கலக நாரதர் கடனைச் செய்ய
உலக நாதனை உமையுடன் சுற்றியும்
அன்னை தந்தைதாம் அகிலம் என்று
முன்னைக் கணபதி பெற்றது மாங்கனி!
உலக மக்கள் உறவு கொள்ளவும்
பலவும் கற்றுப் பயன்தனைப் பெறவும்
வையகம் அறிந்திட வைத்த இடத்தில்
கையகம் பற்றிடக் காட்டிடும் கணினி!
தும்பிக் கைதான் துயரம் தீர்க்கும்!
நம்பிக் கையோ நான்கும் நல்கும்!
தூரித வேலை தொட்டதும் துளிர்க்கும்!
காரியச் சித்திநீ! கவிஞரின் சிந்தனை!
வெட்டியும் ஒட்டியும் விந்தைதான் உன்முகம்!
எட்டுத் திக்கிலும் ஏற்கும்! இயந்திரம்
வெட்டியும் ஒட்டியும் வேண்டிய வேலையும்
தொட்டதும் முடியும் துணிவுதான் உன்நயம்!
காலம் காலமாய் கவிஞர் போற்றினர்!
காலம் மாறினும் கவிதையும் மாறுமா?
எலியுடன் இருக்கும் இருவரும் இணையா?
கலியுகக் கணினி..நீ! கணபதி தானோ!!
(அகவல்)
அருணா செல்வம்.
கணினி கணபதி வித்தியாச ஒப்பீடு. எங்கோ போய்விட்டீர்கள்? பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி மூங்கில் காற்று.
காலம் காலமாய் கவிஞர் போற்றினர்!
பதிலளிநீக்குகாலம் மாறினும் கவிதையும் மாறுமா?//சரியாச்சொன்னீங்க
தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி கவியாழி ஐயா.
ரசித்தேன்... படமும் அருமை...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோதரி...
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தனபாலன் அண்ணா.
உலக மக்கள் உறவு கொள்ளவும்
பதிலளிநீக்குபலவும் கற்றுப் பயன்தனைப் பெறவும்
வையகம் அறிந்திட வைத்த இடத்தில்
கையகம் பற்றிடக் காட்டிடும் கணினி!
கலியுகக்கணினி ..! ரசிக்கவைத்தது ..பாராட்டுக்கள்..!
தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும்
நீக்குமிக்க நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா.
கணினியும் கணபதியும்.... நல்ல கவிதை சகோ.... வாழ்த்துகள்....
பதிலளிநீக்குத.ம. 5
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி நாகராஜ் ஜி.
வித்தியாசமான ஒப்பீடு...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நீக்குமிக்க நன்றி சங்கவி.
அருமையான கவிதை
பதிலளிநீக்குஒப்பிட்டவிதமும் சொல்லாட்சியும் அருமை
வாழ்த்துக்கள்
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி இரமணி ஐயா.
ஒப்பீட்டு கவிதை அருமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி சுரேஷ்.
வித்தியாசமான ஒப்பீட்டுக் கவிதை அருமை...
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி குமார்.
கணபதியும் கணினியும் ஒப்பீட்டுக் கவிதை அருமை தோழி.
பதிலளிநீக்குஅருமை அருமை!
பதிலளிநீக்குஇத்தனை அழகாய் இரண்டினையும் ஒப்பிட்டவிதம் மிகச்சிறப்பு!
ஆனால் ஒன்று தற்போது இந்த எலியை பல கணினிகளில் காணமுடிவதில்லை. எல்லாம் நவீனமயமாகிவிட்டது...:)
உங்கள் கற்பனை அற்புதம் தோழி! வாழ்த்துக்கள்!
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
நீக்குமிக்க நன்றி தோழி.
நன்றி இரமணி ஐயா.
பதிலளிநீக்குமாறுப்பட்ட சிந்தனையில் உதித்த ஒரு அற்புதமான கவிதை. பாராட்டுக்கள்
பதிலளிநீக்குதலைப்பை பார்த்து கலாய்க்க ஒரு பதிவு கிடைத்திருக்கிறதே என்று நினைத்து வந்த எனக்கு மிகவும் ஏமாற்றமே.
நான் கலாய்க்க ஒரு பதிவு எழுதாமாலா போய்விடுங்க...
மீண்டும் வருகிறேன்
இதே தலைப்பில் இன்னொரு சிந்தனை - என் வலைபதிவில் இங்கே
பதிலளிநீக்குhttp://kannaningeethai.blogspot.in/