பெண்ணின் இதயம் பாவம்தான்!
பேசும் ஆணின் பொய்புரிந்தும்
விண்ணில் தன்னை
மிதக்கவிட்டு
வீணே கனவு கண்டிருக்கும்!
கண்ணால் காணும்
காட்சியையும்
காதால் கேட்கும் வார்த்தையையும்
மண்ணில் விழுந்த
மழைத்துளியாய்
மனத்தில் நிறுத்தி வைத்திருக்கும்!
நன்மை ஒன்றே
நினைத்திருக்கும்!
நட்பு நாடி மகிழ்ந்திருக்கும்!
மென்மை கொண்ட
வார்த்தைகளால்
மேனி யெங்கும் சிலிர்க்கவைக்கும்!
அன்பு பாசம்
காதலென்று
அனைத்தும் வைத்து மகிழ்ந்தாலும்
துன்பம் என்று வரும்போது
துடித்துத் துவண்டு அழுதிருக்கும்!
நல்ல கலைஞன்
கலையிதயம்
நன்றாய் மகிழும் பாராட்டால்!
வல்ல தலைவன்
நல்லிதயம்
வாழ்த்தி நம்மை வாழவைக்கும்!
கல்போல் இதயம்
கொண்டோரால்
கவலை கடலில் மிதக்கவிடும்!
சொல்லும் வார்த்தைச்
சுவைமிகுந்தால்
சுற்றம் போற்றச் சுமைமறக்கும்!
பிடித்துப் பிடித்து
வைத்தாலும்
பெருகும் ஆசை வெள்ளத்தால்
நடித்து நடித்து
வாழ்ந்துவரும்
நடிக மனித நெஞ்சிற்குள்
துடித்துத் துடித்து
வாழவைக்கும்
தூங்கா(து) இருக்கும் இதயத்தை
வடித்து வடித்து
அழவைக்கும்
வாழ்வை இறைவன் தந்ததேனோ?
அருணா செல்வம்.
நீங்கள் சொல்வது (முன்பு) உண்மையாக இருந்தாலும், படிக்கும் கல்வியால் இவை இன்னும் மாற வேண்டும் என்பதே விருப்பம்...
பதிலளிநீக்குமுன்பு என்று இல்லை ஐயா.
நீக்குநான் பொதுவாகவே பெண்ணின் குணங்களை
வைத்து எழுதினேன்.
பெண்கள் என்றுமே மென்மையானவர்கள் தான்... இது தான் உள்கருத்து.
தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி தனபாலன் ஐயா.
உண்மையிலே பெண்ணின் இதயம் பாவம்தான்...
பதிலளிநீக்குதூங்கா இதயம்தான்....
பெண்களுக்குத்தான் பெண்ணின் இதய உணர்ச்சி புரியும் என்பது உங்களின் கருத்தக்களால் புரிகிறது அகிலா மேடம்.
நீக்குநன்றி.
அதீத இதய அழுத்தம் சில சமயங்களில் அழுகையாய்ப் பீறிடும். உண்மைதான். பெண்ணின் மன உணர்வுகளை அழகுத் தமிழால் வடித்தக் கவிதை அபாரம். பாராட்டுகள் அருணா செல்வம்.
பதிலளிநீக்குஉங்களின் புரிதலுக்கும் ஊக்கமூட்டும்
நீக்குஉணர்வுபுர்வமான பாராட்டிற்கும்
மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
பதிலளிநீக்குபெண் இதயம் அப்படித்தாங்க
உங்கள் கவிதையும் தமிழும் அழகு
புரிதலுக்கும் பாராட்டிற்கும் நன்றி தோழரே.
நீக்குmikka arumai.. en kaadhal kavithaiyai vasikka kaanavum www.nisu1720.blogspot.com
பதிலளிநீக்குசொல்லும் வார்த்தைச் சுவைமிகுந்தால்
பதிலளிநீக்குசுற்றம் போற்றச் சுமைமறக்கும்!
very true
நன்றி கவிஞர்.
நீக்குமன்னிக்கணும்... உங்களுக்கு வலைபூ இருப்பதே எனக்கு தெரியாது நண்பரே - உங்கள் பெயரை சுட்டினால் (ப்ரோபைல்) திறப்பதில்லை குழம்பி போனதுண்டு இன்று உங்கள் பெயரை சுட்டினேன் G+ போனது அப்படியே உங்கள் வலைபூ பக்கம்...
பதிலளிநீக்குநல்ல தமிழில் அழகாக உள்ளதை உள்ளபடி சொன்ன விதம் அழகு
தங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி “மனசாட்சி“
நீக்குஅது என்னமோ தெரியலைங்க என் வலைப்பு என் கட்டுபாட்டிற்கு வரவே மாட்டேங்கிறது.
பாராட்டிற்கும் மிக்க நன்றி “மனசாட்சி“.
எல்லோரும் பெண்ணின் இதயத்தைச் சரிவரப்புரிந்துகொள்கிறார்களா என்பதே பெரும் கேள்விக்குறி.அலட்சியம் செய்யும் ஆண்மனங்கள்தான் நிறைய !
பதிலளிநீக்குஅப்படி சொல்லமுடியாது என் இனிய தோழி ஹேமா... பெண்ணின் இதய உணர்வுகளைச் சரிவர புரிந்து கொண்டவர்கள் இவர்கள் இப்படித்தான் என்றே அலட்சியம் செய்கிறார்கள் என்பது என் கருத்து.
நீக்குதங்களின் வருகைக்கும் பெண்ணாக இருந்து உணர்வுடன் இட்ட பின்னோட்டத்திற்கும் மிக்க நன்றி தோழி.
