.
குடசம் தொழுநோய் குணமாக்கும் ! சாற்றைத்
தடவ சிரங்கு தணியும்! - உடம்புறுதி
காத்திடும்! பெண்கள் கருத்தடைக்குச் சேர்த்திடுவார்!
தேத்தும் மறதிநோயைத் தீர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
25.02.2022
.
குடசம் தொழுநோய் குணமாக்கும் ! சாற்றைத்
தடவ சிரங்கு தணியும்! - உடம்புறுதி
காத்திடும்! பெண்கள் கருத்தடைக்குச் சேர்த்திடுவார்!
தேத்தும் மறதிநோயைத் தீர்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
25.02.2022
காட்டுத்தீப் போல்பூத்துக் காய்க்கும் பலாசமரம்!
வீட்டுக் கழகாய் விளைகியது! - கூட்டிவைத்த
காய்ந்த மலர்களைக் காய்ச்சிக் குடித்துவர
நோய்பல ஓடும் நொடிந்து!
.
பாவலர் அருணா செல்வம்
24.02.2022
மூங்கிலின் பூக்களே முன்னோரின் உந்தூழ்பூ!
ஓங்கும் மரம்பூக்க உண்டாகும் - மூங்கரிசி
உண்ணும் எலிகள் உழவினைப் பாழாக்கும்!
தண்டுதவும் சாரமெனத் தந்து!
.
பாவலர் அருணா செல்வம்
23.02.2022
பொன்னெனக் கொத்தாகப் பூக்கும் செருந்தியில்
இன்றேன் மிகுந்துள ஏற்றமுண்டு! - நன்கமழ்
வாசத்தால் சூடிடும் வஞ்சியரைக் காளைமனம்
நேசத்தால் கூடும் நெகிழ்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022
கொத்தாகப் பூக்கும் குருக்கத்திப் பூவிதழ்
மெத்தென்று பஞ்சுபோல் மென்மைமிகும்! - பித்தநோய்
நீர்வேட்கை போக்கும்! நெடும்புண்ணை ஆற்றிடும்
சீர்க்கமழும் வாசம் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
22.02.2022
செம்மலெனப் பாராட்டிச் சீராட்டிப் போற்றுவார்!
செம்மையின்றி வீழும்பூ செம்மலாம்! - நம்முன்னோர்
செம்மல் மலரென்று செப்பினார்! இன்றழைப்பார்
இம்மலரைச் சாதிப்பூ என்று!
.
பாவலர் அருணா செல்வம்
21.02.2022
இருவாட்சி என்ற இருள்நாறி ஆழ்ந்த
இருட்டில் மலரும் இனிதாய்! - அருந்தேனை
வண்டுகள் உண்டிட வாசமுடன் பூத்திடும்
வெண்ணிறப் பாலைப் பழித்து!
.
பாவலர் அருணா செல்வம்
20.02.2022
நார்ச்சத்து மிக்க நலந்தரும் பீர்க்கங்காய்
பார்வையை மேலும் பலப்படுத்தும்! - நீர்த்தன்மை
மிஞ்சும் உடலை மெலியவைக்கும் வாசமற்ற
மஞ்சள் நிறப்பூ மலர்ந்து!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022
கருவிளையின் பூக்களும் காய்விதை, வேரும்
மருந்தாகி நோயினை வாட்டும்! - அருள்தரும்
ஈசனுக் கானது! எக்காலமும் பூத்திடும்
வாசமற்ற நீல மலர்!
.
பாவலர் அருணா செல்வம்
16.02.2022
காட்டுப் புதர்ச்செடி காவலுக்கு வேலியாம் !
நீட்டிருக்கும் முட்கள் நிறைந்திருக்கும் ! - பாட்டிற்கோ
உன்னதமாய்த் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை
சின்னமலர் சூரல் சிறப்பு!
.
பாவலர் அருணா செல்வம்
17.02.2022
ஐந்திதழ்கள் கொண்டவிது ஐங்கரனுக் கானமலர்!
பைந்தமிழ்ப் போன்று பழமையாம்! - நைந்திடாக்
கற்பிளவில் கூடக் கடிதில் வளர்ந்திடுமே
பொற்பயன் மிக்க புழகு!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022
மரத்தில் மலர்ந்திடும் மௌவல் மலரோ
இரவில் மலரமணம் ஈர்க்கும்! - வரம்போல்
அலங்கார மாலைகளில் அங்கமிடும்! பல்லைப்
பலகாலம் ஒப்பினர் பார்த்து!
.
பாவலர் அருணா செல்வம்
15.02.2022
புதர்செடியாய்
முட்களுடன் பூக்கும் பிடவம்!
இதனின்
மணம்இனிமை என்பார்! - முதல்மழையில்
மொட்டனைத்தும்
பூத்து முடிந்திடும் வாழ்வாகும்!
குட்டிப்
பிடவமெனல் கூற்று!
.
பாவலர்
அருணா செல்வம்
12.02.2022
கோங்கம்
மலரைக் குயில்கள் விரும்பியுண்ணும்!
தேங்கும்
மணமோ திளைக்கவைக்கும்! - வாங்கினர்
பொன்னிறப்
பூக்களின் பூந்தாதை மட்டுமே
பொன்னின்
நிகராய்ப் புகழ்ந்து!
.
பாவலர்
அருணா செல்வம்
11.02.2022
வில்வம்
எனுங்கூ விளமரத்தின் பூ…தவிர
எல்லாம்
பயனாகும் என்பார்கள்! - வல்ல
இறைவனின்
பூகைக்(கு) இலையைப் படைப்பர்!
மறைபொருள்
கண்டால் மருந்து!
.
பாவலர்
அருணா செல்வம்
10.02.2022
நாய்துளசி
போலிருக்கும் நல்லகஞ் சங்குல்லை
நோய்பல
போக்கிடும் நுட்பமாய்! - ஆய்வாளர்
கேட்டை
விளைத்திடும் கீழ்ப்பயிர் என்றனர்!
வாட்டும்
முறையகன்றால் வாழ்வு!
.
பாவலர்
அருணா செல்வம்
10.02.2022
.
(மேலே
உள்ள படம் நாய்துளசி செடியின் படம். கஞ்சங்குல்லைச் செடியின் படம் வெளியிடத் தடையுள்ளது)
வகுளம்பூ
தேர்க்கால் வடிவில் இருக்கும்!
தொகுத்து
முகர்ந்தாலே தூக்கம் - மிகுந்திடும்!
பல்வலியைப்
போக்கும்! பலபயன் கொண்டமரம்!
சொல்லவிங்கே
இல்லை இடம்!
.
பாவலர்
அருணா செல்வம்
09.02.2022
.
காதல்
என்பது காமத்தில் முடிவது
ஓதும்
பொருளை உணர்ந்தால் தெரிந்திடும்!
சாதல்
போன்று சமமாய் அனைவரும்
பேதம்
இன்றிப் பிறப்பினில் வருவது!
ஏதோ
இன்பம் எழிலைக் கூட்டும்
தீதோ
சரியோ திரும்பி ராதது!
இளமை
ஊஞ்சலை இயற்கை ஆட்டிட
வளமை
நெஞ்சில் வலிமை கொடுக்கும்!
சின்னப்
பேச்சும் சிலிர்ப்பைக் கொடுக்கும்
கன்னம்
கனிந்திட கவியில் உழலும்!
வண்டு
தேனை வகையுடன் உண்ண
மண்டு
மலரோ மயங்கியே இருக்கும்!
இந்த
நாடகம் இணையும் வரையில்
அந்த
உணர்வுக ளடங்கி முடிந்ததும்
கண்டதற்
கெல்லாம் கடிதினில் சண்டையே!
சிண்டு
முடிந்திடும் சின்னத் தவறும்!
உணவின்
சுவையே உண்ட பிறகு
மணத்தை
விலக்கி மறுத்தல் போலே
பதுங்க
நினைத்துப் பாச மற்றே
ஒதுங்கி
நின்று ஓதும் வேதம்!
இந்த
உண்மையை இளையோர் மறுப்பர்!
பிந்தி
அறிவார் பெரியோர் மொழியே!
.
பாவலர்
அருணா செல்வம்
09.02.2022
இரவில்
மலரும் இனியமலர்! பூக்கப்
பரப்பும்
மனம்நம்மைப் பற்றும்! - சரஞ்சரமாய்க்
கட்டிய
பித்திகத்தைக் கன்னியருஞ் சூடுவர்!
ஒட்டிடும்
ஊடல் ஒழித்து!
.
பாவலர்
அருணா செல்வம்
08.02.2022
தேயாத
நல்லுருதி தேகத்தில் கொண்டிருக்கும்!
காயாத
வண்ணமுள்ள காயாமரம்! - பாயா
மயில்கூட்டம்
போலே மலர்ந்திடும்! வாசம்
உயிர்த்தொட
வைக்கும் உணர்வு!
.
பாவலர்
அருணா செல்வம்
05.02.2022
அகன்ற
இலையுடன் ஆழ்ந்தவெண்மை வண்ணப்
பகன்றை
மலரும் பனியில்! - முகர்ந்திடக்
கள்மணம்
கொண்டது! காடுகளில் பூத்திடும்
உள்ளநிறை
வண்ணமட்டும் உண்டு!
.
பாவலர்
அருணா செல்வம்
04.02.2022
பெரும்பஞ்ச
மூலத்தில் பேரிடம் கொண்டு
மருந்துக்
குதவுவது வாகை! - அருந்தமிழர்
வெற்றிக்கு
மாலையாக வேந்தனுக்குச் சூடினார்!
கற்றறிந்து
கொண்டால் களிப்பு!
.
பாவலர்
அருணா செல்வம்
03.02.2022
உயர்ந்த
மலைதனில் உன்னதமாய்ப் பூக்கும்!
நயந்தருந்
தேனினை நல்கும்! - வியப்பாகப்
பன்னிரெண்டு
ஆண்டுகள் பார்க்க முடியாது!
சின்னக்
குறிஞ்சி சிறப்பு!
.
பாவலர்
அருணா செல்வம்
02.02.2022
சுடர்மலர் காந்தளெனச் சொல்லுமிதன் வேரில்
அடர்துயர்
புற்றை அழிக்குந் தொடர்புண்டு!
செம்மையுற
வைத்தியத்தில் சேர்த்தாலே நன்மைதரும்!
நம்நாட்டின்
மாநிலப்பூ நன்று!
.
பாவலர்
அருணா செல்வம்
02.02.2022