நிலையாய் இருக்கும் என்றேநாம்
நெடிய
வாழ்வை எண்ணுகிறோம்!
வலையைப் போட்டே இழுக்கின்றான்!
வகையாய்
மாட்டி விடுகின்றோம்!
அலையாய் இன்பம் அடித்திருக்க
அமைதி யான
வாழ்க்கையினைக்
கலைத்துப் போட்ட கோலத்தைக்
கவலை பொங்க சொல்லிவிட்டாள்!
காதல் கொண்ட வாழ்வினிலே
கணவன்
என்றும் தெய்வம்தான்!
சேதம் இல்லா வாழ்வினிலே
சேர்ந்த
துன்பம் என்சொல்வேன்?
சாதல் கூட சிலநாளில்
சகித்து
வாழப் பழகிடலாம்!
பூத உடம்பில் உயிரிருந்தும்
பொல்லா
நிலையை என்சொல்வேன்?
அந்த செய்தி நானென்றும்
அறியா
மலேயே இருந்திருந்தால்
சொந்தம் கண்ட அனாதைபோல்
சுடரும்
முகமாய் இருந்திருப்பேன்!
வந்த செய்தி இதயத்தை
வலிக்கச்
செய்து விட்டதினால்
சிந்தை முழுதும் உன்நினைவாய்
சின்னத்
தனமாய் அழுகின்றேன்!
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
எதைத்தான்
சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
இதயம்
ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
துணிவாய்
நீயே சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
இதுவும்
கடந்து போகுமன்றே!
(கவலை கொண்ட தோழிக்குச் சமர்பணம்.)
அருணா செல்வம்.
26.07.2013
தோழியின் கவலை விரைவில் மாறட்டும்... எதுவும் கடந்து போகட்டும்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் அண்ணா.
நீக்குஎதுவும் கடந்து போகும்.
பதிலளிநீக்குநன்றி விமலன் ஐயா.
நீக்குபூத உடம்பில் உயிரிருந்தும்
பதிலளிநீக்குபொல்லா நிலையை என்சொல்வேன்?//
இந்த நிலையும் மாறிடலாம்
கொண்டே வாழ்ந்திடலாம்
நன்றி கவியாழி ஐயா.
நீக்குவிரைவில் கவலை மறைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்...
பதிலளிநீக்குஉங்களின் வார்த்தை பலிக்கட்டும்.
நீக்குநன்றி சங்கவி.
நான் சோகமா இருக்கும்போது என் ஃப்ரெண்ட் என்னை தேற்ற அடிக்கடி சொல்லும் வார்த்தை இது. ரொம்ப நாள் கழிச்சு இன்னிக்கு நினைவில் வந்துட்டு.
பதிலளிநீக்குநல்ல நட்பை நினைத்தாலே
நீக்குசிலநேரம் கவலைகள் பறந்துவிடும்.
நன்றி தோழி
ஆறுதல் சொல்ல இப்படி ஒரு தோழமை இருந்தால்
பதிலளிநீக்குஆவது ஆகட்டுமென இருந்திடத்தோணும்...
இதுவும் கடந்து போகும்...
அழகிய ஆறுதல்மொழிக் கவிதை தோழி!
உங்கள் தோழமைகிடைத்த அந்தத் தோழமைக்கு ஆறுதல் கிடைக்கட்டும்!
“உங்கள் தோழமைகிடைத்த அந்தத் தோழமைக்கு ஆறுதல் கிடைக்கட்டும்!“
நீக்குஅப்படி அவருக்கு ஆறுதல் கிடைத்தால்... நம் தமிழுக்குத் தான் பெருமை.
நன்றி தோழி.
எல்லாம் கடந்து போகும் மாயமே..
பதிலளிநீக்குமாயம் தான்...!!
நீக்குநன்றி சசிகலா.
என்ன சொல்வேன் ஆறுதலாய்?
பதிலளிநீக்குஎதைத்தான் சொன்னால் ஆறிவிடும்?
