பாடலில் ஒரு பொருளை, வேறு சில உவமைகளைச் சொல்லி இந்த இந்த காரணங்களால் ஒப்பாகக் கூற என் மனது
விரும்புகிறது என்று சொல்வது “இயம்புதல் வேட்கை அணி“ ஆகும்.
வேட்கை – விரும்புதல், ஆசைப்படுதல்
உ. ம்
பொன்னிதழ்
பூக்கள்போல் பூத்து விரிந்தலும்
இன்தேன்போல் உண்ண
இனித்தலும்! – மென்உணர்வும்
வண்ணமலர்
இப்பெண்ணின் வாயிதழ் என்றியம்ப
எண்ணிமனம்
வேட்கிறதே இன்று!
பொருள் – பொன்னான இதழ்கள் உள்ள பூக்கள் பூப்பது போல உதடுகள்
விரிவதாலும், பூக்களில் சுரக்கும் இனிய தேனைப்போல் உதடுகள்
இனிப்பதாலும், மலர்களில் உள்ள மென்மையைப் போலவும் இவளின்
உதடுகள் இருப்பதால், இவளின் உதடுகளை மலர் என்றே எடுத்துச்
சொல்ல எண்ணி என்மனமானது விருப்பப்படுகிறது இன்று.
இப்பாடலில் எடுத்துக்
கூறப்பட்ட பொருள் பெண்ணின் உதடு. உவமை மலர். மலர்தலும், இனித்தலும், மென்
உணர்விலும் இரண்டும் ஒத்துள்ளது. அதனால் மலரும், இவளின் உதடுகளும் ஒன்று தான் என்று எடுத்துச் சொல்ல மனம் விரும்புகிறது
என்றதால் இது “இயம்புதல் உவமை“ என்றாகியது.
.
பாவலர் அருணா செல்வம்
08.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக