புதன், 11 ஜூன், 2014

இடையிலே கோடு போட்டால்.... (நகைச்சுவை நிகழ்வு)



    ஒரு முறை நான் இந்தியா சென்றிருந்த போது என் உறவினரின் பையன் ஒருவன், அவனுக்கு அப்பொழுது எட்டு அல்லது ஒன்பது வயது தான் இருக்கும். அவன் என்னிடம் ஒரு கேள்வி கேட்டான்.
என்னவென்றால்...
   “நம் ஊரில் சுவற்றில் எறும்புகள் வரிசையாகப் போவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?“ என்று கேட்டான்
    இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் பிறந்துவிட்டு இதைப் பார்க்காமல் இருந்திருப்போமா...? “ம். பார்த்திருக்கிறேன்“ என்றேன்.
    “அப்படி எறும்புகள் வரிசையாகப் போகும் போது அதன் இடையில் நம் கை விரலால் கோடு போட்டால்.... அப்பொழுது எறும்புகள் தடுமாறுகிறதே... ஏன்?“ என்று கேட்டான்.
   நான், “அடடா... இந்தப் பிள்ளை இவ்வளவு புத்திசாலித் தனமாகச் சிந்திக்கிறதே என்று வியந்து இப்படி விளக்கம் சொன்னேன்.
   “அதாவதுப்பா.... எறும்புகளுக்குக் கண் தெரியாது. ஆனால் மோப்ப சக்தி அதிகம் உண்டு. அந்த மோப்ப சக்தியைக் கொண்டு அவைகள் ஒன்றன் பின் ஒன்றாகச் செல்லுகின்றன. அப்படி செல்லும் போது நம் கை விரலால் அதனின் இடையில் கோடு போட்டால் நம் கையில் உள்ள வாசனை அங்கே படிந்துவிடும். எறும்புகள் இந்த புதுவித வாசனையால் வழி தெரியாமல் தடுமாறுகிறது“ என்று சொன்னேன்.
   அவனும் சற்று உன்னிப்பாக இதைக் கேட்டான். எனக்கு அவனுக்கு ஒரு விளக்கத்தைச் சொல்லிக்கொடுத்த பெருமை மனதில் ஒட்டியது. ஆனால் இது சற்று நேரம் தான்.
   அவன் சொன்னான்..... “ஆன்டி... நான் சொன்னதை நீங்கள் புரிஞ்சிக்கவே இல்லை. எங்கேயாவது இத்துணுன்டு எறும்போட இடையில நம்ம கைவிரலால கோடு போட முடியுமா....? எறும்பு செத்தடும்மே....“ என்றான் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு.
   அப்போதுதான் எனக்கு அவனின் வார்த்தை ஜாலம் புரிந்தது. பயபுள்ள எப்படியெல்லாம் யோசிக்குது பாருங்க.


அருணா செல்வம்.
12.06.2014

40 கருத்துகள்:

  1. சுவாரஸ்யமாகச் சொல்லவேண்டியதை
    சொல்லிப்போனவிதம் மிக மிக அருமை
    அந்தப் பையனைவிட அருணாசெல்வமே
    புத்திசாலியாகப் படுகிறார் எனக்கு
    மனம் கவர்ந்த பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அந்தப் பையனைவிட அருணாசெல்வமே
      புத்திசாலியாகப் படுகிறார் எனக்கு“

      ரொம்ப புகழ்ந்திட்டீங்க. அவசியம் இதை என் கணவரிடம் காட்ட வேண்டும். அப்போவாவது நம்புகிறாரா என்று பார்க்கிறேன்...))

      தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
      மிக்க நன்றி இரமணி ஐயா.

      நீக்கு
  2. ஹா...ஹா... குழந்தைகள் வரிகளுக்கிடையில் வாசிக்கிறார்கள்! :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அருமையான வாசகம்!!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      உங்களின் பதிவில் என்னால் தமிழில் பின்னோட்டம் எழுத முடிவதில்லை....(((

      நீக்கு
    2. முன்னரே ஒருமுறை சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் புரியவில்லை. மற்ற பதிவுகளில் பின்னூட்டப்பெட்டியிலேயே தமிழில் டைப் செய்வீர்களா? நான் எங்குமே என்னுடைய மெயில் கணக்கிலிருந்து தமிழ் தட்டச்சு செய்து அதை அந்தந்தப் பின்னூட்டப் பெட்டியில் ஒட்டுகிறேன். அப்படிச் செய்வதில் சிரமம் இருக்காதே..

      நீக்கு
    3. நான் மற்ற பதிவுகள் அனைத்திலும் பின்னுர்ட்டப் பெட்டியிலேயே தான் தமிழில் டைப் செய்வேன். உங்கள் பதிவிலும் டிடி அண்ணா பதிவிலும் தான் தமிழில் டை செய்ய முடிவதில்லை. அவரிடம் சொன்னேன். உடனே மாற்றி விட்டார்.
      இனி நீங்கள் சொன்னது போல் செய்கிறேன்.

      உடனே பதில் கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.

      நீக்கு
  3. புத்திசாலிப் பையனை உருவாக்கியது நீங்கள். எனவே நீங்கள் மட்டுமே புத்திசாலி.

    பாராட்டுகள் அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் மட்டுமே புத்திசாலி.... !!

      ஹா ஹா ஹா.... கொஞ்சம் தலையில் கனம் ஏறியது போல் உள்ளது காமக்கிழத்தன் ஐயா.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனாபலன் ஐயா.

      நீக்கு
  5. பரவாயில்லையே இந்தக் கால பிள்ளைகளுக்கு இந்த அளவிற்கு தமிழ் தெரிந்திருக்கிறதே என மகிழ்வடைய வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் தோழி.
      வெறும் “இப்“ என்று சொல்லியிருந்தால் கண்டு பிடித்து விடுவோமே...

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. ஹஹஹஹாஆ நல்ல பகிர்வு! தாங்கள் சொன்னதும் சரி! பையன் சொன்னதும் சரி! இப்போதெல்லாம் எறும்பு, யானை வைத்தெல்லாம் கடி ஜோக்ஸ் வருகின்றதே அப்படித்தான் நாங்கள் முதலில் படித்தவுடன் யோசித்தோம்! இந்த விஞ்ஞான விளக்கம் தெரிந்திருந்தாலும்....இப்போது எறும்பைப் பற்றிய கேள்விகள் ஏதாவது சிறுவர்கள் எழுப்பினால் ...பிள்ளை நம்மளை பல்பு அடிக்க வைக்குமோனு யோசிக்கணுமா இருக்கு...அத்தனை சுவாரஸ்யம் பிள்ளைகளின் கேள்விகள்!!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவும் கடி ஜோக் தான். என்ன... நான் தெரியாத்தனமாக அவனிடம் “பல்ப்“ வாங்கி விட்டேன்....))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசிதரன் ஐயா.

      நீக்கு
  7. ரமணி சாரே உங்களை புத்திசாலி என்று சொன்ன பின் நான் என்னதான் சொல்ல முடியும் இங்கே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்போ கூட நீங்கள் என்னைப் புத்திசாலி என்று சொல்லவில்லை....(((

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
    2. நான் உங்களை அதிபுத்திசாலி என்று பாராட்ட வந்தேன் ஆனால் ரமணி சார் புத்திசாலி என்றுமட்டும் சொன்னதால் என்னால் அப்படி சொல்ல முடியவில்லை. தலைவர் ரமணியை மீறி ஏதாவது சொல்லிவிட்டு நான் மதுரைக்குள் கால் எடுத்து வைக்கதான் முடியுமா?

      நீக்கு
    3. அதானே....
      இப்போக்கூட அமெரிக்காவில் இருப்பதால் தான் நிறைய பேர்களிடம் இருந்து தப்பித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்.....)))

      நீக்கு
  8. இந்த காலத்து குட்டி பசங்க ரெம்ப புத்திசாலி, அவங்கள்ட வாய் குடுத்து மீள முடியாது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதாங்க.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மகேஷ் பிரபு ஐயா.

      நீக்கு
  9. குழந்தைகளின் அறிவும் அபார சக்திவாய்ந்தது என்று நிரூபித்து விட்டான் அந்தச் சின்னப் பயல் நீங்க வருத்தப்படாதீங்க தோழி :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேட்குறீங்க....? அந்த வருத்தத்தில் இரண்டு கிலோ குறைந்து விட்டேன். இப்பொழுது இரமணி ஐயா, காமக்கிழத்தன் ஐயா, மதுரைத்தமிழன் போன்றவர்களின் கருத்துக்களைப் படித்ததும். திரும்பவும் அந்த கிலோவை எடுத்துவிட்டேன்....))))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  10. பையனின் புத்திசாலித்தனம் ரசிக்கவைத்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் சிரிப்பிற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  12. குழந்தைகள் கேள்வியின் மன்னர்கள் தான்!ஹீ

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி மட்டுமா.... இப்படி ஏடாகூடப் பதிலிலும் மன்னர்கள் தான் தனிமரம்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தனிமரம்.

      நீக்கு
  13. குழந்தைகளின் அப்பழுக்கற்ற அறிவுத்திறனும், நகைச்சுவை உணர்வும் பெரியவர்களை மிஞ்சியவை. அவர்களுக்கு பெரியவர்களை போல வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்புகளும், பலனை எதிர்பார்த்து வாழும் முறையும் இல்லாததே காரணம்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை சாமானியன்.

