தானாய் வந்த கனவினிலே
தட்டுத் தட்டாய் இனிப்புவகை!
தேனாய் நினைக்க இனிக்கின்ற
தேர்ந்து செய்த தங்கநகை!
மீனாய் மனதோ துள்ளிவிட
மின்னும் பட்டுச் சேலைவகை!
வீணாய்ப் போன ஆசையெல்லாம்
விருந்தாய்க் கனவில் தெரிந்ததம்மா!
நானாய் எதையும் கேட்கவில்லை!
நன்றாய்த் தெரிந்த காட்சியெல்லாம்
தூணாய்ப் பொதிந்து நின்றாலும்
தூங்கி எழுந்து பார்த்தாலோ
மானாய்க் குதித்து மறைந்ததம்மா!
மனத்தில் உள்ள ஆசையெல்லாம்
வானாய் விரிந்து கிடக்கையிலே
வந்த கனவோ துளியம்மா!
குட்டிக் குட்டி ஆசையெல்லாம்
குடைந்து தலையில் குவிந்திருந்தும்
செட்டி பிடுங்கும் வட்டிபோல
சேர்ந்து போகும் அசலின்றி!
எட்டிப் பிடிக்க முடியாத,
எண்ண முடியா ஆசைகளைக்
கட்டிப் பாட்டில் பதிக்கின்றேன்!
கனவில் சுகத்தைக் காண்கின்றேன்!!
அன்பு என்ற பெயராலே
அடிமை யானப் பெண்களெல்லாம்
தன்..கை நம்பி நடக்கவேண்டும்!
தவறிக் கூடத் தலைவரெல்லாம்
தன்..கை நீட்ட கூசவேண்டும்!
தவறு செய்யும் மனிதரிடம்
என்..கை வரிசை காட்டிவிட்டு
எழுத்தில் அதைநான் பதிக்கவேண்டும்!
செந்தேன் மொழியைப் பிள்ளையெல்லாம்
சேர்ந்து பேச கேட்கவேண்டும்!
என்றன் எழுத்தை அரசாங்க
ஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!
(கனவு தொடரும்)
அருணா செல்வம்
02.08.2011
என்றன் எழுத்தை அரசாங்க
பதிலளிநீக்குஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!
வாழ்த்துக்கள் தோழி விரைந்து கனவெல்லாம்
நினைவாகட்டும் ! :)
இதெல்லாம் நடக்கும் என்கிறீர்கள்...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
///கனவிலாவது நடக்கவேண்டும்!! ///
பதிலளிநீக்குஅப்படி செய்தால் இந்த பெண்ணிற்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி என்று சொல்லப் போகிறார்கள்
ஹா ஹா ஹா...
நீக்குஏன்.... உண்மையில் இந்தப் பெண்ணிற்கு கால்கள் இல்லையோ... என்று கூட நினைப்பார்கள் தான் “உண்மைகள்“
தவறிப்போய் இப்படி தலைப்பைக் கொடுத்துவிட்டேன்.
பதிலளிநீக்குகனவெல்லாம் நினைவாக வேண்டும் என்று தலைப்பு வந்திருக்க வேண்டுமோ?
அது சரி தலைப்பு எப்படியும் இருந்து போகட்டும் ஒகே ஆனால் கவிதை மிக நன்றாக இருக்கிறது
இதெல்லாம் நினைவில் நடக்க முடியாது. அதனால் கனவிலாவது
நீக்குவந்து போகட்டுமே... என்ற ஆசையில் தான் கேட்டேன்.
“உண்மைகள்“... உங்களின் வலையை நீங்கள் மட்டுமே
படித்துக் கொள்வீர்களா...?
நான் எப்பொழுது வந்தாலும் துள்ளிக்கொண்டே தான் இருக்கிறது.
எனக்காக துள்ளாத அளவு கொஞ்சம் கட்டிப்போடுங்க. எத்தனை முறை தான் வந்து ஏமாறுவது?
நன்றி “உண்மைகள்“
அளவான ஆசைகள் நிறைவேறும்... நிறைவேறட்டும்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்...
இது அளவற்ற ஆசை இல்லைங்க.
நீக்குசாதாரண சின்ன சின்ன ஆசைகள் தான்....
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தனபாலன் அண்ணா.
தூங்கி எழுந்து பார்த்தாலோ
பதிலளிநீக்குமானாய்க் குதித்து மறைந்ததம்மா!//கனவுவிதி அப்படி.
ஆமாங்க.... இனிமேல் விழித்துக்கொண்டே
நீக்குகனவு காண வேண்டியது தான்.
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி கவியாழி ஐயா.
//விந்தை யாக விலைவாசி
பதிலளிநீக்குவிரும்பும் அளவு குறையவேண்டும்!//
உண்மையில் கனவில்தான் நடக்கவேண்டும்.
கவிஞர்களுக்கு ஒரு வசதி தன ஆசைகளை கவிதையாக்குவது. இவை எல்லாம் நடக்காது போனாலும் அழகான கவிதை கிடைத்தது
நினைவில் நடக்காது என்பது
நீக்குஉங்களுக்கும் தெரிந்து விட்டதா?
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி மூங்கில் காற்று.
கனவு நனவாக வாழ்த்துக்கள்..., எல்லோரும் பாடுபட்டா இதெல்லாமே நம்ம ஜென்ரேஷன்லேயே நடந்துடும். இல்லாட்டி..., சரி, நம் பிள்ளைகளாவது இதெல்லாம் அனுபவிக்கட்டும் அருணா!
பதிலளிநீக்குவாரிசுகள் ஆள்வதால் நம்
நீக்குவாரிசுகளுக்கும் இதெல்லாம்
நினைவில் கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.
நன்றி தோழி.
.. செந்தேன் மொழியைப் பிள்ளையெல்லாம்
பதிலளிநீக்குசேர்ந்து பேச கேட்கவேண்டும்!
என்றன் எழுத்தை அரசாங்க
ஏட்டில் கண்டு மகிழவேண்டும்!
சந்தம் கொண்ட திரைப்பாடல்
தமிழை மட்டும் ஒலிக்கவேண்டும்!
விந்தை யாக விலைவாசி
விரும்பும் அளவு குறையவேண்டும்!...
இந்த கனவு நிச்சயம் நினைவாகும்...
உங்களின் வாக்குப் பலிக்கட்டும்.
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
மிக்க நன்றி சங்கவி ஐயா.
அன்பு என்ற பெயராலே
பதிலளிநீக்குஅடிமை யானப் பெண்களெல்லாம்
தன்..கை நம்பி நடக்கவேண்டும்!
நிஜத்திலேயே நடக்க வேண்டும் தோழி. சிறப்பு.
நடந்தால் நன்மைதான்.
நீக்குநன்றி சசிகலா.
மனதிற்கு அதிகக் களிப்பூட்டும் கனவுகள்
பதிலளிநீக்குதித்திக்கும் சந்தத்தில்...
கரும்பு தின்னக் கூலியா ?
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 8
பதிலளிநீக்குநன்றி ஐயா.
நீக்குநல்ல கனவுகள்! நிறைவேற வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குகனவினில் மட்டும் காண்பது வோஇவை
பதிலளிநீக்குநனவினில் நிகழ்திட நல்லதன் றோநம்
துயர்கள் அகன்றிட தொடரும் வாழ்வு
துலங்கியே துளிர்த்திடும் உயர்ந்து நன்றே!
கனவு மெய்ப்படவேண்டும் தோழி!
வாழ்த்துக்கள்!
நினைவில் அனைத்தும் நடப்பதில்லை! நெஞ்சுள்
நீக்குபனையளவாய் ஆசை படர்தல் - வினைதான்!
தினையளவே நான்கேட்டேன்! தீதியின்றி வந்தால்
நனைந்திடும் நன்றாய் மனம்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி தோழி.
கனவுகள் நிறைவேறினால் !!!
பதிலளிநீக்குநீங்கள் விரும்புவதுபோல கிடைக்கட்டும் வாழ்த்துகள்.
கனவுகள் நிறைவேறினால்....
நீக்குகடமைகள் முடிந்துவிடும்.
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி மாதேவி தோழி.
நிறைய ஆசைகள் கனவில்தான் நடக்கும் போல!
பதிலளிநீக்குகனவிலாவது நடக்குமா...?
நீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி ஸ்ரீராம் ஐயா.
நல்ல கனவு... தொடரட்டும் கனவு நினைவாகும் வரை....
பதிலளிநீக்குஐயோ... அதுக்காக கனவு கண்டுகொண்டே
நீக்குஇருப்பதா...?
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
மிக்க நன்றி நாகராஜ் ஜி.
nalla kanavu...
பதிலளிநீக்கு