன்மை அறிந்தேன்!
பதிலளிநீக்குவார்த்தைகளை சிக்கனமாக பயன்படுத்தியிருக்கிறீர்கள்! அதுதான் கவிதை இத்தனை அழகு! எந்த வரிகளையும் tag செய்து போடமுடியவில்லை இந்த வரிகள் தான் பிடித்திருக்கிறது என்று!!!!
எந்த வரிகளையும் tag செய்து போடமுடியவில்லை இந்த வரிகள் தான் பிடித்திருக்கிறது என்று!!!!
நீக்குஅப்படியென்றால் எந்த வரியும் பிடிக்க வில்லையா? இது ச்சும்மா...
தங்களின் வருகைக்கும் அழகிய பாராட்டிற்கும்
மிக்க நன்றி நண்பரே.
வணக்கம் நண்பரே..
பதிலளிநீக்குஉடற்கூறு ஒன்றின்
கவிதை என்றது
அறிவியல் செய்தியாக இருக்குமோ
இல்லை காதலின் ஊற்றாக இருக்குமோ
என்றெண்ணி வந்தேன்
ஆனால்
வாழ்வியல் நியதிகளை
அழகு சொற்களால்
திறம்பட இயம்பியது
மிக அழகு ......
ஆமாம் நண்பரே....
நீக்கு“ஒரு ரோஜா
ஒரு ரோஜா
ஒரு ரோஜா தான்“ என்ற சேக்ஸ்பியர் கவிதையைப் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
நாம் ஒன்றை மற்றதுடனே ஒப்பிட்டேப் பார்ப்பதால்
அதன் உண்மையான தன்மையை மறந்து விடுகிறோம்.
அதனால் தான் நான் இதயத்தை இதயமாகவே வைத்து எழுதினேன்.
நன்றி நண்பரே.
நெஞ்சக்கூட்டுக்குள் சிறை வைக்கப்பட்ட இதயத்தின் தவிப்பை அழகாய் வெளிப்படுத்திய வரிகள். எத்தனை எத்தனை அதிர்வுகளைத் தாங்கி இயங்கிக்கொண்டிருக்கிறது இன்னும். வியப்புதான்.
பதிலளிநீக்குஆமாம் கீதமஞ்சரி அக்கா.
நீக்குஇன்னும் இன்னும் நிறைய இருக்கிறது... எனக்குத் தெரிந்ததை தான் எழுத முயன்றிருக்கிறேன். இன்று பெண்ணின் இதயத்தை எழுதுகிறேன். படித்துப் பாருங்கள்.
நன்றி அக்கா.
அதிர்வுகளுக்கே அதிசயம் இந்தச் சின்ன இதயம்...தொடரட்டும் !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா..
நீக்கு“அதிர்வுகளுக்கே அதிசயம்“ எவ்வளவு அழகான ஆழ்ந்த சொல்லாடல்... எனக்கு இப்படியெல்லாம் எழுத வரவில்லை.
அழகிய கருத்துரைக்கு மிக்க நன்றி ஹேமா.
azhaku!
பதிலளிநீக்கு