செவ்வாய், 2 ஜூலை, 2013

கனவே கனவே ஓடி..வா!!




வட்ட நிலவு வரும்வேலை
   வளமை தெரிய நகையணிந்து
திட்ட ஆட்கள் யாருமின்றி
    திருட்டு பயமோ எதுவுமின்றி
மெட்டு போட்டு பாடியேநான்
    மேனி சிலிர்க்க நடக்கவேண்டும்!
திட்டம் போட்ட காந்திசொல்தான்!
    தேனாய்க் கனவில் வரவேண்டும்!

கனவே கனவே ஓடி..வா..வா!
    கவிதை பிறக்க தேடி..வா..வா!
மனத்தில் உள்ள ஆசையெல்லாம்
    மௌனம் இன்றிப் பேச..வா..வா!
இனத்தில் இருக்கும் இன்னலினை
   இனிய கனவில் போக்க..வா..வா!
மனமே உன்தன் மனம்மகிழ
    மகிழ்ச்சிக் கடலாய்ப் பொங்கி..வா..வா!

வா..வா என்றே கூப்பிட்டும்
    வராத கனவு காட்சியெல்லாம்
பூவாய் மனத்தில் மலர்ந்திருக்க
   போதும் என்றே நினைவலையோ
தீவாய்க் காட்டி சிரிக்கிறது!
   தேவை இல்லை இக்கனவு!
நாவால் நவின்ற காட்சியெல்லாம்
   நலமாய் உலகில் நடக்கவேண்டும்!

நடக்கும் காலச் சூழலிலே
   நடக்கா(து) எதையும் விரும்பிவிட்டு
இடக்கு மடக்காய் கனவுகண்டே
   இன்பம் என்ன கண்டிடுவோம்?
நடக்கும் பொழுது நடக்கட்டும்!
   நம்மின் கனவில் இவைநடந்தால்
தொடரும் துன்பம் தனைமறந்து
   தூங்கும் பொழுதில் மகிழ்ந்திருப்போம்!!

அருணா செல்வம்
16.09.2011

28 கருத்துகள்:


  1. வணகக்ம!

    கமழும் கவியில் கனவை வடித்தீா்!
    அமுதின் சுவையை அளித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சின்னக் குறளுக்குச் சீருடன் சொல்லிநின்றேன்
      நன்றி! நனிநன்றி என்று!

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக் குறளுக்கும்
      மிக்க நன்றி கவிஞர்.

      நீக்கு
  2. தொடரும் துன்பம் தனைமறந்து
    தூங்கும் பொழுதில் மகிழ்ந்திருப்போம்!!//
    தூக்கம் உள்ளபோது உறங்க வேண்டும்
    தினம் உண்மையில்லாக் கனவுவேண்டும்.
    ஆனால் எப்பொழுதும் உங்கள் கவிதை போதும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உறங்கும் பொழுதாவது மகிழ்ச்சியாக இருப்போமே.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  3. \\இனத்தில் இருக்கும் இன்னலினை
    இனிய கனவில் போக்க..வா..வா!
    மனமே உன்தன் மனம்மகிழ
    மகிழ்ச்சிக் கடலாய்ப் பொங்கி..வா..வா!\\
    கனவை வரவேற்கும் வரிகளில் சொக்கினேன். இனிமையும் அழகும் இணைந்த கவிதை. கனவிலாவது பெண்மன ஏக்கங்களும் ஆசைகளும் நிறைவேறட்டும். வாழ்த்துக்கள் அருணாசெல்வம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி கீதமஞ்சரி அக்கா.

      நீக்கு
  4. // நாவால் நவின்ற காட்சியெல்லாம்
    நலமாய் உலகில் நடக்கவேண்டும்...! //

    சிறப்பான வரிகள் பல... வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  5. தங்களின் பார்வைக்கு :

    http://dindiguldhanabalan.blogspot.com/2013/07/Moon-Blossom.html

    நன்றி...

    பதிலளிநீக்கு
  6. உங்கள் கவிதைகளையெல்லாம் தமிழ் பாடப் புத்தகத்தில் போடலாம் நன்றாக இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் பாடப் புத்தகத்திலா...?

      அப்புறம் யாருமே படிக்க மாட்டாங்க “உண்மைகள்“

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி.

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      நீக்கு
  8. கனவு என்பதும் ஒரு விதை போலத்தான்..விதை ஒருநாள் நிச்சயம் விருட்சமாகும்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி ஐயா.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி சங்கவி ஐயா.

      நீக்கு
  10. நடக்கும் பொழுது நடக்கட்டும்!
    நம்மின் கனவில் இவைநடந்தால்
    தொடரும் துன்பம் தனைமறந்து
    தூங்கும் பொழுதில் மகிழ்ந்திருப்போம்!!

    சரியாக சொன்னிங்க தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும்
      மிக்க நன்றி சசிகலா.

      நீக்கு
  11. நடந்திட வேண்டுமே நாம்காணும் கனவுமே
    படர்ந்திடும் சுகமொடு பிறந்திடும் ஆசைகளே
    கடனென வாழ்வதும் கலங்கியே சாவதும்
    உடனது மாறிடின் உணர்ந்திட மகிழ்வதே!

    தோழி! அருமை உங்கள் கவிவரிகள்!
    நீங்கள் காணும் கனவுகள் பலிக்க வரங்கேட்கிறேன்
    கிடைத்திடட்டும்... நடந்திடட்டும்...:).

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடனென வாழ்வதும் கலங்கியே சாவதும்
      உடனது மாறிடின் உணர்ந்திட மகிழ்வதே!“

      அழகிய வரிகள்.

      நன்றி தோழி.

      நீக்கு
  12. நடக்கும் காலச் சூழலிலே
    நடக்கா(து) எதையும் விரும்பிவிட்டு
    >>
    அப்புறம் மனம் வெதும்பிக்கிட்டு இருக்கனும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மனம் வெதும்பியதால் தான் கனவு வந்தது தோழி.

      நன்றி ராஜி மேடம்.

      நீக்கு
  13. "நடக்கும் பொழுது நடக்கட்டும்!
    நம்மின் கனவில் இவைநடந்தால்
    தொடரும் துன்பம் தனைமறந்து
    தூங்கும் பொழுதில் மகிழ்ந்திருப்போம்!!

    கனவு அழகிய கவியாகி மகிழ்ச்சியை தருகின்றது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி மாதேவி தோழி.

      நீக்கு