பாடலில் ஒரு பொருளை எடுத்து அதற்கு சிறந்தவைகளை
உருவகம் செய்து, பின்பு அவற்றாலேயே உருவகமாக்கி உரைப்பது “சிறப்பு உருவகம்“ எனப்படும்.
.
உ.
ம்
பச்சைப்
பசுமையைப் பட்டுடலில் போர்வையாய்
உச்சிநீர்
வெள்ளி உருகோட – இச்சையற்றோர்
வாழும்
குடிலாய் மலைக்கூடு எவ்வுயிர்க்கும்
சூழும்
நலங்கள் சுடர்ந்து !
பொருள்
– தனது பட்டுப்போன்ற உடலில் பச்சைப் பசுமையான மரம் செடிக்கொடிகளைப் போர்த்திக் கொண்டு,
உச்சியிலிருந்து வழியும் நீர்வீழ்ச்சி வெள்ளியைப் போல் உருகியோட, இச்சையை அற்றவர்க்கு
வாழும் இடமாகவும், மற்ற எல்லா உயிர்களுக்கும் நலம் தருவதாகவும் மலையாகிய கூடு இருக்கிறது.
பாடலில் பச்சைப் போர்வை, உச்சிநீர் வெள்ளி, குடில்
என்று மலையின் சிறப்புகளை உருவகம் செய்து வந்தும், அந்த மலையானது மற்ற உயிர்களுக்கு
வாழும் இருப்பிடமாக இருக்கிறது என்று சிறப்புடன் உருவகிப்பதால் இது “சிறப்பு உருவகம்“
ஆகியது.
.
பாவலர்
அருணா செல்வம்
24.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக