ஒரு பொருளுக்கு
ஒப்பாகாத அல்லது கூடாத ஒன்றை அப்பொருளுக்கு உவமையாகக் கூறுவது “கூடா உவமை“ ஆகும்.
மலர்தரும் சூடும், வளர்தழலின் இன்பும்,
உலர்நிலத்தில்
வாழும் உழவும் – நலமாய்
நடந்ததுபோல்
உள்ளது நாதாநீ யின்றிக்
கடந்துவிட்ட காலப்
பொழுது!
பொருள் – அன்பனே! நீ என்னுடன் இல்லாமல் இருந்த
கடந்து போன காலங்கள், மலர் தரும் சூடும்,
வளர்ந்து எரியும் நெருப்பின் இன்பமும், ஈரமின்றி
உலர்ந்து காய்ந்து போன நிலத்தில் செய்யும் பயிர்த்தொழிலும் நலமுடன் நடந்தது போல்
உள்ளது. இது தலைவனிடத்தில் தலைவி சொல்லிய கூற்று.
மலரானது சூட்டினைத் தராது,
செந்தழலானது இன்பத்தைத் தராது, காய்ந்த
நிலத்தில் பயிர் விளையாது. ஆனால் இவையெல்லாம் நடந்தது போல்
உள்ளது என்று கூறியதால் இது “கூடா உவமை“ ஆகியது.
.
பாவலர் அருணா செல்வம்
11.01.2019
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக