திங்கள், 8 ஜூலை, 2013

நான் இப்படி எழுதுவது தவறா? (அனுபவம்)




    நட்புறவுகளுக்கு வணக்கம். நான், என் வலைப்பூவில் கருத்திடும் ஆண்களைப் பொதுவாக “ஐயா“ என்று சொல்லி பதில் எழுதுகிறேன். இது ஒரு சில ஆண்களுக்குப் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். உண்மையில் எனக்கும் இப்படி அழைப்பது பிடிக்கவில்லை தான்!
     தமிழ் ஆசிரியரையோ அல்லது வயதில் மூத்தவர்களை (கிழவர்களை) மட்டும் தான் “ஐயா“ என்று அழைக்க வேண்டும் என்றும், மற்றவர்களை மார்டனாக “சார்“ என்று ஸ்டையிலாக அழைக்க வேண்டும் என்றும் நினைத்திருந்தேன்.
   ஆனால், “ஏழிசை சூழல்“ முனைவர் இரா.திருமுருகன் ஐயா அவர்களைச் சந்தித்த போது தான் நாம் எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று விளங்கியது.
   சொல்கிறேன் கேளுங்கள்.

   ஒருமுறை முனைவர் இரா. திருமுருகன் ஐயாவைச் சந்திக்கப் போனேன். இவரைப்பற்றிச் சொல்ல வேண்டுமானால் பக்கம் பக்கமாகச் சொல்லாம். அவ்வளவு விசயங்களை உள் அடக்கியவர். சுறுக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தமிழுக்கு மிகப்பெரிய தொண்டாற்றியவர். நாற்பதுக்கும் மேற்பட்ட தமிழ் நூல்களை இயற்றியவர். ஆங்கிலம் பிரென்சு மொழிகளில் புலமை பெற்றவர். புல்லாங்குழல் வித்வான். நிறைய பட்டங்களையும் விருதுகளையும் தமிழுக்காகப் பெற்றவர்.
   ஒரு முறை பாண்டிச்சேரி அரசு கொடுத்த “கலை மாமணி“ விருதினை (ஏதோ அரசிடம் இருந்த கோபத்தில்) திரும்பவும் அவ்வரசிடமே கொடுத்து விட்டதாக என் ஆசிரியர் கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். இறந்த பிறகும் தன் உடலைத் தானமாகக் கொடுத்தவர்.
   அப்படிப்பட்ட தமிழ்ப் பற்றாளரை ஒரு முறை என் அம்மாவுடன் சந்திக்கச் சென்றேன். என் தாத்தா இவரின் நண்பராம். பார்ப்பதற்கு வயதானவர் போல் தெரியாததால் அவரைத் தாத்தா என்று அழைக்க மனம் விரும்பவில்லை. சாதாரணமாக நீங்கள், வாங்க, போங்க என்றே அவரிடம் பேசினேன். அவரும் சில இலக்கண உத்திகளைச் சொல்லிக் கொடுத்தார்.
   அப்பொழுது, அவரின் கணிணியில் ஏதோ ஒரு மென் பொருளை ஏற்றுவதற்கு ஒருவர், நல்ல டிப்டாப்பாக வந்தார். அவர் கணிணியில் வேலை செய்யும் பொழுது நானும் அங்கே இருந்ததால் அவரிடம் சில விசயங்களை கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரிடம் பேசும் பொழுது நிறைய “சார்“ போட்டு பேசியிருக்கிறேன். உண்மையில் இது தான் என் வழக்கம். அதனால் அப்படிப் பேசுவது தானாகவே வந்துவிட்டிருந்தது.
   அவர் போன பிறகு, திருமுருகள் ஐயா அவர்கள், என்னிடம் சொல்வது போல் அல்லாமல் பொதுவாக சொன்னார். “தமிழர்களுக்கு எப்படி மரியாதைக் கொடுத்துப் பேசுவது என்றே தெரியவில்லை. நம்ம நாட்டுல வண்டிக்காரன், பிச்சைக்காரனுக்குக் கொடுக்கிற மரியாதை கூட படித்தவர்களுக்குத் தருவதில்லை“ என்றார்.
   எனக்கு சற்று குழப்பம். புரியாமல் அவரைப் பார்த்தேன். “ஆமாம்மா அருணா... நல்லா படிச்சி உயர்ந்த ஒருத்தரை “சார்“ என்று அந்நிய மொழியில் அழைக்கிறார்கள். ஆனால்  சாதாரண பிச்சைக்காரன், வண்டிக்காரனை “ஐயா“ என்கிறார்கள்“. என்றார்.
   “பிச்சைக்காரனை “ஐயா“ என்கிறார்களா?“ என்றேன் ஆச்சர்யமாக.
   ஆமாம்மா. ஒரு வண்டிக்காரனை, “இந்தய்யா... போய்யா... வாய்யா...“ என்று வார்த்தைக்கு வார்த்தை ஐயா போடுகிறார்கள். ஆனால் படிச்சவங்களை, பணத்தால் உயர்ந்தவர்களை ஆங்கிலேயன் விட்டுட்டு போன மொழியிலேயே, அடிமை தனம் மாறாமல் சார்.. சார்.. என்கிறார்கள்“ என்றார்.
   அவர் என்னைத்தான் குத்திக் காட்டிப் பேசுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. இருந்தாலும் என் தவறும் புரிந்ததால் பேசாமல் கிளம்பும் பொழுது “போய் வருகிறேன் ஐயா“ என்று சொல்லி விட்டு கிளம்பினேன். அவர் சிரித்துக் கொண்டார்.

   அதனால் தான் நான் அனைத்து ஆண்களுக்கும் “ஐயா“ என்று சேர்த்து எழுதுகிறேன். இப்போ சொல்லுங்க. “நான் இப்படி எழுதுவது தவறா?“

நட்புடன்
அருணா செல்வம்.
09.07.2013

33 கருத்துகள்:

  1. தவறே இல்லை... அது தான் சிறப்பு...

    முனைவர் இரா.திருமுருகன் ஐயா அவர்கள் நன்றாகவே புரிய வைத்து விட்டார்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  2. ஐயா, சார் மோர் எல்லாம் எதற்கு பேரு தெரிந்தால் உங்கள் உறவினர்களை தவிர மற்ற அனைவரையும் பெயர் சொல்லியே அழையுங்கள் மரியாதை வார்த்தையில் அல்ல மனதில் இருக்க வேண்டும்

    ஜெயலலிதாவை எல்லோரும் அம்மா என்று அழைக்கிறார்கள் ஆனால் உண்மையிலே அவர்கள் அம்மா என்று உள்ள அன்போடதான் அழைக்கிறார்களா என்று சற்று சிந்தித்து பாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வதும் உண்மைதான்.
      இனி அப்படியே செய்கிறேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி “உண்மைகள்“

      நீக்கு
  3. வலைத்தளத்தை பொறுத்தவரை யாரும் ஐயா இல்லை சகோதரி.... இங்கே எழுதுபவர்களில் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவரே... ஆகவே தெரிந்தவர் தவிர்த்து மற்றவர்களை சகோ, நண்பரே என்று அழைத்தாலே போதுமானது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “வலைத்தளத்தை பொறுத்தவரை யாரும் ஐயா இல்லை“...ஙே..ஙே...

      ஸ்கூல் பையன்... அப்போ உங்களுக்கு முப்பத்தைந்து வயதா..?
      அப்போ சரிங்க. இனிமேல் நான் சகோ, நண்பரே என்றே அழைக்கிறேன்.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ஸ்கூல் பையன்.

      நீக்கு
  4. “போய் வருகிறேன் ஐயா“ என்று சொல்லி விட்டு கிளம்பினேன். அவர் சிரித்துக் கொண்டார்.

    தமிழ் ஆசான் மரியாதை கற்றுக்கொடுத்து இருக்கிறார்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க. அவர் நேரடியாக என்னிடம் சொல்லவில்லை என்றாலும்
      எனக்காகத் தான் சொன்னார் என்பதைப் புரிந்து கொண்டேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி இராஜாஜேஸ்வரி அம்மா.

      நீக்கு
  5. தவறல்ல அருணா!ஐயா திருமுருகன் கருத்து சரியே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் நல்ல பதிலுக்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  6. தவறே இல்லை. என்னை அம்மா என்று அழைக்கலாம்! என்னையும் ஐயா போட்டு சிலர் பின்னூட்டுவது பார்த்து சிரிக்கத்தோணும். ஒருவேளை பெயர் குழப்பத்தால் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஒருவேளை பெயர் குழப்பத்தால் இருக்கலாம்.“
      என்னிடமும் இதே பிரட்சனை தான்!

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி துளசி அம்மா.

      நீக்கு
  7. இப்படியொரு சங்கடம் எனக்கும் உருவானது அருணா .ஐயா என்றால்
    வயதானவர்கள் என்று சிலர் புரிந்துகொண்டு வேதனையில் கவிதை கூட வடித்துள்ளனர் :) நானும் உங்களைப் போல் சற்றுக் குழப்பமடைந்தேன் பின்புதான் யோசித்தேன் இவ்வாறு சங்கடப் படுபவர்களைத் திருப்திப் படுத்த அண்ணா என்றே எழுத ஆரம்பித்து விட்டேன் :) ஒருவேளை அவர்களே நினைத்திருக்கலாம் இந்தக் கௌரவம் எமக்கு எதற்கென்று :) அதற்காக இராமனுஜம் ஐயா ,சென்னைப் பித்தான் ஐயா இவர்களை எல்லாம் ஐயா
    என்று அழைப்பதை ஒரு போதும் மாத்தவே மாட்டேன் அருணா :))) குறிப்பறிந்து அந்த ஒரு சிலரை அண்ணா என்று அழைத்துவிடுங்கள் அருணா :))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “ஒருவேளை அவர்களே நினைத்திருக்கலாம் இந்தக் கௌரவம் எமக்கு எதற்கென்று :)“ ஹா..ஹா..ஹா..

      “ஒரு சிலரை அண்ணா என்று அழைத்துவிடுங்கள்“ அழைக்கலாம் தான். ஆனால் எல்லோரும் போட்டோவில் தன்னை மிக மிக சிறியவர்கள் என்று காட்டுவது போல் படம் போடுகிறார்கள். ஒரு சமயம் தம்பியாக இருக்குமோ என்று குழம்பி விடுவதுண்டு.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தோழி.


      நீக்கு
  8. உங்க விருப்பங்க நீங்க எப்படி வேனாலும் கூப்பிடுங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்படி வேண்டமானாலும் என்றால்... (நான் என் நண்பர்கள் ஒரு சிலரை டேய் மச்சி, மாமோய், எருமை, மாம்ஸ்...என்றெல்லாம் கூப்பிடுவேனாக்கும்...)

      அதனால் இது சரியில்லை.
      பேசாமல் உங்களைப் பெயர்விட்டே எழுதுகிறேன்.
      பெரியவாக இருந்தால் மன்னித்து விடுங்கள்.
      நன்றி சங்கவி.

      நீக்கு
  9. அருப்புக்கோட்டை வட்டாரத்துல அப்பாவை ஐயான்னு சொல்லுவாங்க. எங்க ஊர் பக்கம் தாத்தாவை தாத்தான்னு சொல்றது இல்ல. ஐயான்னுதான் சொல்லுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்க ஊர் எதுங்க?
      இங்கே பிரான்சில் பிரென்சு பிள்ளைகள் தங்களின்
      தாத்தாவைப் “பெரிய தந்தை“ என்கிறார்கள்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  10. தவறே இல்லை....
    தாராளமாக அழைக்கலாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      நீக்கு
  11. ஐயா என்றே அழைக்கலாம், ஐயா அவர்களின் கருத்து சரியே.

    பதிலளிநீக்கு
  12. கேள்வி கேட்பது போல் கேட்டு ஐயா என்றுஅழைக்க வேண்டியதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தெரிந்து கொண்டதை இங்கே
      விளக்கினேன்.

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி தமிழ்த் தாகம்.

      நீக்கு
  13. எங்க ஊர்லே பெண்களை நாங்கள் ஆயா என்று மரியாதையாக அழைப்போம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்... உங்க ஊருல எல்லா பெண்களும் வயசானவங்களா
      தான் இருப்பார்களா நம்பள்கி? பாவம் தாங்க நீங்க.

      தவிர நீங்கள் இருக்கும் நாட்டுல தான் அதிகமான ஆயாக்கள்
      இருப்பதாகக் கேள்வியும் பட்டிருக்கிறேன். அப்போ, நிங்க சொன்னது சரிதான்.

      தகவலுக்கு மிக்க நன்றி நம்பள்கி.

      நீக்கு
  14. //எழுதுபவர்களில் பெரும்பாலும் முப்பத்தைந்து வயதுக்குட்பட்டவரே...//

    அட இது என்ன புதுக்கணக்கு! :)

    ஐயா அவர்களின் கருத்தும் சரி....

    நெருங்கியவர்களை பெயர் சொல்லி அழைப்பதும் தவறில்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “அட இது என்ன புதுக்கணக்கு! :)“

      இது என்ன கணக்கு என்றால்...
      அவரை வைத்து (ஸ்கூல் பையன்) அனைவருக்கும்
      வயது மதிப்பீடு கொடுத்துள்ளார் என்று நினைக்கின்றேன்.
      (இந்த வகையில் நீங்கள் எல்லாம் சந்தோஷப்பட்டுக் கொள்ளுங்கள் ஹி ஹி ஹி)

      தங்களின் வருகைக்கம் கருத்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  15. ஸ்.பை. சொன்னது போல எழுதுறவங்கள்ல பெரும்பாலானவங்க முப்பத்தைந்துக்குட்பட்ட வயதினரே... நான்கூட 30 வயசுக்காரன்தான். ஹி... ஹி... ஹி...! என்னைப் பொறுத்தவரை நீங்கள் ஐயா என்று அழைத்தாலும் சரி, சகோ என்றோ, நண்பா என்றோ எப்படி விளித்தாலும் சரி.. நீங்கள் படித்துவிட்டுச் சொல்லும் கருத்தைத்தான் எதிர்பார்ப்பேன். விளியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை நான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “நான்கூட 30 வயசுக்காரன்தான்.“

      (சே, ஆண்களே இப்படியெல்லாம வயதைக் குறைத்துச்
      சொல்லும் பொழுது... எனக்கு இருவது தான் என்று கூட சொல்லாம் போல - இது மைண்ட் வாய்ஸ்)

      “விளியைப் பற்றிக் கவலைப்படுவதில்லை நான்!“

      நல்லது பெரியவரே. நன்றி.

      நீக்கு
  16. நீங்கள் அய்யா என்று சொல்வதில் தப்பில்லை அருணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் முக்கியமாக
      என்னைப் பெயர்விட்டு எழுதியமைக்கு
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  17. ஐயா! என்று அழைப்பதில் தவறேதும் இருப்பதாக தெரியவில்லை! அது ஒரு விளிச்சொல்தானே! அவர்கள் உண்மை சொன்னது போல பெயர்சொல்லி அழைப்பதிலும் தவறில்லை! பகிர்வுக்கு நன்றி! உங்கள் தமிழாசிரியரின் விளக்கம் அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

      நீக்கு