பாடலில்
ஆகிய என்ற மாட்டேற்றுச் சொல் தொகையாகவும், விரிந்தும் வருவது “தொகைவிரி உருவகம்“ எனப்படும்.
உ.
ம்
பாம்பு
படுக்கையா, பாய்அலை ஊஞ்சலா,
ஓம்புகரம்
சாய்மரமாய், ஓய்வெழில் – மேம்படும்!
மேனிக்
கரியவனின் மௌனமொழி மின்னுலகில்
வானின்
மழையமுதின் வார்ப்பு!
பொருள்
– பாம்பினைப் படுக்கையாகவும், பாயும் அலைகளை ஊஞ்சலாகவும், காத்திடும் கைகள் சாய்மரமாகவும்,
ஓய்வெடுக்கும் எழில் உயர்வானது. கருமை மேனியை உடைய திருமாலின் மௌனமாகிய மொழியானது வாழுலகில்
வானிலிருந்துபெய்யும் மழையாகிய அமுதமாகும்.
பாடலில் படுக்கையாக, ஊஞ்சலாக, சாய்மரமாக, என்பதில்
ஆகிய, ஆ என விரிந்தும், மொனமொழி, மழையமுது என்பவை தொகையாகவும் உருவகம் வந்துள்ளதால்
இது “தொகைவிரி உருவகம்“ ஆகியது.
.
பாவலர்
அருணா செல்வம்
18.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக