மலரினும் மெல்லியது –
2
காதல் கொண்ட
காளையர்கள்
கண்ணால் பேசும் பேச்சினிலே
மாதர் மனத்தை
மாற்றிடுவர்!
மங்கை மனமும் மாறிவிடும்!
பேதம் இல்லா மனத்துடனே
பெருமை பேசி மகிழ்ந்திடுவாள்!
சேதம் கொண்ட
மனத்தினையும்
செம்மை யாகக் காத்திடுவாள்!
அன்பு கொண்ட அவள்மனதில்
ஆசை வார்த்தை காட்டிவிட்டுப்
பண்பு மறந்து
பாவையுடன்
பள்ளி கொண்டு பின்மறந்து
துன்பம் மட்டும்
துணையாகத்
தூக்கிக் கொடுத்துச் சென்றாலும்
இன்பம் என்ப(து)
அவனென்றே
இனிக்க அவனை நினைத்திடுவாள்!
காதல் காமம்
மட்டும்தான்
காளை நெஞ்சில் தெரிகிறது!
மீதம் உள்ள நல்லவைகள்
மிருக மனத்தில் மறைந்தனவே!
வேதம் சொன்ன
வார்த்தையெல்லாம்
விரும்பி அலசி ஆராய்ந்தால்
காதல் காமம்
என்பதெல்லாம்
கடைசி வரையில் வந்திடுமோ!
மலரினும் மெல்லியது
காமம் சிலர்அதன்
செல்வி தலைப்படு
வார். (குறள் – 1289)
(சுவிஸ்
கவியரங்கத்தில் வாசித்தக் கவிதை! - தொடரும்)
அருணா செல்வம்.
// காதல் கொண்ட காளையர்கள்
பதிலளிநீக்குகண்ணால் பேசும் பேச்சினிலே
மாதர் மனத்தை மாற்றிடுவர்!
மங்கை மனமும் மாறிவிடும்!
பேதம் இல்லா மனத்துடனே
பெருமை பேசி மகிழ்ந்திடுவாள்!
சேதம் கொண்ட மனத்தினையும்
செம்மை யாகக் காத்திடுவாள்//
மலரினும் மெல்லியது காமம் எனக் கூறிய வள்ளுவன் வாக்கிற்கேற்ப கவிதையின் ஆக்கமும் அமைந்துள்ளது
புலவர் ஐயா.... திருக்குறளைத் தவிர்த்து
நீக்குவாழ்க்கை தத்துவங்களை நம்மால் சொல்லிவிட
முடியுமா..?
எங்கே சுற்றி எங்கே தொட்டாலும் அதில்
திருவள்ளுவனின் கருத்து பொதிந்திருக்கும் என்பது
நீங்கள் அறியாததா...?
(ஆனால் எனக்கு முன்னால் திருவள்ளுவர் பிறந்து
நான் நினைப்பதை எல்லாம் சொல்லிவிட்டாரே என்று
ஆதங்கமாகத் தான் இருக்கிறது)
நன்றி புலவர் ஐயா.
அழகான அறிவுரைகளுடன் கூடிய கவிதை மிகச் சிறப்பாக சிந்திக்க வைப்பதாக உள்ளது.
பதிலளிநீக்குபாராட்டுக்கள். வாழ்த்துகள்.
ஐயா... தங்களின் வருகைக்கும் அழகிய பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி.
அழகான வரிகளில் அழகான கவிதை...
பதிலளிநீக்குதொடருங்கள் நாங்களும் சலிக்க மாட்டோம்
சிட்டுக்குருவி... உங்களுக்கு என் பாடல்களில்
நீக்குசலிப்புத் தெரியும் பொழுது சொல்லிவிடுங்கள்...
மாற்றி விடுகிறேன்... உங்களை!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சிட்டு.
அருமை அருமை...வார்த்தைகள் உபயோகம் ரசிக்க வைக்கிறது!
பதிலளிநீக்கு>>>அன்பு கொண்ட அவள்மனதில்
ஆசை வார்த்தை காட்டிவிட்டுப்
பண்பு மறந்து பாவையுடன்
பள்ளி கொண்டு பின்மறந்து<<<
பெண்கள் எப்போதுமே ரொம்ப சுலபமா ஏமாந்துவிடுகிறார்கள்..குறிப்பா ஏமாற்றும் குணம் கொண்டவர்களிடம்!
அதை ஏங்க சொல்லுறீங்க வசு...
நீக்குபாவம் அவர்கள்!!
வாழ்த்துக்கும் நல்ல கருத்திற்கும்
மிக்க நன்றி வசு.
thodarungal.....
பதிலளிநீக்குநீங்களும் தொடருங்கள் நண்பரே.
நீக்குநன்றி.
திருக்குறளுக்கு அழகிய தெளிவான
பதிலளிநீக்குவிளக்கமாக அமைந்த கவிதை அருமை
மனம் தொட்ட பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ரமணி ஐயா.
tha.ma 3
பதிலளிநீக்குகருத்துள்ள வரிகள்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் ஐயா.
இரண்டு ஓட்டா....? (எப்படி...!!)
பதிலளிநீக்குநன்றி.
நன்றி ரமணி ஐயா.
குறளுக்கேற்ற கவிதை.அருமை
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குட்டன் அவர்களே.
எனக்கு வியப்பு மட்டுமே.ரசித்துப் போகிறேன் எப்போதும் !
பதிலளிநீக்குகலைஞர்களுக்குக்
நீக்குகைதட்டல் தானே
முக்கியம்....
நன்றி என் இனிய தோழி ஹேமா.
முதன் முதலாக தங்களின் இந்த பதிவு தமிழ்மணத்தில் ஏழு வாக்குகள் பெற்று வாசகர் பரிந்துரையில் இடம்பெற்றிருக்கிறது!!! வாழ்த்துக்கள்! :)
பதிலளிநீக்குஅப்படிங்களா வசு...?
நீக்குநீங்கள் பார்த்தீர்களா...? நல்லது.
ஆனால் நான் பார்ப்பதற்குள் ஓடிவிட்டது. சரி இன்னொரு பதிவு பிரபளம் ஆகாமலா போய்விடும்... அப்பொழுது கண்குளிர பார்க்கிறேன்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி வசு.
மிக அருமையான பதிவு .வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குஅன்புகருப்பசாமி