சனி, 6 ஜூலை, 2013

கண்ணொருத்தி காட்டுகையில்...!




கண்ணொருத்தி காட்டுகையில் கடுகாம் இம்மண்!
   காற்றாகி ஊற்றாகி காதல் பாயும்!
முன்னொருத்தி செல்லுகையில் முந்திச் சென்று
   முந்நூறு கவிபாடித் துள்ளி ஓடும்!
பெண்ணொருத்தி முன்னாலே உண்மை யில்நான்
   பித்தாகிப் பேக்காகிப் போனேன்! அன்பே
உன்னொருத்தி கண்பார்வை பட்டால் போதும்
   உயர்கவிகள் ஒருகோடி படைப்பேன் நாளும்!!

அருணா செல்வம்.

29 கருத்துகள்:

  1. உயர்கவிகள் ஒரு கோடி படைப்பேன் நாளும்!!!....

    ரசித்தேன் அருணா.... தொடரட்டும் கவிதைகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி நாகராஜ் ஜி.

      நீக்கு
  2. உயர்கவிகள் ஒருகோடி படைப்பேன் நாளும்!!
    >>
    அப்போ இந்த இம்சை தொடருமா?!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. (ராஜி மேடம்... ஏன் ஸ்பேமில் போய் அமர்ந்துவிட்டீர்கள். இருந்தாலும் தேடி கண்டுபிடித்து விட்டேன்.)

      “அப்போ இந்த இம்சை தொடருமா?!“

      இல்லையா பின்னே... காதல் கவிதைகளை இரசிக்கும்
      இரசிகர்கள் இருக்கும் வரையில் இந்த “இன்ப இம்சை“ தொடரும் தான்.

      நன்றி மேடம்.

      நீக்கு
  3. பார்வை ஒன்றே போதுமே...!
    பல்லாயிரம் சொல் வேண்டுமா...?

    வாழ்த்துக்கள் சகோதரி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தனபாலன் அண்ணா.

      நீக்கு
  4. உன்னொருத்தி கண்பார்வை பட்டால் போதும்
    உயர்கவிகள் ஒருகோடி படைப்பேன் நாளும்!!// பாவையின் பார்வை படலைன்னா தெருக்கோடியில் விழுந்து கிடப்பேன் ஹி ஹி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. “பாவையின் பார்வை படலைன்னா தெருக்கோடியில் விழுந்து கிடப்பேன் ஹி ஹி....“

      அட இதுவும் நல்லாயிருக்கே... (இதை வைத்தே ஒரு பாடலை
      எழுதி விடுகிறேன்.)

      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
      மிக்க நன்றி ராபர்ட் ஐயா.

      நீக்கு
  5. பார்வை ஒன்று சொல்லுமே... மனதின் ஆயிரமாயிரம் வார்த்தைகளை !!

    அழகான வரிகள் தோழி.வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தோழி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி கவியாழி ஐயா.

      நீக்கு
  7. // உன்னொருத்தி கண்பார்வை பட்டால் போதும்
    உயர்கவிகள் ஒருகோடி படைப்பேன் நாளும்!!//
    அட.. அட... பார்வைக்கே கோடி படைப்பு. ..:)
    அந்தக் கண்ணழகி எங்கை இருக்கா.. கூட்டியாந்து உங்க கூட வைச்சிருங்க.
    தினமும் கோடியா கொட்டுவதை நாங்களும் அனுபவிக்கமலாமெல்லே...:).

    அருமை. அசத்தல். மிகவே ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா... உண்மைன்னு நெனைச்சிட்டீங்களா...?

      இதெல்லாம் சும்மா. பொழுது போகவில்லை என்றால்
      இப்படித்தான் எதையாவது எழுதுவேன்.

      (கவிஞர் கி.பாரதிதாசன் அவர்கள் எழுதிய “காதல் 40“, “ஏக்கம் 100“ போன்ற கவிதை நுர்ல்களைப் படித்ததால் வந்த தாக்கம் தான் இந்த காதல் கவிதைகள். இதனால் எனக்குக் கிடைத்த அத்தனைப் பாராட்டுகளும் அவருக்கே சமர்ப்பணம்)

      நன்றி தோழி.

      நீக்கு

  8. வணக்கம்!

    பித்தாகிப் போக்காகிப் போனேன் எனுவிருத்தம்
    முத்தாகி மின்னும்! மொழியோங்கச் - சத்தாகும்!
    வித்தாகிக் காதல் விழாநடத்தும்! செந்தமிழின்
    சொத்தாகி மின்னும் சுடா்ந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செந்தமிழின் சொத்தாய்ச் செழிக்கும் கவிஞருக்கு
      வந்தனை செய்தேன் வளர்ந்து!

      நன்றி கவிஞர்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சீனி ஐயா.

      நீக்கு
  10. கவிதை அருமையாக உள்ளது.
    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி தமிழ்த் தாகம்.

      நீக்கு
  11. பெண்ணொருத்தி முன்னாலே உண்மை யில்நான்
    பித்தாகிப் பேக்காகிப் போனேன்!

    பார்வை போதுமே பல கவிதை படைக்க...

    அருமையான கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி குமார் ஐயா.

      நீக்கு
  12. உங்கள் வரிகளில் நான் பித்தாகி பேக்காகிப்போனேன்...

    அற்புத வரிகள்... கலக்குங்க..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படிங்களா...? மிக்க சந்தோஷம்.

      தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி சங்கவி ஐயா.

      நீக்கு
    2. ஐயா... வா??? ஐய்யயோ நான் யூத்துங்க...

      நீக்கு
    3. அப்போ... என்னவென்று எழுதுவது?
      பெயர் சொல்லி எழுதலாமா...? ஆனால்....
      நான் உங்களை விடச் சின்னவளாக இருக்கிறேன். பரவாயில்லையா?

      நன்றி.

      நீக்கு
  13. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
    மிக்க நன்றி சுரேஷ் ஐயா.

    பதிலளிநீக்கு
  14. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
      மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு