திங்கள், 6 ஜூலை, 2020

சோலையின் ஏக்கம்!



.
மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
    மென்நடையைக் கண்டுவிட்டால் அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்!
    தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்!
    வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
    மலர்பாதம் தன்மீது படுமா என்றே!!
.
பாவலர் அருணா செல்வம்
(“தயக்கம் ஏனோ அதைச் சொல்ல ?“ என்ற என் நூலிலிருந்து….)