வேலைவிட்டு வந்ததிலிருந்து தன் கணவன் ஏதோ கவலையுடன் யோசனையில் ஆழ்ந்திருந்தது போல் தெரிந்தது கோமதிக்கு.
எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டாரே.... ஏன்...? இன்று என்னவாகியது...?
யோசனையுடன் அருகில் சென்று மெதுவாக விசாரித்தாள். தொடக்கத்தில் “ஒன்றுமில்லை“
என்றவர், அவள் திரும்பவும் கேட்க, சற்று கோபத்துடனும் கவலையுடனும் சொன்னார்.
“இன்னைக்கு
எப்பொழுதும் வர்ற பஸ்சுல தான் வந்தேன். நான் ரெண்டு பேர் உட்கார்ற சீட்டுல
உட்கார்ந்து இருந்தேன். ஒரு ஸ்டாப்புல ஒரு பொண்ணும் ஒரு ஆளும் ஏறினார்கள். அவங்களுக்கு
உட்கார இடம் இல்லை. அந்தப் பொண்ணுக்கு நம்ம பொண்ணோட வயசு தான் இருக்கும். பார்க்கவும்
நம்ம பொண்ணு மாதிரி தான் இருந்தாள். வயிறு கொஞ்சம் உப்புன மாதிரி.... கர்ப்பமாக
இருக்கிற மாதிரி தெரிஞ்சுது.
அதுக்கு
அடுத்த ஸ்டாப்புல என் பக்கத்துல இருந்த ஆள் இறங்கிட்டாரு. அவர் இறங்கியதும், அந்தப்
பெண்ணைப் பார்த்துக் கொண்டே நான் ஜன்னலோரம் நன்றாக நகர்ந்து உட்கார்ந்து கொண்டு
அவள் உட்கார இடம் கொடுத்தேன்.
ஆனால் அவள்
உட்காரவில்லை. நானும், “வந்து உட்காரும்மா...“ என்றேன். அவள் திரும்பி தன் கணவனைப்
பார்த்தாள். அவனும் “போய் உட்காரு“ என்றான். ஆனால் அவள் உட்காராமல் என்னைப் பார்த்துப்
“பரவாயில்லைங்க“ என்று சொல்லி விட்டு நின்று கொண்டே வந்தாள்.
எனக்குத்
தான் என்னவோ போல் இருந்தது. கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு அடுத்த ஸ்டாப் வந்தபோது எழுந்து
நின்று கொண்டேன். பிறகு அவளும் அவனும் அமர்ந்து கொண்டார்கள். அதே சமயம்
அவர்களுக்குப் பின்பிருந்த சீட்டு காலியாகவும் நான் அதில் அமர்ந்து கொண்டேன்.
அப்போ
அந்தப் பெண் அவள் கணவனிடம் சொன்னாள்... ”என்னங்க நீங்க. அந்த ஆள் இடம் விட்டதும் நீங்களும் உடனே
என்னை உட்கார சொல்லிட்டீங்க.” என்றாள்.
”ஏன் அதனால் என்ன...?” அவன் கேட்டான்
”அதனால என்னவா...? கேட்க
மாட்டீங்க. இப்போதெல்லாம் சின்ன பையன்களைக் கூட நம்பிடலாம். இந்த மாதிரி கிழடுகளை
நம்பவே கூடாதுங்க...” என்றாள். எனக்கு அதிலிருந்து மனசு என்னவோ போல் ஆகிவிட்டது.
நான் என் பொண்ணு மாதிரி நினைச்சேன். சே.... ஏன் தான் பொண்ணுங்களுக்கு இப்படி ஒரு
கோண புத்தி வருதோ...“ தலையில் கைவைத்த படி கவலையாகச் சொன்னார் சிவராமன்.
“சரி
விடுங்க. அவள் உங்களோட தோற்றத்தைப் பார்த்துப் பயந்திருப்பாள். அவளுக்கு உங்களோட
வயசு தெரியாது இல்லையா...“ என்று சொல்லி விட்டு சிரித்த கோமதி அந்த சூழலின்
இறுக்கத்தைத் தளர்த்தினாள்.
கல்லூரி போய்விட்டு வந்த விமலா கோபமாக
புத்தகத்தை வைத்துவிட்டு அமர்ந்தாள். “என்னம்மா... என்னவாச்சி?“ அவளின் தலையைத்
தடவி விசாரித்தார் சிவராமன்.
“பாருங்கப்பா.... இன்னைக்கு பஸ்சுல இடம் இல்லைன்னு ஒரு வயசானவர் பக்கத்துல
போய் உட்காந்தேன். ஆனால் அந்த கிழம் பண்ணின அதம் இருக்குதே.... சே...“ கோபமாக
முகம்சுளித்தாள். “உடனே எழுந்து, நல்லா நாலுபேருக்குத் தெரியிற மாதிரி திட்டுறது தானே...“
கோமதி கோபமாகச் சொன்னாள்.
“இல்லம்மா...
அவரைப் பார்க்க நம்ம அப்பா மாதிரி தெரிந்தார். அவரை எல்லார் முன்னாடியும் அவமானப்
படுத்த பிடிக்கல. பேசாம எழுந்து நின்னுக்கினே வந்தேன்“ என்று சொல்லிவிட்டு எழுந்து
போனாள்.
சிவராமன்
மனைவியைப் பார்த்தார். கோமதி அவரை அர்த்தத்துடன் பார்த்தாள். அவர் புரிந்து தலையாட்டினார்!
ஒவ்வொரு நிகழ்வும்
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.
அருணா செல்வம்.
31.07.2013
சில பேர் செய்யும் தகாத செயல்களால் ஒட்டு மொத்த சமுகத்தையும் சந்தேக கண்களால் பார்க்க வேண்டியது அவலமே....
பதிலளிநீக்குசிறுகதைகளை வித்தியாம் வித்தியாசமாக தரும் உங்களுக்கு பாராட்டுக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி “உண்மைகள்“
(பாவம் நீங்கள். நான் பதிவு இட்டதும் ஏதாவது கலாய்க்கலாம் என்று வந்து ஏமார்ந்து விடுகிறீர்கள். அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
நிறைய வேலையாக இருக்கிறேன். கொஞ்சம் பொருங்கள். நீங்கள் வந்து என்னைக் காலாய்ப்பது போல் நகைச்சுவையாக பதிவு இடுகிறேன். நன்றி)
நாடு கெட்டுக் கிடக்கின்றது என்று நல்லவர்களும் ஒதுங்கிச்
பதிலளிநீக்குசெல்லும் நிலைதான் இன்று இந்த அவலம் தீராதா .....!!!!
அருமையான படைப்பு வாழ்த்துக்கள் தோழி .
தீரும் என்றா நினைக்கிறீர்கள்...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
என்ன செய்வது யாரையும் நம்ப முடியவில்லை.நாம் என்ன நினைக்கிறோமோ அதற்குமாறாகத்தான் நடக்கிறது.
பதிலளிநீக்கு“நாம் என்ன நினைக்கிறோமோ அதற்கு மாறாகத்தான் நடக்கிறது.“
நீக்குஅப்படியென்றால் நாம் பேசாமல் கெட்டதை நினைப்போம்....)))
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.
நல்ல சிறுகதை......
பதிலளிநீக்குத.ம. 3
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
கண்டும் காணமல் இருக்கத் தூண்டும் உலகம்.என்ன செய்ய உங்களுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஒவ்வொரு நிகழ்வும் ஒரு பாடம் தான்... உணர வேண்டும்...
பதிலளிநீக்குநல்லதொரு கதை... வாழ்த்துகள் சகோதரி...
நேரம் கிடைப்பின் :http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Try-Training-Success.html
பதிலளிநீக்குபார்த்துவிட்டேன். நன்றி.
நீக்குநிஜம்தான். காலேஜ் போற பசங்களைக்கூட நம்பிடலாம். ஆனா, ரிட்டையர்டு ஆன கேசுலாம் படுத்துற பாடு இருக்கே! ச்ச்சே சொல்லி மாளாது. அதுல்லாம் பெண்ணாய் பிறந்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.
பதிலளிநீக்கு“அதுல்லாம் பெண்ணாய் பிறந்தவங்களுக்கு மட்டும்தான் தெரியும்.“
நீக்குநீங்கள் சொல்வது உண்மை தான் தோழி.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி.
அருமையான கதை...உலகத்தை ஆழமாகக் கவனிக்கிறீர்கள் எனப் புரிகிறது....
பதிலளிநீக்குநான் கவனிக்க வில்லை என்றாலும் கெள்விப்படுவதை வைத்தும் எழுதுகிறேன்.
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
அருமையான சிறுகதை! ஒரு சிலரின் தவறுக்கு ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படுகிறார்கள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
(சுரேஷ்.... நான் உங்களைப் பெயர்விட்டு அழைத்ததற்காகத் தானே படத்தை மாற்றி விட்டீர்கள். பழைய படத்தில் இன்னும் நன்றாக இருந்தீர்கள்.... ஐயா)
//ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.//
பதிலளிநீக்குஉன்மைதான்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி பித்தன் ஐயா.
ஒவ்வொரு நிகழ்வும் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாடத்தைப் புகட்டுகிறது.
பதிலளிநீக்குநான் சொன்னது உண்மைதானுங்க...
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
மாறுபட்டக் கண்ணோட்டத்தையும் எண்ணவோட்டத்தையும் நேர்த்தியாய்ப் படம்பிடித்த கதைக்குப் பாராட்டுகள் அருணாசெல்வம்.
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.
ஒரு சிலரால் எவரையுமே நம்ப மறுக்கிறது மனம்.நல்லதொரு கதை அருணா !
பதிலளிநீக்குஎன் இனிய தோழி ஹேமா...
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி.
ஏன் மேலை நாடுகளில் ஒரு பெண் அருகில் உக்காந்தாலும்...அவள் முழுவதும் அவுத்துப் போட்டு உக்கந்தாலூம் ஏன் எவனும் அந்த பெண்ணின் துணியை கூட தொடுவதில்லை! இது இங்கு எல்லா வயதினருக்கும் பொருந்தும்.!ஏன் இந்தியர்கள் மாதிரி பெண்களை சீண்ட தைரியசாலிகள் இங்கு இல்லை-காரணம் ஜயில் களி, sorry beef.
பதிலளிநீக்குஇந்தியாவில் வயதானவர்கள் என்றால் பெரிய மனிதர்கள், நல்லவர்கள் என்ற அந்தஸ்து கொடுப்பதால்..அவர்கள் பெண்களிடம் விளையாடுகிரார்கள் . அவர்களை இங்கு வந்து விளையாட சொல்லுங்கள்...ஒவ்வொரு சீண்டலுக்கும் மூன்று வருடம் போட்டு தாக்கிவிடுகார்கள்!
ஆகவே, தவறு நாம் நாட்டு மக்கள் மீது...அவர்கள் இயற்றும் சட்டம் மீது...மக்கள் செய்யம் ஊழல் மீது..
unmaithaan...
பதிலளிநீக்கு