பாடலில்
வரையறையின்றி ஒன்றிற்கு ஒன்றை உவமைக் கூறியப்பின், அந்த
உவமைக்கு வேறொன்று இருந்தால் அதுவும் இதற்கு ஒக்கும் என்று கூறுவது “அநியம உவமை“ ஆகும். (அநியமம் - வரையறையின்றி உரைப்பது)
உ. ம்
அத்தைமகள்
பல்காட்ட ஆசைமனம் துள்ளிவிழும்
சித்தத்தில்
சிக்கும் சிரிப்பொலி! – முத்தே
அவள்பற்கள்! அன்றி அதுபோல உள்ள(து)
எவையுமே ஒக்கும்
இதற்கு!
பொருள் – அத்தைமகள் பற்களைக் காட்டிச் சிரிக்கும் ஒலியால் ஆசை மனமானது
துள்ளிக் குதிக்கும். அவளின் பற்கள் முத்துதான். அது இல்லையென்றாலும் முத்தை ஒத்திருக்கும் எவையுமே அவளின் பற்களுக்கு
ஒக்கும் என்றதால் இது “அநியம உவமை“
ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
07.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக