“அம்மா... நீங்க ரொம்ப நாளாய்க் கேட்டுக்கினு
இருந்தீங்களே... என் மருமகளை எப்போ எனக்குக் காட்டப்போறேன்னு.... இன்னைக்கி
காட்டுறென்ம்மா...”
முகம் முழுதும் பல்லாகச் சொன்னான் மகன்.
“என்னப்பா சொல்லுறா...?“
“ஆமாம்மா... அவளையும் அவள்
ஃபிரென்சையும் இன்னைக்கி நம் விட்டிற்குத் தேநீர் குடிக்க அழைத்திருக்கிறேன். வர்ற
பெண்கள்ள ஒருத்தி தான் நான் கல்யாணம் பண்ணிக்கப் போற பெண். ஆனால் அதுல அவள்
யாருன்னு இப்போ சொல்லமாட்டேன்... நீங்களே கண்டு பிடிக்கனும்...“ என்று சொல்லிவிடச்
சென்ற மகனை நினைத்து மகிழ்ந்தாள் கிரிஸ்தல்.
இருக்காதா பின்னே...?
கிட்டத்தட்ட முப்பது வயது
ஆகியும் தன் மகன் ஒரு வாழ்க்கைத் துணையைத் தேடாமலேயே தனிமையில் வாழும்
வாழ்க்கையைக் கண்டு அவள் கவலைப்படாத நாளில்லை.
அந்தக்கவலை இன்று போகப் போகிறது.
தன் மருமகளின் வருகையை ஆவலுடன்
எதிர்பார்த்திருந்தாள் கிரிஸ்தல்.
மாலை மணி நாலரை!!
வந்த ஆறு பெண்களும் அழகிகளாக
இருந்தார்கள். அதில் மூன்று பெண்கள் கலகலப்பாகப் பேசிக்கொண்டும்
சிரித்துக்கொண்டும் அடுப்படி வரை வந்து கிரிஸ்தல் செய்து வைத்த தேநீரையும் கேக்கையும்
அவர்களே கொண்டு வந்துவைத்தும் பரிமாறினார்கள்.
மற்ற மூன்று பெண்கள்
கிரிஸ்தலிடம் அதிகமாகப் பேச வில்லை என்றாலும் அவர்களுக்குள் ஏதாவது பேசி
சிரித்தபடியாகத் தான் இருந்தார்கள்.
மொத்தத்தில் அவர்கள் இருந்துவிட்டுச்
சென்ற அந்த ஒரு மணிநேரம் வீடு மிகவும் கலகலப்பாகவே இருந்தது.
அவர்கள் கிளம்பியதும் “இதில்
யாரப்பா என் மருமகள்...?“ மகனிடம் ஆசையாகக் கேட்டாள் கிரிஸ்தல்.
“நீங்களே சொல்லுங்கள்
பார்க்கலாம்..“ என்றான் மகன்.
கிரிஸ்தல் கொஞ்சம் யோசித்துவிட்டு
“என்னுடன் தேநீர் பரிமாறினார்களே... அந்த மூன்று பெண்களில் ஒருத்தி தானே...?“
என்றாள்.
“இல்லைம்மா... உட்கார்ந்து
இருந்த மூன்று பேரில் ஒருத்திம்மா.“ என்றான் மகன்.
“அப்போ... கேக்
சாப்பிட்டுக்கினே... கலகலன்னு பேசிக்கொண்டே இருந்தாளே... அவளா...?“
“அவளும் இல்லைம்மா...”
கிரிஸ்தலுக்கு முகம் மாறிவிட்டது.
“சரி சரி நானே சொல்லுறேன். அந்த மூலையில்
சிகப்பு டீசர்ட் போட்டுக்கினு எதுவும் பேசாமல் அமைதியா அழகா இருந்தாளே...
அந்தப்பெண் தான்ம்மா உன் வருங்கால மருமகள்.“ அவன் பெருமை பொங்கச் சொன்னான்.
“ஓ... அவளா...?“ குரல் கம்மி வெளிவந்த்து.
“ஆமாம்மா.... இப்போ சொல்லுங்க... எப்படி என்
செலட்ஷன்...?“
“ம்... அவளைத் தவிர மற்ற பெண்கள்ள ஒருத்தியை
நீ செலட் பண்ணியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.“
பெருமூச்சியுடன் எழுந்து சென்றாள் கிரிஸ்தல்.
(இந்தக்
கதையைக் பிரென்சு கலாச்சாரத்தின் படி எழுதினேன். ஆனால் எந்த நாடாக இருந்தாலும்
எல்லா மாமியார்களின் குணமும் இப்படித்தான் இருக்கும்)
அருணா செல்வம்.
கல்யாணம் ஆக முதலே ஆரம்பிச்சிட்டா....
பதிலளிநீக்குநல்ல பகிர்வு
பொறாமை.... மகன் அவளை அழகி என்று சொல்லிவிட்டான் இல்லையா...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி சிட்டுக்குருவி.
ஹ ஹா கலக்கல் கதை அன்பரே பேசாம உக்கார்ந்து இருந்ததால பிடிக்கலையோ
பதிலளிநீக்குகலகலப்பாக இருந்தாலும் ரொம்ப பேசுறா... என்பார்கள்...
நீக்குதங்களின் வருகைக்கும் கேள்விக்கும்
மிக்க நன்றி பாஸ்.
உங்க பார்வையில் அந்தப் பெண்ணைப் பற்றிய என்னாம் என்ன? உக்கார்ந்திருந்த பெண்ணில் ஒருவர்? ஏன் மாமியார்க்கு பிகடிக்கவில்லை?
பதிலளிநீக்குவணக்கம் நம்பள்கி.
நீக்குஉங்களின் கேள்வி சரியானது தான்.
பதில்...
பொதுவாகவே தன் மகனின் மனத்தில் பாசம் வைத்து வளர்த்தவள் தாய். மகன் ஒரு பெண்ணை விரும்பும் பொழுது தன் மகனுக்குத் தன் மீது இருக்கும் பாசத்திற்கு பங்கு வருகிறதே என்று ஒவ்வொரு பெண்ணும் நினைப்பது பெண்களுக்கே உரிய இயற்கை குணம்.
இந்தக் கதையில் மகன் வேறு ஒரு பெண்ணைக் காட்டியிருந்தாலும் உதாரணமாக கலகலப்பாகப் பெசியப் பெண் என்று வைத்துக்கொள்வோம்... அவளையும் பிடிக்கவில்லை என்று தான் சொல்வாள் மாமியார் என்ற ஸ்தானத்திற்கு வரும் பெண்!!
அதனால் தான் “மாமியார் குணம்“ என்று தலைப்பு வைத்தேன்.
நன்றி நம்பள்கி.
பதவி கிடைக்கும்போதே முத்திரையும் இடுறாங்க :-))))
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு்ம் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி அமைதிச்சாரல்.
ஹா ஹா ஹா !!!
பதிலளிநீக்குநன்றாகச் சிரித்தீர்களா சோலமலை ஆகாஷ்...
நீக்குநன்றி.
Nalla kathai arunavum france ???mm
பதிலளிநீக்குநன்றி தனிமரம்.
நீக்குநானும் உங்களைப்போல் பிரான்சில் தான் வசிக்கிறேன்.
மாமியாரின் குணத்தை மிக மிக அழகாகப்
பதிலளிநீக்குபடம்பிடித்துக் காட்டி இருக்கிறீர்கள்
தொடரட்டும் நிமிடக் கதைகள்
இப்படி கலகலப்பாக பேசினால் எப்படி பிடிக்கும்... ...க்கும்...
பதிலளிநீக்குtm4
உண்மையிலேயே கலகலப்பாக பேசினாலும் சில மாமியார்களுக்குப் பிடிக்காதுங்க தனபாலன் ஐயா.
நீக்குநன்றி.
கவிதைகள் போல கதையும் இனிக்கின்றன! தொடரட்டும்!
பதிலளிநீக்குநான் கதையிலிருந்து தான் கவிதை
நீக்குஎழுதக் கற்றுக்கொண்டேன் புலவர் ஐயா.
வாழ்த்திற்கு மிக்க நன்றி ஐயா.
மாமியார் குணம் - தலைப்புக்கு ஏற்றாற்போல ஓர் கதை. ;)
பதிலளிநீக்குஒவ்வொருவருக்கு ஒவ்வொரு குணம்.
ஆமாங்க கோபாலகிருடிணன் ஐயா.
நீக்குஆனால் ஒவ்வொருவருடையக் குணமும் இயல்பாய்
இருந்தாலும் அது பதவி என்று வரும் போது
மாறிவிடுகிறது.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி ஐயா.
நல்ல மாமியார்தான்! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குஒவவொரு பெண்ணும் ஒரு காலத்தில்
நீக்குநல்ல மருமகளாக இருந்தவர்கள் தான்
என்பதை பிறகு மறந்து விடுகிறார்கள்...!!!
நன்றி சுரேஷ் ஐயா.
நன்றாக, உத்துப் பாருங்கள்! இந்த பெண்மணி படம் சமீபத்தில் இறந்து போன நன்கு உலகிற்கு தெரிந்த நாம் பேசும் ஒரு மொழியைப் பேசின ஒரு அம்மாள் படம் மாதிரி இருக்கிறது. இந்தப் படம் உங்கள் கதைப் பொருளுக்கு சரியாக அமையாது!
பதிலளிநீக்குஇருக்கலாம் நம்பள்கி. நான் கதைக்கு ஒரு படத்தை இணையத்திலிருந்து இணைத்தேனேத் தவிர... அந்த அம்மாள் யார் என்று அறியவில்லை.
நீக்குநீங்கள் சொன்ன பிறகும் எனக்கு யார் என்று தெரியவில்லை. நான் இந்தப் படம் விசயத்தில் தவறு செய்திருந்தால் மன்னிக்கவும்.
உடனே மாற்றி விடுகிறேன்.
தகவலுக்கும் தவற்றைச் சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி நம்பள்கி.
நம்பள்கி... நீங்கள் மூன்றாவதாக அனுப்பிய பின்னோட்டமும் கிடைத்தது. நன்றி.
நீக்குஅந்தப் படம் குறித்து மேலும் எதுவும் விவாதம் தொடர வேண்டாம் என்று கருதி அப்பின்னோட்டத்தை நான் வெளியிட வில்லை.
மன்னிக்கவும்.
கதை நல்லா இருக்கு அருணா! கதையிலயும் கலக்கறீங்க
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
சும்மாவாவது மகன் சொல்கிற பெண்ணை விட்டு விட்டு இன்னொருத்தியைச் சொல்லி வைக்கிற அம்மாக்களும் உண்டு. ஏதாவது தகராறு வரும்போது ’நாந்தான் அப்பவே சொன்னேனே இவ வேண்டாம்ன்னு’ என்று சொல்லத் தோதாக இருக்கும் !
பதிலளிநீக்குhttp://kgjawarlal.wordpress.com
ஜவகர் ஐயா... நீங்கள் சொன்னக் கருத்தும் சரிதான்.
நீக்குமுதல் வருகைக்கும் தாங்கள் கருதியதைக் கருத்தாகப் பின்னோட்டம் இட்டதற்கும் மிக்க நன்றி ஐயா.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
பதிலளிநீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
நீங்கள் அந்தப் பின்னோட்டத்தை வெளியிடாதது தான் சரி!
பதிலளிநீக்குநன்றி!