செவ்வாய், 11 செப்டம்பர், 2012

“க்யூபிஸ“ கவிதையும் என் கவலையும்...!!!



வணக்கம் நட்புறவுகளே...   

    முதலில் “க்யூபிஸம்“ கவிதைகளைப் பற்றி எனக்குத் தெரிந்ததை உங்களிடம் பகிர்கிறேன். அதன் பின் என் கவலையைச் சொல்கிறேன். 


    “க்யூபிஸம்“ (Cubism)  என்பது தமிழில் “பன்முகம்“ எனப்படும்.
    “க்யூபிஸம்“ என்பது முதன் முதலில் ஓவியத்தில் தான் வெளி கொணரப்பட்டது.
     “ஒரு பொருளை கண்களால் உணராமல் தலையால் உணருவது தான் “க்யூபிஸம்“ என்கிறார் முதன்முதலில் பன்முக ஓவியத்தைத் தீட்டி மக்களைக் கவர்ந்த பிரென்சு ஓவியர் பாப்லோ பிகாஸ்சு.
     ஒரு ஓவியத்தைப் பார்ப்பவர், தன் பார்வைக்குப் பட்டதைக் கண்களுக்குப் புலப்படாத்தையும் மனத்தால் உணரப்படும் காட்சியின் ஊடே முக்கோணம், வட்டம், செவ்வகம், சதுரம் போன்ற கணித வடிவங்களையும் கோர்த்து புதுப்புது அர்த்தங்களுடன் உணர்ந்து கொள்வதாகும்.
    இது பகுக்கப்பட்ட க்யூபிஸம் – Analytic Cubism
எதிர்மறைகள் இணைந்த க்யூபிஸம் – Synthetic Cubism
என்று வளர்ந்து இருக்கிறது.
    இந்தப் பன்முக ஓவியங்களில் இருந்து பன்முகக் கவிதைகள், பன்முகக் கதைகள், பன்முக நாவல்கள், பன்முகத் திரைப்படம் என்று வளர்ந்து கொண்டு இருக்கிறது.
    க்யூபிஸக் கவிதைகளை மேலோட்டமாகப் புரிந்துக்கொள்வது மிகவும் கடினம். என்றாலும் ஆழ்ந்து சிந்தித்து பார்த்தால் நாம் அக்கவிதையை உணர்வால் மட்டும் இரசிக்காமல் நம் அறிவாலும் சுவைத்திருப்பது புரியும். 


   நம் வலையினுள் நானறிந்த க்யூபிஸ கவிஞர்கள்...

ரமணி அவர்கள்
ஹேமா மற்றும்
செய்தாலி அவர்கள்...

   இவர்கள் மூவரும் பன்முகக் கவியில் கைதேர்ந்தவர்கள். இதில் ரமணி ஐயாவும் தோழர் செய்தாலி அவர்களும் பகுக்கப்பட்ட பன்முகக் கவிதை எழுதுபவர்கள். ஹேமா அவர்கள் எதிர்மறைகள் இணைந்த பன்முகக் கவிதை எழுதுகிறார்.
    எப்படி தான் யோசிக்கிறார்களோ...!!!

    இப்பொழுது என்னுடையக் கவலை என்னவென்றால், என்னால் ஒரு கவிதை கூட அவர்களைப் போல் எழுத முடியவில்லையே .. என்பது தான்.

நன்றி.



அருணா செல்வம்.

29 கருத்துகள்:

  1. nalla thakaval!

    ungal viruppamaan -
    valaiyaalarkal!

    naanum thodarvathaal-
    enakkum makizhchi!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கவிஞரான நீங்கள் இப்படிச் சொல்லலாமா?
    இவற்றுக்கு ஒரு உதாரணங்கள் சொன்னால் நன்றாக இருந்திருக்கும்.நீங்கள் சொன்ன மூவரும் எனக்கும் பிடித்த கவிஞர்கள். எந்த வகை கவிதை எழுதுகிறார்கள் என்பதை அறியும் அளவுக்கு நுணுக்கம்
    தெரியாவிட்டாலும் கருத்தும் சொல்லும் விதமும் ஈர்ப்பதனால் ரசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் முரளிதரன் ஐயா.

      கற்றது கைகளவு தானே... மேலும் கற்க ஆசைப்படுவதும் முடியாமல் போனால் வருத்தப்படுவதும் மனித இயல்பு தானே ஐயா.
      தங்களின் வருகைக்கும் நல்ல ஊக்கம் கொடுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  3. பதில்கள்
    1. அந்தக் கவலை எப்பொழுதும் நமக்கு (எனக்கு) இருக்கும் என்றே எண்ணுகிறேன்.
      நன்றி கவிஞர்.

      நீக்கு
  4. கியூபிசம் என்றாலே என்னவென்று அறிந்திராத எங்களைப் போன்றவர்களோடு ஒப்பிடும்போது தெரிந்துவைத்து எழுத முனையும் உங்களை நினைத்து நீங்கள் பெருமை கொள்ளலாம். அடிப்படை தெளிவாய் இருந்தால் அதன்மேல் கட்டுவது எளிதாய் இருக்குமல்லவா? விரைவில் கியூபிசக் கவிதை எழுத வாழ்த்துக்கள். ஆனால் அது ஒரு கியூபிசக் கவிதை என்பதை எங்களிடம் முன்கூட்டியே அறிவித்துவிடவேண்டும். அப்போதுதானே ரசிக்கமுடியும். :)

    க்யூபிசம் என்னும் பன்முகக் கலை பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான்... நான்... நானே பன்முகக் கவிதை எழுதும் பொழுது நிச்சயம் பெருமையாக சொல்லுவேன் கீதமஞ்சரி அக்கா.

      உங்களின் வருகைக்கும் அழகிய கருத்தொட்டத்திற்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. அட இப்படி ஒரு கவிதை இருக்கா என்ன நமக்கு இதுலாம் தெரியாது பாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் எனக்கும் இதெல்லாம் தெரியாது. பாப்லோ பிகாசோவின் ஓவியத்தைப் பற்றி எழுதியிருந்த புத்தகத்தை ஒரு முறை படிக்க நேர்ந்த போது அதனுடையத் தொடர்ச்சியை அறிய மேலும் தேடியபோது கிடைத்த தகவல்கள் இவை. ஆனால் எப்போதோ படித்தது.
      எதுவும் பதிவிலிடக் கிடைக்காததால் சரி நாம் படித்ததை எழுதுவோமே என்று நினைத்தே எழுதினேன்.
      நன்றி பாஸ்.

      நீக்கு
  6. க்யுபிஸம் பற்றி விளக்கியமைக்கு நன்றி!

    இன்று என் தளத்தில்
    ரேசன் கார்டில் பெயர் சேர்த்தகதை!
    http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_12.html



    பதிலளிநீக்கு
  7. புதிய அறியாத செய்திகள் அருமை Sister

    ஆடு மாடு மேயக்க தான் எங்களுக்கு தெரியும் இதெல்லாம் புதுச இருக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிராமத்து காக்கை அண்ணா...

      உங்களுக்கு ஆடு மாடு மேய்க்கத் தெரியுமா...? ஆனால் எனக்குத் தெரியாதுங்க. அதன் அருகில் செல்லவே எனக்கு பயம். அப்படிப் பார்க்கையில் நீங்கள் பெரிய ஆளுதான்...!!!

      நன்றிங்க அண்ணா.

      நீக்கு
  8. உண்மையில் வெட்கமாக இருக்கிறது அருணா.கியூபிசம் என்ற ஒன்றை இன்றுதான் அறிகிறேன்.நான் அதை எழுதுகிறேன் என்கிறீர்கள்.மனதில் பட்டதை எனக்குத் தெரிந்தமாதிரிக்கு எழுதுகிறேன்.சங்கோசமாகவே இருக்கிறது.தெரியாத ஒரு விஷயத்தை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தோசப் பட்டுக்கொள்ளுங்கள் என் இனிய தோழி ஹேமா...

      நானெல்லாம் மரபுக்கவிதையை ஆசிரியர் ஒருவரிடம் படித்துத்தான் எழுதுகிறேன். நீங்கள் அப்படி இல்லை. உங்களுக்கு இறைவன் கொடுத்த வரப்பிரசாதம் இந்தக் கலை.
      இலக்கியத்திலிருந்து தான் இலக்கணம் வந்தது இல்லையா? உங்களின் பன்முகக் கவிதையும் அப்படித்தான் வந்திருக்கிறது.


      தங்களின் வருகைக்கும் பின்னோட்டத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  9. வணக்கம் நண்பரே,
    நலமா?
    கியூபிசம் பற்றி அறிந்திருக்கிறேன்...
    உணர்வுகளை
    உள்ளங்கை மல்லி கொண்டு
    அள்ளி மலர் வாசம்
    வரவைக்கும்
    அற்புதமான கலையது...
    நீங்கள் தேர்ந்தெடுத்த
    கவிஞர்களும்
    கவிதாயினியும்
    அதற்கு ஒப்பானவர்கள்...
    கவிதாயினி கோவை.மு.சரளாவும்
    இதற்கு ஒப்பானவர்...

    இங்கே கவியே
    சில கவிஞர்களின்
    புகழ் பாடி இருப்பதில் மகிழ்ச்சி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் நண்பரே.
      நலமாக இருக்கிறேன். உங்களின் வருகை கண்டு மகிழ்கிறேன்.

      கவிதாயினி கோவை.மு.சரளா அவர்களின் கவிதைகளைப் படிக்காததால் அவரைப்பற்றிச் சொல்ல வில்லை. இனி நானும் அவரைத் தொடர்கிறேன்.

      நன்றி.

      நீக்கு
  10. ஒரு வழியாக தமிழ்மண ஓட்டுப்பட்டையை நிருவிவிட்டீர்கள் போல! :)

    முதல் ஒட்டு நான் தான் போடுவேன்! வாழ்க.. வளர்க! :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் வரலாற்று சுவடுகள். எனக்கு வலைப்பதிவு நண்பர் தங்கம்பழனி அவர்க்கள் தான் கடைசியில் முயற்சித்து ஒரு வழியாக முடித்துக் கொடுத்தார். அவருக்கு இவ்விடத்தில் நன்றி கூறுகிறேன்.

      ஓட்டு போடுங்கள்... போடுங்கள்....!!
      நன்றி.

      நீக்கு
  11. ஓ...அவர்கள் எழுதும் கவிதைகள் "க்யூபிஸ" கவிதைகளா? எனக்கு அது பற்றி தெரிந்திருக்கவில்லை!

    சகோ.ஹேமா மற்றும் சகோதரர்.செய்தாலி இருவரது கவிதையும் புரிந்துகொள்ள சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் வார்த்தைகள் உபயோகம் வியந்து ரசிக்க வைக்கும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிரமாமாக இருந்தாலும் அதனுள் சுவை இருக்கிறது.

      நானும் அவர்கள் இருவரின் வலைக்குள் போனால் அவர்களின் கவிதையைப் புரிந்து கொள்ள குறைந்தது அரை மணி நேரமாவது எடுத்து கொள்வேன். அப்படியும் சில நேரங்களில் புரியாது... எனக்கு அவ்வளவு தான் அறிவு என்று என்னை நானே திட்டிக்கொண்டு கருத்திடாமல் வெளிவந்து விடுவேன். சில நேரங்களில் “உங்கள் கவிதையின் கருத்து எனக்கு விளங்கவில்லை என்றே “எழுதிவிட்டு வந்திருக்கிறேன்.

      தங்களின் வருகைக்கு நன்றி நண்பரே. (உங்கள் பதிவை நான் இன்னும் படிக்கவில்லை. மன்னியுங்கள்.)

      நீக்கு
    2. இந்த இடுக்கைக்கு உங்களது ஓட்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்று உணர்கிறேன்... உங்களது வாக்கை பயன்படுத்தி நீங்கள் ஒரு ஓட்டு போடுங்கள்! :)

      நீக்கு
    3. நானும் முயற்சி பண்ணினேன் நண்பரே.

      Your Blog http://arouna-selvame.blogspot.fr is not listed in Tamilmanam. Please submit your blog to Tamilmanam என்றே வருகிறது. அதனுள் போனால் ஏற்கனவே பதிவு வெளிவந்து விட்டது என்கிறது....
      எனக்கு ஒன்றும் புரியவில்லை. அதைவிட கோகுல் பிளஸ்சில் போய் அதுவும் சரியாக வராமல் ....
      என்ன செய்வது என்று தெரியவில்லை....!

      நீக்கு
    4. இதுபோல் வர வாய்ப்பில்லையே! ஏனெனில் எங்களால் வாக்குகள் செலுத்த முடியும் போது.. உங்களுக்கு இது போல் வர வாய்ப்பேயில்லை! இப்போது கூட வேறொரு இடுகைக்கு (ie-மனதிற்குள் சுமந்திடுவேன்) எனது வாக்கை செலுத்திப் பார்த்தேன்..செலுத்தமுடிகிறது!

      நீங்கள் வோட் சரியாகத்தான் போடுகிறீர்களா என்பதை உறுதிசெய்யவும்! நன்றி!

      நீக்கு
    5. நண்பரே.....
      நானும் உங்கள் வலையில் நேற்று ஓட்டுப் போட்டேன். சரியாகத் தான் பதிந்தது.
      ஆனால் முதன் முதலில் என் வலையிலேயே ஓட்டு போட வேறு ஏதாவது சிஸ்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை. அப்படி ஏதாவது இருந்தால் தெரிவியுங்கள். நன்றி.

      (டிஸ்கி... எனக்கு 18 ஆகவில்லை. உங்களுக்கெல்லாம் வந்து கள்ள ஓட்டு போடுகிறேன் என்று தமிழ்மணத்திற்குத் தெரிந்துவிட்டது போல...)

      நீக்கு
    6. >>>முதன் முதலில் என் வலையிலேயே ஓட்டு போட வேறு ஏதாவது சிஸ்டம் இருக்கிறதா என்று தெரியவில்லை<<<

      அப்பிடியெல்லாம் ஒன்றும் இல்லை.. எல்லோருக்கும் எப்படி வாக்கு செலுத்துகிறீர்களோ..அதே முறையை தங்களது வலையிலும் பின்பற்றினால் போதுமானது! உங்களுக்கு blogger குறித்து சந்தேகம் இருக்குமானால் http://www.bloggernanban.com/ என்ற தளத்தை பின்தொடருங்கள்! அங்கே உங்களுக்கு போதுமான தகவல் கிடைக்கும்! எளிமையாக அனைவருக்கும் புரியும்படி எழுதிருப்பார்!

      >>>நானும் உங்கள் வலையில் நேற்று ஓட்டுப் போட்டேன். சரியாகத் தான் பதிந்தது<<<

      கவனித்தேன் avvaipatti என்பது தங்களின் தமிழ்மண ID என்று யூகிக்கிறேன் (தவறாக இருந்தால் மன்னிக்க)! இந்த தளத்திற்க்கென்று தமிழ்மணத்தில் தனி ID உருவாக்கிக்கொள்ளுங்கள் அதையே பதிவை இணைப்பதற்கும் வாக்களிப்பதற்க்கும் பயன்படுத்துங்கள்!

      >>>எனக்கு 18 ஆகவில்லை. உங்களுக்கெல்லாம் வந்து கள்ள ஓட்டு போடுகிறேன் என்று தமிழ்மணத்திற்குத் தெரிந்துவிட்டது போல<<<

      ஹா ஹா ஹா... அனைத்து நாட்டு சட்டதிட்டங்களையும் மீறியிருக்கிறீர்கள்.... உங்களை இன்டர்போல் போலிஸ் தேடாமல் இருந்தால் சரி.... :) :) :)

      நீக்கு
    7. ஆமாம் நண்பரே. நான் தான் ”ஔவை பாட்டி” .தமிழ் மணத்திற்கு என்று தனி ஐடி யும் இருக்கிறது. நீங்கள் கொடுத்த தளத்தைப் பின்தொடர்கிறேன். பார்ப்போம்...

      தாங்கள் இது குறித்து செய்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி நண்பரே.

      நீக்கு
  12. அறிந்து கொண்டேன். பகிர்ந்தமைக்கு நன்றி.தொடருங்கள்.

    பதிலளிநீக்கு