      தவிர, சத்திரத்துச் சாப்பாட்டின் இரண்டாவது விளக்கத்தை எழுதினேன். ஒருவர் அது சரியான பொருள் இல்லை என்று எழுதி இரந்தார்.
      நான் எழுதியது சரியான பொருள் தான். ஆனால் அவர் சொன்னது போல தவறானக் கருத்தாக இருந்தால்.... படிப்பவர்கள் நான் எழுதிய பொருளையே எடுத்துக்கொண்டால் சரியில்லை என்று தான் அந்த இடுகையை உடனே எடுத்துவிட்டேன்.

      பெரியவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு மீண்டும் வெளியிடுகிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  14. ”இடை”க்கு அர்த்தம் புரிஞ்சிருக்கும் அளவுக்கு அந்தக் குழந்தைக்கு தமிழ் தெரிஞ்சிருக்கேன்னு சந்தோசப்படனும் அருணா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியெல்லாம் நம்மைக் கலாய்க்க வேண்டும் என்றே இந்த வார்த்தைகளைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் தொழி.

      வருகைக்கம் கருத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. 1.4kg மூளைக்குள்ளே
    எத்தனை kg எண்ணங்கள்
    சிறந்த பகிர்வு!

    visit: http://ypvn.0hna.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பதிலைப் படித்ததும் ஒவ்வொருவரின் கற்பனையையும் வெயிட் போட்டு பார்த்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

      வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  16. அருணா செல்வம் அவர்களுக்கு,

    மற்றவர்களின் கருத்துக்கு நீங்கள் அளிக்கும் மரியாதை பாராட்டுதலுக்குரியது !

    இதனை உங்களை புகழ்வதற்காக சொல்லவில்லை. நான் உங்களின் இந்த வலைப்பூவில் இட்ட முதல் கருத்தே அந்த பதிவுக்கு சற்று எதிரானதுதான். ஒப்புதலுக்கு பின்னரே கருத்துகளை அனுமதிக்கும் வலைப்பூவில், நீங்கள் நினைத்தால் அதனை பிரசுரிக்காமலேயே இருந்திருக்கலாம். ( சில வலைப்பூக்களில் எனது கருத்து முழு சென்ஸார் செய்யப்பட்ட அனுபவம் எனக்குண்டு ! )

    இப்போது உங்களின் பதிவையே நீக்கியிருக்கிறீர்கள் ! ( உங்கள் கருத்து சரிதான் என்பதையும் நாசுக்காய் விளக்கிவிட்டு ! )

    இது நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய வழிமுறைகளில் ஒன்று.

    வாழ்த்துக்கள்

    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி பிறந்தால் தான் நல்ல பதில் கிடைக்கும்.

      எனக்கு ஏதாவது விசயம் தெரியவில்லை அல்லது புரியவில்லை என்றாலும் வெட்கப்படாமல் உடனடியாகக் கேட்டு விடுவேன். எல்லாம் தெரிந்தவர் போல் நடிக்க மாட்டேன்.
      அதே சமயம் உண்மைக்கு முரணானக் கருத்தாக இருந்தால் அதைத் தைரியமாக எடுத்து நாசுக்காகச் சொல்லி விடுவேன்.
      அதே போல் நான் மற்றவர்களின் கருத்திற்கும் மரியாதை அளிக்கிறேன்.

      மீண்டும் நன்றி சாமானியன்.

      நீக்கு
  17. சென்ற தலைமுறையை விட வரும் தலைமுறை நிச்சயம் புத்திசாலிகளாகத்தான் இருந்து வருகின்றனர் காலந்தோறும். சிறுவனின் புத்திசாலித்தனம் கலந்த நகைச்சுவை அசத்திடுச்சு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதை ஏன் கேட்குறீர்கள் கணேஷன் ஐயா.... நான் சின்ன பிள்ளைகளிடம் தான் அதிகமாக “பல்ப்“ வாங்கி இருக்கிறேன். நிறைய இரக்கிறது. அதையெல்லாம் வெளியிட்டால் அருணா இவ்வளவு அப்பாவியா என்றே எண்ணத் துர்ண்டும்.

      ஆனால் நான் “பல்ப்“ வாங்கிய பதிவுகளை மட்டும் தவறாமல் படித்துவிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்....))

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி கணேஷ் ஐயா.

      நீக்கு
  18. சிறுவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியிருக்கிறது. செம பல்பு வாங்கி விடுகிறோம்! :)

    பதிலளிநீக்கு