// நல்ல கலைஞன் கலையிதயம்
பதிலளிநீக்குநன்றாய் மகிழும் பாராட்டால்!
வல்ல தலைவன் நல்லிதயம்
வாழ்த்தி நம்மை வாழவைக்கும்!
கல்போல் இதயம் கொண்டோரால்
கவலை கடலில் மிதக்கவிடும்!
சொல்லும் வார்த்தைச் சுவைமிகுந்தால்
சுற்றம் போற்றச் சுமைமறக்கும்!
//
அருமையான வரிகள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி ராஜா அவர்களே.
பதிலளிநீக்கு//பிடித்துப் பிடித்து வைத்தாலும்
பெருகும் ஆசை வெள்ளத்தால்
நடித்து நடித்து வாழ்ந்துவரும்
நடிக மனித நெஞ்சிற்குள்
துடித்துத் துடித்து வாழவைக்கும்
தூங்கா(து) இருக்கும் இதயத்தை
வடித்து வடித்து அழவைக்கும்
வாழ்வை இறைவன் தந்ததேனோ?//
வார்த்தைகள் உங்களுக்கு வசப்படுகின்றன.அழகிய சந்தக் கவிதை .
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி முரளிதரன் ஐயா.
இப்படியும் சில ஆண்கள் இருக்கிறார்கள் என்றாலும் ஆண்களில் நல்ல உள்ளம் கொண்டவர்கள் பலர் உண்டு என்பதை கவனிக்க!
பதிலளிநீக்கு#என்னை மாதிரி நல்லவங்களும் உலகத்துல இருக்காங்கப்பா! (சரி சரி எதுக்கு இப்போ கல்லையெல்லாம் தேடிகிட்டு நான் கிளம்பியர்றேன் ஹி ஹி ஹி)
வாரலாறு... நான் ஆண்களைக் குறை கூறவே இல்லையே....!
நீக்குபெண்ணின் இதயம் பாவம்தான்!
பேசும் ஆணின் பொய்புரிந்தும்...
இது ஆண்களின் இயல்புதானே....எந்த ஆணோ...தன் மனைவியிடமோ அல்லது காதலியிடமோ பொய்யே சொன்னதில்லை என்று இருக்கிறார்களா...? அப்படி அவர்கள் சொன்னால் அதுவும் நிச்சயமாக பொய்தான்.
என்னை மாதிரி நல்லவங்களும் உலகத்துல இருக்காங்கப்பா! (சரி சரி எதுக்கு இப்போ கல்லையெல்லாம் தேடிகிட்டு நான் கிளம்பியர்றேன் ஹி ஹி ஹி)
நான் இதற்கு சின்ன கல்லையெல்லாம் தேட மாட்டேன். பெரிய பாறாங்கல் தான்... நானும் சிரிக்கிறேன்... ஹா ஹா ஹா...
:) :)
நீக்குவரலாற்று சுவடுகள் என்று என்னை அழைப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தால் வசு என்று அழைக்கலாம்
#(வ)ரலாற்று (சு)வடுகள் = வசு! :)
வசு என்பதின் பொருள் கிரணம், தேவர், சூரியன், செல்வம், நீர், நெருப்பு, கன்று, பொருள், பொன் என்னும் நல்ல நல்ல பொருட்களையே குறிக்கிறது.
நீக்குஇனி நான் வசு என்றே அழைக்கிறேன்.
பாருங்க...என்(?) பெயர் கூட நல்ல பொருட்களைத்தான் குறிக்கிறது... இப்போவாவது நம்புங்க நான் நல்லவன் ஹி ஹி ஹி!
நீக்குவசு சார்... நீங்கள் கெட்டவர் என்று நான் சொல்லவில்லையே.... நீங்கள் நல்லவர் தான். ரொம்ப ரொம்ப நல்லவர் தான். (எதுக்கு இப்படி ஐஸ் என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. எல்லாம் காரணமாகத் தான்.)
நீக்குநான் ரொம்ப தேடி தேடி தேடி தமிழ்மண ஓட்டுப்பட்டையை இணைத்துவிட்டேன். நீங்கள் தான் முதல் ஓட்டு போடுவேன் என்று சொல்லியிருப்பதை ஞாபகப் படுத்துகிறேன் நண்பரே... ஹி ஹி ஹி...
உறுதியான வரிகள் ..
பதிலளிநீக்குஉலுக்கும் கேள்விகள் ..
புரிதலின் அவசியத்தை புரிய வைக்கும் வரிகள் ..
தங்களின் முதல் வருகைக்கும்
நீக்குஆழ்ந்த கருத்தோட்டத்திற்கும்
மிக்க நன்றி நண்பரே.
படித்தேன் நண்பரே. நன்றி.
பதிலளிநீக்குபெண்ணின் இதயத்தை சொல்லியிருக்கிறீங்க... ஆனா இப்பவெல்லாம் நீங்க சொன்ன மாதிரி இருக்குதில்லையாமே...
பதிலளிநீக்குஉங்க பக்கத்துக்கு வரும்போது சில பேர் கதைச்சுக்கொண்டது காதுகளில் விழுந்தது...:)
தவறானச் செய்திகளையெல்லாம் காதில் வாங்கக்கூடாது சிட்டுக்குருவி. காதைப் பொத்திக்கொள்ளுங்கள்.
நீக்குஇருந்தாலும் நீங்கள் சொன்னதில் உண்மையும் இருக்கலாம். சிலதையெல்லாம் மறைத்தும் எழுதவேண்டும் இல்லை...?
நன்றி சிட்டுக்குருவி.