இன்ன வார்த்தை என்றிருந்தால்
இதயம் ஏந்தி சொல்லிடுவேன்!
துன்பம் துடைக்க வார்த்தையில்லை!
துணிவாய் நீயே சொன்னஉரை!
என்றும் மனத்தில் வைத்துவிடு!
இதுவும் கடந்து போகுமன்றே!
------
இதுவும் கடந்து போகும்.... தோழியின் கவலை விரைவில் மாறும்.
துன்பம் துடைக்க வார்த்தையில்லை.. இதுவும் கடந்து போகும்.
பதிலளிநீக்குநன்றி விச்சு அவர்களே!
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
இதுவும் கடந்து போகுமென
ஈந்த கவிதை கண்ணுற்றேன்!
எதுவும் நம்மின் செயலில்லை!
எல்லாம் தலையின் எழுத்தாகும்!
மதுவும் தோற்கும் மலர்த்தமிழை
மனத்துள் கொண்டால் துயா்குறையும்!
உதவும் இறையே! என்றுருகி
உள்ளம் ஒன்றி ஓதிடுவோம்!
என் தோழியின் ஆறுதலுக்காக ஈந்த கவிதைக்கு
நீக்குமிக்க நன்றி கவிஞர்.
ஆறுதலாய் அன்பு வார்த்தைகளும் அன்னைத்தமிழின் இனிமையும் இருக்க, அரற்றும் மனம் சற்றேனும் அமைதி கொள்ளாதோ? தோழமைக்குரியவரின் துன்பம் விரைவில் மாறட்டும். மனம் கவர்ந்த கவிதை அருணாசெல்வம்.
பதிலளிநீக்கு“தோழமைக்குரியவரின் துன்பம் விரைவில் மாறட்டும். “
நீக்குஉங்களின் ஆறுதல் வார்த்தையும் அவரைத் தேற்றட்டும்.
நன்றி கீதமஞ்சரி அக்கா.
சொந்தம் கண்ட அனாதைபோல்
பதிலளிநீக்குசுடரும் முகமாய் இருந்திருப்பேன்!
எளிமை, இனிமை, உவமை! வாழ்த்து!
கவலையுடன் எழுதும் கவிதைகளிலும்
நீக்குஇப்படியான கருத்துக்கள் தானாக வந்து விழுந்து விடுகிறது.
நன்றி புலவர் ஐயா.
தோழியின் கவலை விரைவில் அகலட்டும்.....
பதிலளிநீக்குஇதுவும் கடந்து போகும்..... நல்ல கவிதை.
த.ம. 11
“தோழியின் கவலை விரைவில் அகலட்டும்.....“
நீக்குஉங்களின் வார்த்தையும் அவர்களை ஆறுதல் படுத்தட்டும்.
நன்றி நாகராஜ் ஜி.
வணக்கம் அருணா.சுகம்தானே.நீண்ட நாளுக்குக்குப்பிறகு நான் !
பதிலளிநீக்குஇப்படி ஒரு தோழமை இருந்தாலே போதும்.எல்லாமே கடக்கும் !
வணக்கம் என் இனிய தோழி ஹேமா.
நீக்குசுகமாக இருக்கிறேன்.
நீண்ட நாள் கடந்து என் வலைப்பக்கம் வந்ததற்கு
மிக்க நன்றி.
“இப்படி ஒரு தோழமை இருந்தாலே போதும்.எல்லாமே கடக்கும் !“
கவலையில் தோள் கொடுப்பது தானே தோழமைக்கே சிறப்பு.
நன்றி தோழி.
கவிதை கவலையை ஆற்றக்கூடிய வல்லமை படைத்தது... பகிர்வினிற்கு நன்றி...
பதிலளிநீக்குவாங்க தங்கம் பழனி.
நீக்குநீங்களும் ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள்.
வருகைக்கு நன்றி.
“கவிதை கவலையை ஆற்றக்கூடிய வல்லமை படைத்தது... “
நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால் என் தோழியின் கவலை சற்று ஆறட்டும். நன்றி.