பாடலில் ஒரு பொருளுக்குப்
பல உவமைகளைக் காட்டிப் பாடுதல் “பல பொருள் உவமை“
ஆகும்.
உ. ம்
முத்தும் பளிங்கும்
முதிர்ந்த அரும்புகளும்
கொத்தான விண்மீனின்
கூட்டமும் – மொத்தமாய்ச்
சேர்ந்தமர்ந்து விட்டதுபோல்
சின்னவளின் செவ்வாயுள்
சீர்பற்கள் மின்னும்
சிரிப்பு!
பொருள் – சின்னப்பெண்னவள் செவ்வாய் திறந்து சிரிக்கும் போது மின்னும் பற்களானது
முத்துக்களும், பளிங்குக் கற்களும்,
மொட்டவிழா முதிர்ந்த மலர் அரும்புகளும், வானத்தில்
உள்ள விண்மீன் கூட்டமும் மொத்தமாய் வந்து அங்கே அமர்ந்தது போல் உள்ளது.
பாடலில் வந்திருக்கும் பொருள்
பற்கள். அப்பற்களுக்கு முத்து, பளிங்கு,
அரும்பு, விண்மீன் என பல பொருட்களையும் உவமையாகக் கூறப்பட்டு வந்துள்ளதால் இது “பால பொருள் உவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
09.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக