வெள்ளி, 2 நவம்பர், 2012

பெண்ணின் பெருமை (சிறுகதை)

 



  'திலகா உக்காருமா. நான் போயி கொஞ்சம் காபி கலக்கிக்குனு வந்திடுறேன்."
    சாரதா போனதும் திலகா தூனோரம் சாய்ந்து அமர்ந்தாள். முட்டிக்கொண்டிருந்த கவலையின் வெளிபாடு கண்ணீராகக் கன்னத்தில் கோடிட்டு ஓடியது. யாருக்கும் தெரியக்கூடாது என்று அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டாலும் கவலையின் வலியை முகம் காட்டிக் கொடுக்காமலா போய்விடும்?
    மேகலா தன் அக்காவின் அருகில் வந்து ஆறுதலாக அமர்ந்தாள்.
    'அழாதக்கா. இந்த கொழந்தைக்கும் ஒங்கூட வாழ குடுத்து வைக்கலன்னு நெனச்சிகோ. கவலபடாத. மனச தேத்திக்கோக்கா."
    குழந்தையை இழந்த தாயிக்கு ஆறுதல் சொல்ல முடியுமா? குழந்தையைப் பெற்றவளுக்குத்தான் அதன் அருமை தெரியும். பாவம் மேகலா முயற்சி செய்தாள்.
    'இல்ல மேகலா. ஒனக்குத் தெரியாது. இதுவும் பொண்ணா போயிடுச்சேன்னுட்டு எம்மாமியாரே அந்த கொழந்தைய சாவடிச்சிட்டா. எனக்கு நல்லா தெரியும். அந்த கொழந்த மூச்சி முட்டியெல்லாம் சாகல.. என்னோட மாமியாக்காரி தான் சாவடிச்சிட்டா."
    முகத்தில் அடித்துக் கொண்டு அழுதவளைப் பார்த்து மேகலாவும் அழுதாள். காபி கொண்டு வந்த சாரதா அழுதுக் கொண்டிருந்த மகள்களைக் கவலையுடன் பார்த்தாள்.
    நம்மால் கடந்த காலத்தை மாற்ற முடியாது. ஆனால் அதை பொருமையாகவும் வேதனையுடனும் போக விட்டுவிடலாம்.


    மறுநாள். திலகா காய்கறி நறுக்க மேகலா சமைத்துக் கொண்டிருந்தாள். இரவெல்லாம் தங்கைகளுடன் பேசியதில் திலகாவிற்கு மனபாரம் குறைந்து தான் இருந்தது.
    கவலைகளை மற்றவர்களுடன் பங்கிட்டுக் கொண்டால் பாதியாக   குறைந்துவிடுவது இயற்கைத் தானே!
    'அக்கா ஒரு சமையம் நம்ம அம்மாவும் நாம பொறந்ததும் சாவடிச்சியிருந்தா அவங்களுக்கும் இந்த வயசுல சம்பாதிக்க வேண்டிய அவசியம் இருந்திக்காது இல்ல.."
    தாயின் மனபாரத்தை உணர்ந்தவள் யோசனையுடன் கேட்டாள்.
    'ஆமாண்டி. நாகூட இப்படி நெனைக்கிறது தான். பாவம்டி அம்மா. இந்த கிராமத்துல டீச்சரா இருந்துக்கினு அப்பா செத்தப் பிறகும் நம்ம நாலு பொம்பள பிள்ளைங்களுக்காக இன்னமும் ஒழைச்சிக்கினு.. டியுஷன் சொல்லிக் குடுத்துக்கினு.. ம்.. அவங்களுக்காக நாம எதையும் அனுசரிச்சிக்கினு போய்தான் ஆவணும். அவங்களுக்காகத் தான் பொறந்த ரெண்டு பெண் கொழந்தையையும் பறி கொடுத்தப்பிறகும் அந்தக் குடும்பத்தோட அனுசரிச்சிப் போயிக்கினு இருக்கேன். இல்லன்னா.."
    'இல்லன்னா..?"
    'நீங்களும் வேணாம். இந்த வாழ்க்கையும் வேணாம்ன்னுட்டு அந்த வீட்டவிட்டு எப்பவோ வெளியே வந்து ஏதாவது வேல தேடி என்னோட சொந்த காலுல நின்னு இருப்பேன்.."
    'ஏன்? இப்பவே அத செய்யறது தானே..?"
    'அது முடியாதுடி. அப்படி செஞ்சா நம்ம அம்மாவுக்குத் தான் கெட்டபேரு. ஆம்பள இல்லாத வீட்டுல வளந்தப் பொண்ணு. அது இஷ்டத்துக்கு அவுத்துவுட்ட கழுதையா வளந்திருக்கு. அம்மாவோட வளப்பு அப்படின்னு சொல்லிடுவா எம்மாமியார். அது மட்டுமில்ல. என்னால ஒங்க வாழ்க்கையும் பாழாயிடும். ஓடிப்போனவ குடும்பம்ன்னு முத்திரை குத்திடுவாங்க. அம்மா வீட்டுக்கு வந்திட்டா.. வாழா வெட்டின்னு பட்டம் குடுத்துடுவாங்க. இதெல்லாம் யோசிச்சதாலத் தான் நானும் அவங்களோட அனுசரிச்சிப் போயிக்கினு இருக்கேன்."
    முடியாத வேதனை வார்த்தைகளாக வெளிவந்தது. மேகலா அக்காவின் அருகில் வந்;தாள்.
    'அக்கா கவலையே படாத. இப்படியே பொறக்கிற ஒவ்வொரு பொம்பளக் கொழந்தையையும் சாவடிச்சிட்டா.. இன்னும் சில வருஷத்துல வெறும் பசங்கத்தான் இருப்பானுங்க. அப்புறம் நம்ம மௌஸ் ஏறிடும். கல்யாணத்துக்குப் பொண்ணு கெடைக்காம மகா பாரதத்துல வர்ற பஞ்ச பாண்டவர் கதை மாதிரி ஒருத்திக்கு அஞ்சி பேரா ஆயிடும்."
    கள்ளமில்லாமல் பேசி சிரிக்கும் தங்கையின் சிரிப்பில் தானும் கலந்து கொண்டாள்.
    'இன்னும் கொஞ்ச வருஷம் எதுக்கும்மா..? இப்பவே அப்படித்தான் ஆயிடுச்சி. மாப்பிள்ளைங்களுக்கு பொண்ணு கெடைக்க மாட்டேங்குது. இல்லாட்டி ஒனக்கு இப்படி ஒரு வரன் அமையுமா..?"
    கேட்டுக் கொண்டே நுழைந்த தரகர்(மாமா) வுக்கு நாற்காலியை எடுத்து போட்டாள்.
    'அம்மா ஸ்கூலுக்கு போயிருக்காங்களா..?"
    'ஆமா மாமா."
    'நாளைக்கி உன்ன பொண்ணு பாக்க வர்றாங்க. அம்மா சொன்ன வரதட்சணைக்கு ஒத்துக்கினாங்க. மாப்பிள்ளை உள்ளுர்லேயே மளிகசாமா கடை வச்சிருக்காரு. உன்னோட போட்டோ குடுத்தேன். புடிச்சிபோச்சி. ஜாதகமும் ஒத்து போயிடுச்சி. குடும்பத்துக்கு ரெண்டாவது பையன். மூத்தவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. இவர் ரெண்டாவது. அவ்வளவு தான். பிக்கல்புடுங்கல் இல்லாத குடும்பம். நாளைக்கி பொண்ணு பாக்க வர்றாங்க. அம்மாகிட்ட சொல்லிடு. நான் கௌம்புறேன்."
    கிளம்பியவரை மேகலா தயக்கத்துடன் அழைத்தாள்.
    'என்னம்மா..?"
    'போட்டோ எதுவும் தரலையா..?"
    'போட்டோ எதுக்கும்மா? நாளைக்கு தான் வர்றாங்களே. நேரா பாத்துக்கோ."
    மேகலா முகம் வாட அதைக் கண்டும் காணாதவர் போல் கிளம்பிவிட்டார்.
    'விடுடி. அதுதான் நாளைக்கி பாக்கப் போறோமே.. போய் வேளைய பாரு." சொல்லிவிட்டு திலகா இருந்த கவலைகளை ஒதுக்கிவிட்டு நாளை நிகழயிருக்கும் நிகழ்ச்சியின் வேலையில் மூழ்கினாள்.

