பாடலில் தான் ஐயுற்றதை உண்மை
தெரிந்து, தெளிந்து துணிந்து உரைப்பது “தெரிதருதேற்ற உவமை“ ஆகும். உண்மையுவமை
என்பது ஐயமின்றி சொல்வது. ஆனால் இது ஐய உணர்வு காரணமாக
சொல்வது.
உ. ம்
கார்மேகம் என்றால்
கலைந்து பொழிந்துவிடும்!
தேர்நடை என்றானால் சென்றுவிடும்! – சீர்சுமந்த
பெண்ணின்
நடையழகும் பின்தொங்கும் கூந்தலும்
உண்மையென்று
நெஞ்சே உணர்!
பொருள் – கார்மேகம் என்றால் கலைந்து மழையைப் பொழிந்து விடும். தேரின் நடை என்றால் இந்நேரம் அங்கிருந்துச் சென்றிருக்கும். அப்படிச் செய்யாத இந்தப் பெண்ணின் நடையழகும் கார்கூந்தலும் உண்மைதான்
என்று ஐயமின்றே நெஞ்சே உணர்வாயாக.
கூந்தலைக்கண்டு இது கார்மேகமோ என்றும் நடையைக்கண்டு தேர் அசைவோ என்று முன்னர் ஐயுற்றுப்
பின்னர், அது கார்மேகமாக இருந்தால்
கலைந்து மழையாக பொழிந்திருக்கும். தேர்ச் செல்லும் அசைவாக இருந்தால் இந்நேரம் இவ்விடத்தை விட்டு நகர்ந்திருக்கும்.
அப்படி இல்லாததால் இது அவளின் கூந்தல் தான் அவளின் நடைதான், என்று முன்பு ஐயுற்று பின்பு தெளிந்து கூறியதால் இது “தெரிதருதேற்ற உவமை“ ஆகியது.
.
பாவலர அருணா செல்வம்
07.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக