1 கண்
உள்ளவனைக் காட்டிலும் குருடன் குறைவாகவே தடுக்கி விழுகிறான் ! - ஜெர்மன்
2.
சாட்டையை இழந்து விட்டால் அதில் தங்கப்பிடி இருந்தது என்பான் மனிதன் ! - சீனா
3
.குளிர் வந்துவிட்டால் அழுக்குத் துணியும் அவசியமாகும் ! - ஜப்பான்
4.
குணமில்லாத அழகு மணம் அற்ற மலர் ! – பிரான்ஸ்
5.
அகம்பாவன் ஒரு பொல்லாத குதிரை. அது தன் எஜமானனை ஒரு முறையாவது கீழே தள்ளாமல் விடாது ! – ஸ்காட்லாந்து
6.
அதிஷ்டமில்லாத காலத்தில் உங்கள் கைத்தடி கூட பாம்பாகி விடும் ! – இங்கிலாந்து.
7.
கனவுகள் நனவாக வேண்டும் என்றால் முதலில் துாக்கத்தில் இருந்து விழிக்க வேண்டும் ! – ரஷ்யா
8.
குழந்தைகளும் குடிகாரர்களும் உண்மையே பேசுவர் !
– டென்மார்க்
9.
தாழ்வது வெட்கப்படத்தக்கது அல்ல. தாழ்ந்தே கிடப்பது தான் வெட்கப்படத் தக்கது ! – சுவீடன்
10.
கடவுள் எல்லாப் பறவைகளுக்கும் உணவைக் கொடுத்துள்ளார். ஆனால் அவர் உணவைக் கூட்டுக்குள்
எறிவதில்லை ! - ஹாலந்து
-