திங்கள், 10 செப்டம்பர், 2012

அன்பும் அறமும் !! (கவிதை)




 அன்பு!

அழுது கொண்டே இருந்திடலாம்
    அன்பாய்ச் சொற்கள் கிடைக்குமெனில்!
விழுந்து கொண்டே இருந்திடலாம்
    விழுந்து மீண்டும் முளைக்குமெனில்!
தொழுது கொண்டே இருந்திடலாம்
    தூய்மை நெஞ்சில் வாய்க்குமெனில்!
எழுதிக் கொண்டே இருந்திடலாம்
    இனிய தமிழும் பிறக்குமெனில்!

அறம்!

அழுகை எதற்கு? அகத்துள்ளே
    அன்பின் சோலை மலருமெனில்!
விழுகை எதற்கு? ஆலமர
    விழுதாய் நட்பு வாய்க்குமெனில்!
தொழுகை எதற்கு? நம்முள்ளம்
    தூய்மை நிறைந்து சுடருமெனில்
எழுகை எதற்கு? ஏழுலகம்
    இன்னல் போக்கி மகிழ்வதற்கே!!


அருணா செல்வம்.

15 கருத்துகள்:

  1. அன்பும் அறமும் தேவை தான்........ நல்ல படைப்பு

    பதிலளிநீக்கு
  2. அன்பும் அறமும் எனப் பிரித்து அருமையாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நல்ல கேள்வி! நல்ல பதில்! சிறப்பான படைப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    பதிலளிநீக்கு
  4. அன்பிற்கும், அரனுக்கும் அழகு சேர்க்கும் கவிதைகள் அருமை.

    பதிலளிநீக்கு
  5. அன்பும் மற்றும் அறமும் நன்று. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. /அழுது கொண்டே இருந்திடலாம்
    அன்பாய்ச் சொற்கள் கிடைக்குமெனில்!
    விழுந்து கொண்டே இருந்திடலாம்
    விழுந்து மீண்டும் முளைக்குமெனில்!
    தொழுது கொண்டே இருந்திடலாம்
    தூய்மை நெஞ்சில் வாய்க்குமெனில்!
    எழுதிக் கொண்டே இருந்திடலாம்
    இனிய தமிழும் பிறக்குமெனில்/

    அழகான வரிகள்

    தங்களின் பொத்தகத்தில் வாசித்த நினைவு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் திகழ் ஐயா.

      தங்களின் முதல் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி.

      (ஆமாம் ஐயா. என் புத்தகத்தில் இருக்கும் பாடல் தான் இது.)

      நீக்கு