    'பொண்ண எங்களுக்கு புடிச்சிறுக்கு. என்ன..? குடுக்கறேன்னு சொன்ன சீருக்கூட புள்ளைக்கி ஒரு பைக் வாங்கி குடுத்துடுங்க. அவ்வளவு தான். நாங்க ஒன்னும் பெரிசா உங்ககிட்ட எதிர்பாக்கல."
    வெற்றிலை காவி வாயுடன் மாப்பிள்ளையின் அப்பா சொன்னார். அதிர்ச்சியுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள் மேகலா. புடைவை முந்தானையால் உடம்பை மூடிக்கொண்டு கதவோரம் நின்று கொண்டிருந்த சாரதா தரகரை கவலையுடன் நோக்கினாள்.
    'என்னங்கையா.. நான் தான் சொன்னேனே.. அவங்களால இவ்வளவு தான் செய்ய முடியும்ன்னு. இது ரெண்டாவது பொண்ணு. இன்னும் ரெண்டு பொண்ணுங்க இருக்குதில்ல.. அதையும் யோசிக்க வேணாம்மா..?"
    'நான் என்னத்தையா யோசிக்கிறது? இந்த காலத்துல நாலும் பொம்பள புள்ளைங்களையா பெத்துக்குவாங்க? இதுக்குத்தான் வரும்போதே யோசிக்கணும். இல்ல.. வந்த பிறகாவது யோசிச்சி இருக்கணும். அப்பவெல்லாம் விட்டுட்டு.. இப்ப என்னத்த யோசிக்கிறது? எங்கள பாருங்க. ரெண்டும் பையனுங்க. பொம்பள புள்ளையே வேணாம்ன்னு முடிவெடுத்துட்டோம். அதுங்களால நமக்கு என்ன புரோஜனம்ன்னு சொல்லுங்க..?"
    'என்ன இப்படி பேசுறீங்க..? இப்பவெல்லாம் பொண்ணுங்க படிச்சிட்டு எல்லா துரையிலேயும் முன்னேறுதே."
    'முன்னேறி..? நமக்கா குடுக்குதுங்க..? கல்யாணம்ன்னு ஆயிட்டா எல்லாமே புருஷன் வீட்டுக்குத்தானே..? அதெல்லாம் யோசிச்சித்தான் பொறந்ததையும் நான் அப்பவே வேணான்னுட்டேன். பொண்ணுன்னு பெத்தாலே கடைசி வரைக்கும் தொல்ல தான். இந்த வீட்டுல பாருங்க. நாலும் பொட்டபுள்ள. இதுங்கள கரை சேக்கணும்ன்னா சாமார்த்தியமா..?"
    'கஷ்டம் தாங்க. அதனால தான் நான் பைக் பேச்செல்லாம் வேணாம்ன்னு சொல்லுறேன்." தரகர் காலம் பார்த்து பவ்யமாகச் சொன்னார்.
    அவர் தர்மச்சங்கடத்துடன் மனைவியைப் பார்த்தார். அவள் இவரை முறைத்துவிட்டு சாரதாவிடம் திரும்பினாள்.
    'பெரியவனுக்கு கல்யாணத்துல வண்டி வாங்கிக் குடுத்தாங்க. சீPர்சனம் நகை நட்டெல்லாம் நெறைய போட்டாங்க. வந்த மகராசி ரெண்டும் பையனா பெத்துட்டா. நீங்க என்னத்த பெரிசா குடுத்துடபோறீங்க? ஒரே ஒரு வண்டி தான.. இப்ப முடியலைன்னாலும் தலதீவாளிக்கி வாங்கி குடுத்துடுங்க. இதுக்கு சரின்னா முடிவ சொல்லி அனுப்புங்க. நாங்க கௌம்புறோம்." எழுந்து கொண்டார்கள்.
    'என்னோட முடிவ நா இப்பவே சொல்லிடுறேன்;. எங்களுக்கு இந்த சம்மந்தம் வேணாம்." அழுத்தம் திருத்தமாகச் சொன்ன கோகிலாவை அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.!
    'என்னம்மா நீ? வண்டி வாங்கறத பத்தி பொறுமையா பேசலாம். இந்த வண்டிக்காக நல்ல சம்மந்தத்த வேணாம்ன்னு சொல்லிடாத." தரகர் அவசரமாக சமாதானப்படுத்தினார்.
    'நான் வண்டி பிரச்சனைக்காக சொல்லலைங்க. எம்பொண்ணோட வாழ்க்கை பிரச்சனையா ஆயிடக்கூடாதுன்னு தான் சொன்னேன். இவ அந்த வீட்டுக்கு வாழ போனா என் பெரியபொண்ணு பட்ட கஷ்டங்களத்தான் இவளும் அனுபவிக்கனும். அவ வாழ்க்கை மாதிரி தான் இவ வாழ்க்கையும் ஆயிடும். அதனால தான் நான் இந்த சம்மந்தம் வேணான்னு சொல்லுறேன்.  ஐயா தயவுசெஞ்சி எம்பொண்ணுங்களுக்கு மாப்பிள்ளை பாத்தீங்கன்னா.. பொம்பளைப்பிள்ளை பொறந்துவளந்த வீடா இருந்தா சொல்லுங்க. அவங்களுக்குத்தான் பொண்ணுங்களோட அருமைத் தெரியும். அப்படி இல்லாத வீட்டுல நா பொண்ணு தர மாட்டேன். நீங்க கௌம்பலாம்."
    முகத்தைக் கடுமையுடன் திருப்பிக்கொண்டாள்.
    அவர்கள் 'பொம்பளப்புள்ளைங்கள பெத்தவளுக்கு இவ்ளோ திமிர் இருக்கக் கூடாது" என்றும் மேலும் வாய்க்கு வந்ததைத் திட்டிக்கொண்டும் போனார்கள்.
    அவர்கள் போனதும் 'மேகலா.. நல்ல இடத்தை அம்மா வேணான்னு சொல்லிட்டேன்னு கவலை படுறியா..?" மகள் என்ன நினைத்தாளோ என்ற எண்ணத்தில் கேட்டாள்.
    'இல்லம்மா. நீங்க இந்த வரனுக்கு சம்மதிச்சியிருந்தால் எனக்கு கவலையா இருந்திருக்கும். ஆனா நீங்க இவ்ளோ கஷ்டத்திலும் எங்கள பெருமையா நெனச்சி பேசுனீங்களே.. இதுவே எனக்கு பெருமையாவும் சந்தோஷமாவும் இருக்குதும்மா.." கண்ணீர்மல்க அன்னையைக் கட்டிக்கொண்டு அழுதவளின் கண்ணீரைத் துடைத்தாள்.
    தடுமாறி வீழ்வதில் தவறில்லை. எழுந்திருக்க எண்ணமில்லாமல் இருப்பதுதான் தவறு என்பதை மாணவர்களுக்குச் சொல்லி தருபவள் இல்லையா மேகலா!
    'மேகலா.. அருமை தெரியாதவங்க கையில கெடைக்கிற வைர கல்லும் உப்பு கல் மாதிரி தான். எம்பொண்ணுங்க ஒவ்வொன்னும் வைரங்கள் தான். உங்களோட அருமை பெத்துவளர்த்த எனக்கு தான் தெரியும்."
    மகளின் நெற்றியில் முத்தமிட்டாள். 


 அருணா செல்வம்.

26 கருத்துகள்:

  1. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

    http://otti.makkalsanthai.com/upcoming.php

    பயன்படுத்தி பாருங்கள் தமிழ் உறவுகளே,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

    பதிலளிநீக்கு
  2. நல்ல கதைக்களம். ஒரே ஒரு நெருடல் படித்த டீச்சர் நான்கு குழந்தைகளுக்கு.... கொஞ்சம் யோசித்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதெல்லாம் கண்கெட்டப்பிறகு சூரிய நமஸ்காரம் கதை தான்... என்ன செய்வது... கதையின் போக்கு அப்படி.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  3. அட ! உங்கள் கற்பனை வளமும்
    கதையை கொண்டு சென்ற விதமும்
    அசத்துகிறது. பெண்ணின் பெருமை
    பேசிய விதம் அருமை. அப்படியே கொஞ்சம் பெரிய
    சம்'மந்தி' யையும் கவனிக்கறது.
    வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகிறேன் தோழி.
      உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  4. பெண்ணின் பெருமை உணர்த்தும் அருமையான சிறுகதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு
  5. கோகிலாவின் முடிவு நல்ல முடிவு... முடித்த விதம் அருமை...

    நன்றி...
    tm1

    பதிலளிநீக்கு
  6. ஆஹா! ஆஹா! அருமை! சும்மா நச்சுனு சொல்லீட்டிங்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  7. கதையின் கருவும் கதைசொல்லிய விதமும் மிகவும் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  8. கோகிலா வின் மன தைரியம் இந்த சமூகத்துக்கு தேவையான ஒன்று ..
    செமத்தியான கதை .. என் வாழ்த்துக்கள் ... (பாத்திரங்களுக்கு பெயர் வைக்கும் பொழுது சற்று வேறுபடுத்துங்கள் கோகிலா, மேகலா. இப்படி வைத்தால் சற்று குழப்பம் வருகிற உணர்வு எனக்கு )

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி பெயர்களை மாற்றி எழுதுகிறேன் அரசன்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி அரசன்

      நீக்கு
  9. பெண்ணின் பெருமை சொல்லும் கதை
    மனம் கவர்ந்தது
    குறிப்பாக முடிவு
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. கட்டிக் கொடுத்த வீட்டிலிருந்து திரும்பும் பெண்களைப் பலவாரகப் பேசும் கலச்சாரம் இன்னும் முடிவுக்கு வராதது தான் கவலை...:(

    பதிலளிநீக்கு
  11. சொல்லிச்சென்ற விதம் பிரமாதம் சகோ.

    பதிலளிநீக்கு
  12. முடிவை மிகவும் ரசிச்சேன் !

    பதிலளிநீக்கு
  13. தங்களின் வரவிற்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி இரமணி ஐயா.

    பதிலளிநீக்கு